இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு (MPC) மீண்டும் ரெப்போ விகிதத்தை 6.5% ஆக வைத்திருக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்ச்சியாக 11வது கூட்டமாக ஓரே ரெப்போ விகிதம் நடைமுறையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவு இந்தியாவில் வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ரெப்போ விகிதம் என்பது வணிக வங்கிகள் தங்கள் கடன் விகிதங்களை நிர்ணயிப்பதற்கான முக்கிய அளவுகோலாகும். RBI ரெப்போ விகிதத்தை மாற்றிமின்றி 6.5 சதவீதமாக வைத்திருக்கும் போது, பொதுவாக வங்கிகளும் வீட்டு கடன்களின் வட்டி விகிதங்களை மாற்றாது.

ரெப்போ விகிதத்தை அடிப்படையாக கொண்டு தான் வங்கிகள் வீட்டுக் கடன், கார் லோன், பைக் லோன், தனிநபர் கடன் என அனைத்தையும் வழங்குகிறது. இந்த நிலையில் தான் 11வது முறையாக ஆர்பிஐ வட்டி விகிதங்கள் மாற்றாமல் அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் அவர்களின் மாத EMI மாறாமல் இருக்கும். இதேபோல் புதிதாக வீட்டு கடன் பெற திட்டமிடுபவர்களுக்கு, நிலையான வட்டி விகித சூழல் ஈஎம்ஐ தொகையில் உறுதிப்பாட்டை வழங்கலாம்.
இருப்பினும், வங்கிகள் தங்கள் தனிப்பட்ட நிதி செலவு மற்றும் அபாய மதிப்பீடுகள் அடிப்படையில் வட்டி விகிதங்களை அதிகரிக்கலாம். சமீபத்தில் பெரும்பாலான வங்கிகள் நிதி திரட்டும் நோக்கத்துடன் பல முயற்சிகளை மேற்கொண்டது. இந்த நிலையில் வங்கிகள் ஆர்பிஐ முடிவுகளுக்கு பின்பு தனது வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த முடிவு ஒவ்வொரு வங்கிக்கும் மாறுப்படும்.
RBI ரெப்போ விகிதத்தை பராமரிக்க வேண்டும் என்ற முடிவு பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு வங்கிகள் தான் அதன் முடிவை எடுக்கும். ஆர்பிஐ வட்டியை குறைத்தால் வங்கிகள் வட்டியை குறைக்க வேண்டும் என்ற அவசியம் துளியும் கிடையாது. எனவே வீட்டு கடன் வாங்கும் போது நிதி ஆலோசகர்களுடன் கலந்தாலோசிப்பது நல்லது.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நிறைவுறும் நிலையில், அவரது மறு நியமனம் குறித்து மத்திய அரசு இதுவரையில் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த முறை பிரதமர் அலுவலகம் சுமார் 1 மாதம் முன்னரே பதவி காலம் நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
இதனால் சக்திகாந்த தாஸ்-ன் கடைசி MPC கூட்டமாக இது இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications