இந்தியாவில், நாம் பல்வேறு காரணங்களுக்காக வரிகள் செலுத்துகிறோம். ஜிஎஸ்டி, டிடிஎஸ், வருமான வரி மற்றும் பிற மறைமுக வரிகள் என நாம் ஈட்டும் வருமானத்தில் சுமார் 35 முதல் 40 சதவீதம் வரியாக செலுத்துகிறோம். இது ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள குடிமக்கள் செலுத்தும் வரிக்கு சமமானது. ஆனால், நாம் செலுத்தும் வரிகளுக்கு ஈடாக நமக்கு நன்மைகள் கிடைக்கிறதா..? என்ற கேள்வி எழுகிறது.
இந்தியாவில் 6%-க்கும் குறைவானவர்களே வருமான வரி தாக்கல் செய்கின்றனர். அவர்களில், சுமார் 2% மட்டுமே குறிப்பிடத்தக்க அளவு வரியை செலுத்துகின்றனர். இதன் காரணமாக, சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் தான் ஒட்டுமொத்த அரசாங்க இயந்திரத்தையும் தாங்கி நிற்கின்றனர். ஆனால், ஏழைகள் நேரடியாக எந்த வரியும் செலுத்துவதில்லை.

மாறாக, இலவச உணவு தானியங்கள், மானிய விலையில் எரிபொருள், பொது சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அரசாங்க உதவிகளை பெறுகின்றனர். மறுபுறம், மிகப் பெரிய பணக்காரர்களும், பெருநிறுவனங்களும் சிக்கலான வரிவிலக்குகள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளை பயன்படுத்தி, தங்கள் வரி விகிதங்களை குறைத்துக் கொள்கின்றனர்.
மத்திய அரசு வசூலிக்கும் ஒவ்வொரு 100 ரூபாயும் எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பதைப் பார்த்தால், 42 ரூபாய் மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. மீதமுள்ள தொகை, பழைய கடன்களுக்கான வட்டி (20 ரூபாய்), பாதுகாப்பு (5 ரூபாய்), மானியங்கள் (9 ரூபாய்), மத்திய அரசின் திட்டங்கள் (4 ரூபாய்) மற்றும் ஓய்வூதியம் (6 ரூபாய்) ஆகியவற்றுக்கு செலவிடப்படுகிறது.
மத்திய அரசு வசூலிக்கும் வரி மாநிலங்களுக்கிடையே எவ்வாறு மறுபங்கீடு செய்யப்படுகிறது என்பதைப் பார்த்தால் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் செலுத்தும் வரி விகிதத்தை விட குறைவாகவே பெறுகின்றன. அதேசமயம், பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் அதிக தொகையை பெறுகின்றன.
அதாவது, பெங்களூரில் நீங்கள் செலுத்தும் வரி, பட்னாவில் பள்ளிகளை கட்டவும், மும்பையில் செலுத்தும் வரி, கோரக்பூரில் மருத்துவமனைகளை கட்டவும் உதவுகிறது. இந்த சூழலில், வரி இல்லாத இந்தியா எப்படி இருக்கும் என்று 3 விதமான கற்பனையான நிலைகளை தற்போது பார்க்கலாம்.
அமெரிக்க மாதிரி (The American Model) : இந்த மாதிரியில், வருமான வரி இருக்காது. ஆனால், ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு நகரமும் தங்கள் சொந்த வரிகளை விதிக்கும். உதாரணமாக, மும்பை 20% வரி விதிக்கலாம். ஆனால் பீகாரில் உள்ள ஒரு கிராமம் 2% மட்டுமே வரி விதிக்கலாம். இதனால், மக்கள் குறைந்த வரி உள்ள பகுதிகளுக்கு குடிபெயரத் தொடங்குவார்கள். இது 10 முதல் 15 மிகப்பெரிய நகரங்களை மட்டும் உருவாக்கும். மீதமுள்ள பகுதிகள் வளம் குன்றிய இடங்களாக மாறிவிடும்.
துபாய் மாதிரி (The Dubai Model) : இதில் வரி இருக்காது. ஆனால், அரசாங்கம் அனைத்து நிலங்கள் மற்றும் வளங்களுக்கு உரிமையாளராக இருக்கும். நீங்கள் சொத்துக்களை வாங்க முடியாது. 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு மட்டுமே எடுக்க முடியும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் இருக்கும். உதாரணமாக, ஓட்டுநர் உரிமம் ரூ.50,000, வணிக அனுமதி ரூ.10 லட்சம், இந்தியாவுக்குள் நுழைவதற்கு ரூ.5,000 என இருக்கலாம். இதில், அரசாங்கம் சேவைகளை விற்கும் ஒரு பெருநிறுவனம் போல் செயல்படும்.
சோமாலியா மாதிரி (The Somalia Model) : இது மிகவும் ஆபத்தான நிலை. வரி இல்லை என்றால் அரசாங்கம் இல்லை என்று அர்த்தம். தனியார், நிலப்பரப்பை கட்டுப்படுத்தும். உள்ளூர் ஆட்களுக்கு பாதுகாப்பு பணம் கொடுக்க வேண்டியிருக்கும். பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு நாணயங்கள் புழக்கத்தில் இருக்கும். பயணம் தடைபடும், இந்தியா 500 நிலப்பிரபுத்துவ ராஜ்யங்களாக மாறக்கூடும்.
வரலாற்றிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. 2015ஆம் ஆண்டில் கிரேக்க நெருக்கடியின் போது, ஓய்வூதியங்கள் நிறுத்தப்பட்டன. மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. 2001ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவில், காவலர்கள் பணிக்கு வரவில்லை, பள்ளிகள் மூடப்பட்டன. வரி இல்லாத சூழ்நிலையில், செயல்படும் காவல் படை, குப்பைகளை சேகரிப்பவர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ராணுவம் என எதுவும் இருக்காது. எனவே, வரி செலுத்துவதற்கான மாற்று வரி இல்லாத சொர்க்கம் அல்ல, மாறாக வரி இல்லாத நாடு என்பது ஒரு பேரழிவு. வரி செலுத்துவதா அல்லது நாடு இல்லாமல் போவதா என்ற கேள்விக்கு, வரியுடன் கூடிய ஒரு நாடுதான் சிறந்த தேர்வாக இருக்கும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications