திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு போன்றவை பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தற்போது திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மீண்டும் நந்தினி பிராண்டை நெய் சப்ளையராக நியமித்துள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் இந்தியாவில் உள்ள மிக பிரம்மாண்டமான கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயில் ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருமலை என்ற மலையில் அமைந்துள்ளது.
திருப்பதி கோவில் என்றாலே லட்டு எவ்வளவு பிரபலமானது என்பது அனைவருக்கும் தெரியும். அதோடு திருப்பதிக்கு செல்பவர்கள் ஒரு முறையாவது தங்கள் தலை முடியை காணிக்கையாக செலுத்தி வருவதை பார்த்திருப்போம். இதனால் ஆண்டுதோறும் திருப்பதியில் பல்லாயிரக்கணக்கான கிலோ முடிகள் சேகரிக்கப்படுகிறது. இந்த முடி எங்கே போகிறது? எதனால் திருப்பதிக்கு செல்பவர்கள் மூடி காணிக்கை செலுத்துகிறார்கள் என்பது தெரியுமா?

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் முடிதானம் செய்யப்படுவது ஏன்?: திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் முடி தானம் செய்யும் வழக்கம் நீண்ட காலமாக உள்ளது. இங்கு முடி காணிக்கை செலுத்துவதால் வெங்கடேசப் பெருமாளின் அருள் பூரணமாக கிடைத்து செல்வ செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. மேலும் இங்கு வழிபடும் பக்தர்களின் வாழ்வில் இருந்து எல்லாவிதமான தீமைகளும் எதிர்மறைகளும் நீங்கி மகிழ்ச்சி கிட்டும். அதோடு லட்சுமிதேவியின் பூரண ஆசீர்வாதமும் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
திருப்பதி கோவிலுக்கு தானமாக செலுத்தப்படும் முடி ஏலம் விடப்படுகிறது. இந்தியா டுடே அறிக்கையின்படி 2018-ஆம் ஆண்டில் திருப்பதி கோயிலின் பக்தர்கள் வழங்கிய மாதாந்திர முடி காணிக்கையை வைத்து நடந்த ஏலத்தின் மூலம் சுமார் 6.39 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஒவ்வொரு ஆண்டும் முதல் வியாழன் அன்று இந்த ஏலத்தை நடத்துகிறது. முடியின் வெவ்வேறு வகைகளைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வெளியான தகவல்களின்படி, 2018-ஆம் ஆண்டில், பல்வேறு வகை முடிகளின் மூலம் சுமார் 1,87,000 கிலோ முடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து. 10,000 கிலோ முடி தரமானதாக இருந்தது, இந்த 600 கிலோ முடி ஒரு கிலோ ரூ.22,494 என்ற விலையில் விற்கப்பட்டது. இதில் மொத்தம் ரூ.1.35 கோடி வசூலானது.
தரம் குறைந்த சுமார் 46,100 கிலோ முடிக்கு சாயம் பூசப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூ.17,223 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த வகையில் 2400 கிலோ முடி விற்பனை செய்யப்பட்டு ரூ. 4.13 கோடி வசூல் செய்யப்பட்டது.
அதேபோல மூன்றாம் தர முடி சுமார் 30,300 கிலோ இருந்தது. அதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.2833 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த முடி 500 கிலோ விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் ரூ.14.17 லட்சம் ரூபாய் வசூலானது. மறுபுறம் 200 கிலோ நான்காம் தர முடி இருந்தது. அது ஒரு கிலோவுக்கு ரூ.1195 என்ற விலையில் நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் மூலம் 2.39 லட்சம் வசூலானது.
இதேபோல், 193 லட்சம் கிலோ ஐந்தாம் மற்றும் கடைசி தர முடி ஒரு கிலோ ரூ.24 வீதம் விற்பனை செய்யப்பட்டு, ரூ.46.32 லட்சத்துக்கு விற்பனையானது. 6,900 கிலோ வெள்ளை முடி ஒரு கிலோ ரூ.5462-க்கு விற்பனை செய்யப்பட்டு ரூ.27.31 லட்சம் வசூலானது.
ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சுமார் 500 முதல் 600 டன் முடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த செயல்முறையின் படி, தானம் செய்யப்பட்ட முடி முதலில் வேகவைக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. கழுவி உலர்த்திய பிறகு, சேமிப்பிற்காக பெரிய கிடங்குகளுக்கு அனுப்பப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்த ஏலத்திற்கு முன் முடியை பல்வேறு வகைகளாக வகைப்படுத்துகிறது. அதன்படி, 5 அங்குலங்கள் முதல் 31 அங்குலங்கள் வரையிலான முடியை 5 பிரிவுகளாக வகைப்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த ஏலத்தின் மூலம் நல்ல தொகையை ஈட்டுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications