PPF கணக்கு வைத்திருப்பவர் திடீரென இறந்தால் பணம் என்னவாகும்? தொடர்ந்து வட்டி கிடைக்குமா? முழு விவரம்!

அரசு திட்டங்களில் பலரும் விரும்பி முதலீடு செய்யும் திட்டம் என்றால் அது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். PPF என்று சொல்லப்படுகிற இந்தத் திட்டத்தில் ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர். மத்திய அரசின் நேரடி பார்வையில் செயல்படும் திட்டம் என்பதால் உங்களுடைய முதலீட்டுக்கு எந்த பாதிப்பும் வராது. அதனாலோ என்னவோ தமிழகத்தில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மீது மக்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. இப்படி இருக்கையில் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர் துரதிஷ்டவசமாக இறந்து விட்டால் அந்த பணத்திற்கு என்ன நடக்கும்? கணக்கை அவருடைய குடும்பத்தினர் தொடர முடியுமா? என்ற பல கேள்விகளுக்கு இந்தப் பதிவில் விடையைப் பார்ப்போம்.

PPF கணக்கு வைத்திருப்பவர் திடீரென இறந்தால் என்ன நடக்கும்?: PPF கணக்கு வைத்திருப்பவர் திடீரென இறக்கும் பட்சத்தில் அவருடைய கணக்கு கிளோஸ் செய்யப்படும். மேலும் இறந்தவர் கணக்கில் உள்ள மீதித் தொகை நாமினி அல்லது அவர் நியமித்த சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும். ஆனால் அதற்கு அவர் எங்கு முதலீடு செய்திருக்கிறாரோ? அங்கு உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

உதாரணமாக வங்கியிலோ அல்லது அஞ்சல் அலுவலகத்திலோ நடந்ததைக் கூறி ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். அப்படி செய்தால் இறந்தவர் நியமித்த நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசிடம் தொகை ஒப்படைக்கப்படும். பின்னர் இறந்தவருடைய PPF கணக்கு நிரந்தரமாக மூடப்படும்.

PPF கணக்கு வைத்திருப்பவர் திடீரென இறந்தால் பணம் என்னவாகும்?

இறந்தவருடைய PPF கணக்கை நீட்டிக்க முடியுமா?: ஒரு வேலை கணக்கு வைத்திருந்தவரின் வாரிசுதாரர் PPF கணக்கைத் தொடர நினைத்தாலும், அவ்வாறு செய்ய முடியாது. அதேபோல இறந்தவரின் பெயரிலிருந்து குடும்ப உறுப்பினரின் பெயருக்கோ அல்லது நாமினி பெயருக்கோ கணக்கை மாற்றவும் முடியாது. சரி PPF கணக்கை நீட்டிக்கலாமா என்று தானே கேட்கிறீர்கள்.. அதுவும் செய்ய முடியாது.

வட்டி கிடைக்குமா?: நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசிடம் இறந்தவரின் பணம் ஒப்படைக்கப்படுவதற்கு முந்தைய மாதம் வரையில், அவருடைய முதலீட்டு தொகைக்கான வட்டி தொடர்ந்து வழங்கப்படும்.

எத்தனை நாமினியை நியமிக்கலாம்?: PPF கணக்கு வைத்திருக்கும் ஒருவர் நான்கு நாமினி வரை நியமிக்கலாம். ஒருவேளை கணக்கு வைத்திருப்பவர் விருப்பப்பட்டால் இடையில் நாமினியை மாற்றிக் கொள்ளும் அனுமதியும் உண்டு. இதற்கு முன்னர் விவரங்களை மாற்றி வேறு ஒருவரை நாமினியாக போட வேண்டும் என்றால் அதற்கு 50 ரூபாய் கட்டணத்தை அஞ்சல் அலுவலகங்கள் வசூலித்தன. ஆனால் இப்போது இந்தக் கட்டணம் கிடையாது.

பணத்தை திரும்ப பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?: பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகு அவருடைய ஆவணங்களை எல்லாம் வழங்கினால் தான் பணத்தை பெற முடியும்.

டெத் சர்டிபிகேட்: பணத்தைப் பெற பிபிஎஃப் கணக்கு வைத்திருந்தவரின் இறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும்.

க்ளைம் ஃபார்ம்: கணக்கு வைத்திருந்தவரின் மறைவுக்குப் பிறகு பணத்தை திரும்பப் பெறுவதற்கு நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசுதாரர் ஃபார்ம் ஜி-யை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இதோடு கூடுதலாக நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசுதாரரின் அடையாளச் சான்றுகள், அவர் PPF கணக்கு வைத்திருப்பவருக்கு என்ன உறவு முறை என்பதற்கான சட்டப்பூர்வ வாரிசுரிமைச் சான்றிதழ், உயில் போன்றவற்றையும் வழங்க வேண்டும். தற்போது PPF திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு ஒரு முறை கணக்கு வைத்திருப்பவருக்கு கூட்டு வட்டியின் மூலம் வருமானத்தையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் வருடத்திற்கு 500 ரூபாயை கூட சேமிப்பாக செலுத்தலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+