உலகின் முன்னணி டெக் நிறுவனங்களின் தலைவர்கள், தொழிலதிபர்கள் வர்த்தகத்தில் அடைந்த வெற்றியைத் தாண்டி, அவர்களது பர்சனல் வாழ்க்கையில் ஏற்பட்ட சர்ச்சைகள் இப்போது பங்குச்சந்தையில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.
சமீபத்தில் என்விடியா ஜென்சன் ஹுவாங் விவகாரம் வெடித்த நாளில் இருந்து, இந்நிறுவனத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதில் முதலீட்டாளர்கள், இந்நிறுவன ஊழியர்கள் முதல் பலருக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

ஆனால் ஜென்சன் ஹுவாங் போல் கள்ளத் தொடர்பு விவகாரத்தில் சிக்கிய பல டெக் நிறுவனங்களின் தலைவர்கள் பதவி பறிபோன பின்பும் அவர்கள் தலைமை தாங்கிய நிறுவனப் பங்குகள் மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டுள்ளது.
1. ஜெஃப் பெசோஸ்
உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசானின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், லாரன் சான்செஸ் உடனான உறவு, பொதுவெளியில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது எல்லோருக்கும் நினைவிருக்கும்.
இதன் பின்பு அவரது மனைவி உடனான விவாகரத்தில் பெரும் பகுதி பங்குகளை இழந்தார். நிறுவனத்தின் நேரடி நிர்வாக பணியில் இருந்தும் ஜெஃப் பெசோஸ் வெளியேறினார். இந்த பிரச்சனைக்கு பின்பும் அமேசான் பங்குகள் சுமார் 213% உயர்ந்துள்ளது.
2. பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவருடன் கள்ள தொடர்பில் இருந்ததாக வெளியான தகவல் மூலம், இந்நிறுவனம் தனிப்பட்ட விசாரணை நடத்தியது. ஆனால் விசாரணைக்கு முன்பே அனைத்து நிர்வாக பொறுப்பில் இருந்தும் விலகினார்.
இதன் பின்பு மெலிண்டா கேட்ஸ் உடன் விவாகரத்து நடந்தது. தற்போது சத்ய நாடெல்லா தலைமையில், பில் கேட்ஸ் விவகாரத்திற்குப் பின் 114% உயர்ந்துள்ளது.
3. சேய் டே வோன்
தென்கொரியாவின் சிப் தயாரிப்பு நிறுவனமான SK hynix நிறுவனத்தின் தலைவரான சேய் டே வோன், திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததும், அதனால் இவரின் குடும்பத்தில் ஏற்பட்ட சர்ச்சைகள் அந்நாட்டு தொழிற்துறை அதிர வைத்தது. காரணம் எஸ்கே குரூப் தென்கொரியாவின் 2வது பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாகும்.
இந்த சம்பவத்திற்குப் பின் SK hynix நிறுவனத்தின் பங்கு விலை 3,563 சதவீதம் வரையில் உயர்ந்தது.
4. செர்ஜி பிரின்
உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் இணை நிறுவனரான செர்ஜி பிரின், கூகுள் நிறுவன ஊழியர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக வெளியான தகவல்கள் இவருடைய பர்சனல் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்டது.
செர்ஜி பிரின் அவரது மனைவியை விவாகரத்தும் செய்தார், நிறுவனத்தில் இருந்தும் வெளியேறினார். இதன் பின்னர் சுந்தர் பிச்சை தலைமையில் கூகுள் பங்குகள் 1,244 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதன் மூலம் நிறுவனத்தின் தலைவர் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பது பெரும் பிரச்சனையாக இருந்தாலும், இது தற்காலிகமானது மட்டுமே. புதிய தலைவரின் நியமனத்திற்குப் பின்பு வேகமாக வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்பதை 4 பெரிய நிறுவனங்கள் தற்போது முதலீட்டாளர்களுக்கு உதாரணமாக உள்ளது.
இப்படியிருக்கையில் என்விடியாவின் அடுத்த தலைவர் யார் என்பது தான் இப்போதைய கேள்வி.


Click it and Unblock the Notifications