EPFO: இறப்புக்குப் பின் ஒருவரின் PF தொகை என்னவாகும்? உறவினர்கள் செய்ய வேண்டியது என்ன?

ஊழியர்களுக்கு வயதான காலத்தில் உதவும் வகையில், இந்திய அரசு கொண்டு வந்த பொன்னான திட்டம் தான் EPF எனப்படும் வருங்கால வைப்பு நிதி. ஈபிஎஃப்ஓ (EPFO) அமைப்பு இதனை நிர்வகிக்கிறது. ஊழியர் மற்றும் முதலாளி இருவரின் பங்களிப்புகளுடன். PF கணக்கு வைத்திருப்பவர்கள் திருமணங்கள் அல்லது மருத்துவ அவசரங்கள் போன்ற பல்வேறு தனிப்பட்ட தேவைகளுக்காக பணத்தை எடுக்க முடியும் என்றாலும், கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், இந்த தொகைக்கு என்ன ஆகும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இந்தப் பதிவில் அதன் விவரங்கள் குறித்து பார்ப்போம்.
நாமினி PF தொகையைப் பெறுவார்: PF கணக்கு வைத்திருப்பவருக்கு மரணம் ஏற்பட்டால், EPFO ​​விதிகளின்படி, கணக்கில் உள்ள முழு தொகையும் நியமிக்கப்பட்ட நாமினிக்கு மாற்றப்படும். பொதுவாக, இந்த நாமினி PF கணக்கில் பதிவு செய்யப்பட்டவராக இருக்க வேண்டும்.

 EPFO: இறப்புக்குப் பின் ஒருவரின் PF தொகை என்னவாகும்? உறவினர்கள் செய்ய வேண்டியது என்ன?

நாமினி பின்னர் அந்தத் தொகைக்கான டெத் கிளைம்-ஐ (Death Claim) தாக்கல் செய்யலாம். இதைச் செய்ய, நாமினி தபால் அலுவலகங்களில் அல்லது EPFO-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் டெத் கிளைம் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

படிவம் 20: PF கணக்கு வைத்திருப்பவர் இறந்தவுடன், நாமினி படிவம் 20-ஐ பெற்று பூர்த்தி செய்து, கணக்கு வைத்திருப்பவரைப் பற்றிய விரிவான விவரங்களை அளித்து, அதைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவத்தை முதலாளியும் வழங்கலாம். அதாவது, இறந்த PF கணக்கு வைத்திருப்பவர் கடைசியாகப் பணியாற்றிய நிறுவனம்.

தேவையான அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்தவுடன், படிவம் சமர்ப்பிக்கப்பட்டு, நாமினிக்கு அவர்கள் வழங்கிய தொலைபேசி எண் மூலம் இறந்தவரின் PF தொகைக்கான கிளைம் ஸ்டேட்டஸ் குறித்து அறிவிக்கப்படும். கிளைம் செயல்முறைக்குப் பிறகு, நாமினியின் வங்கிக் கணக்கிற்கு இறந்தவரின் PF தொகை அனுப்பப்படும்.

தேவையான ஆவணங்கள்: PF டெத் கிளைம் கோரிக்கையைச் செயல்படுத்த, நாமினியிடம் PF கணக்கு எண், அவர்களின் விவரங்களான பெயர், முகவரி, அடையாள அட்டை மற்றும் மொபைல் நம்பர், டெத் கிளைம் கோரிக்கை படிவம், PF கணக்கு வைத்திருப்பவரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் PF கணக்கு வைத்திருப்பவரின் பாஸ்புக் போன்ற முக்கியமான ஆவணங்கள் இருக்க வேண்டும். எந்த நாமினியும் பட்டியலிடப்படவில்லை என்றால், இறந்தவரின் PF தொகை சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும்.

இறப்புக்குப் பின்பு ஒருவரின் ஆதார் கார்டை என்ன செய்வது?: இறந்தவருடைய ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பிற முக்கியமான ஆவணங்களை பத்திரமாக வைத்திருப்பது முக்கியம். ஏனெனில் அதன் பின் அவை அடையாளத் திருட்டு அல்லது மோசடி சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படலாம்.

எனவே ஆதார் கார்டை பயோமெட்ரிக் லாக் செய்து வைக்கலாம். உங்களுக்கு தற்போது ஒரு சந்தேகம் வரலாம். எப்படி அனைத்து விவரங்களையும் ஆதார் கார்டில் அப்டேட் செய்கிறோமோ? அதே போல ஒருவர் இறந்து விட்டால் அதையும் அப்டேட் செய்யலாமா? என்று.. ஆனால் ஆதார் கார்டில் அப்படி செய்ய முடியாது. உங்களால் அவருடைய ஆதார் கார்டை பயோமெட்ரிக் லாக் செய்து வைக்க முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+