பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்யும் போது மக்கள் மத்தியில் பணப்புழக்கத்திற்கு எவ்விதமான பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டதற்கான நோக்கம் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் கிளீன் நோட்டு பாலிசி கீழ் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ஆர்பிஐ வெளியிட்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மக்களை வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக மாற்று மதிப்புக்கொண்ட ரூபாய் நோட்டுகளை பெற வலியுறுத்தியது.

ஆர்பிஐ கொடுத்த காலஅவகாசம் பல பிரச்சனைகளை தீர்த்து மட்டும் அல்லாமல் வெறும் 2 மாதத்தில் சந்தையில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 88 சதவீதம் திரும்ப வங்கி அமைப்பிற்குள் வந்துள்ளது என ஆர்பிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதேவேளையில் சந்தையில் போதுமான பணப்புழக்கத்திற்கு நிதி உட்செலுத்தப்பட்டு உள்ளது.
ஜூலை 31 ஆம் தேதி தரவுகள் படி ஆர்பிஐ சுமார் 3.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் திரும்பபெறப்பட்டு உள்ளது. இப்படி பெறப்பட்ட பணத்தில் 87 சதவீதம் வங்கி வைப்பு நிதியாக அல்லது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. வெறும் 13 சதவீதம் மட்டுமே மாற்று ரூபாய் நோட்டுகளாக அளிக்கப்பட்டு உள்ளது.
மார்ச் 31 ஆம் தேதி தரவுகள் படி சுமார் 3.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது, மே 19 (2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவதாக ஆர்பிஐ வெளியிட்ட நாள்) ஆம் தேதி இது 3.56 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது. தற்போது 3.14 லட்சம் ரூபாய் திரும்பபெறப்பட்ட நிலையில் எஞ்சியுள்ளது வெறும் 42000 கோடி ரூபாய் மட்டுமே.
ஆர்பிஐ விபரங்கள் படி ஒரு நாளுக்கு சராசரியாக 1.6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையை ஜூலை மாதம் திரும்ப பெறப்பட்டு உள்ளது. 2000 ரூபாய் தொகையை திரும்ப பெறப்படுவது மூலம் ஆர்பிஐ வங்கிகளுக்கு கூடுதல் நிதி தொகையை அளித்துள்ளது, இதன் மூலம் வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது தடுக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications