2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். நேற்று துவங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி முழுப் பட்ஜெட் என்பதால் அனைத்து தரப்பினருக்கும் சாதகமான அறிவிப்பை வெளியிட வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதனால் மக்கள் மத்தியிலும் அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் வருமான வரியில் கிடைக்கப்போகும் முக்கியமான அறிவிப்பு என்னவாக இருக்கும்.
மாத சம்பளகாரர்கள்
மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு 2022 ஆம் ஆண்டு முதல் பல அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பால் நடுத்தரப் பொருளாதாரப் பிரிவில் இருக்கும் மக்கள் பெரும் தொகையை வரிக்கும் விலைவாசி உயர்வுக்குமே இழந்து வருகின்றனர்.
நிர்மலா சீதாராமன்
இந்த நிலையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள 2023 மத்திய பட்ஜெட்டில் தற்போது அளிக்கப்பட்டு வரும் அடிப்படை வருமான வரி விலக்கான 2.5 லட்சம் ரூபாய் அளவீட்டை உயர்த்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்படுகிறது.
வருமான வரி விலக்கு வரம்பு
அதிலும் முக்கியமாகத் தற்போதைய விலைவாசி உயர்வைச் சமாளிக்க அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த பல தரப்பினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.
வரிப் பலகை
மக்களின் சுமையைச் சமாளிக்கும் வகையில் தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சியாக வருமான வரி விதிப்பு முறையில் கூடுதலாக வரிப் பலகை சேர்க்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்குமா என்பது சந்தேகம் தான்.
பழைய மற்றும் புதிய வரி விதிப்பு
தற்போது பழைய வருமான வரி விதிப்பில் 4 வரிப் பலகையில் 0, 5, 25, 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. புதிய வருமான வரிப் பலகையில் 7 பலகையில் 0-30 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
80சி பிரிவு
இதேபோல் 80சி பிரிவின் கீழ் வருடம் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வரிச் சலுகை அளிக்கப்படும் வேளையில், இதைக் கணிசமாக உயர்த்த வாய்ப்பு உள்ளதாகக் கருத்து நிலவுகிறது. இதைப் பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் உறுதி செய்யலாம்.
புதிய வீடு
புதிய வீடு வாங்குவோருக்கு மிக முக்கியமான சலுகையும், தளர்வுகளையும் அறிவிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக மலிவு விலை வீடு வாங்குவோருக்கான சலுகை இந்தப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
ஹோம் லோன்
வீட்டு கடன் வாங்கியவர்கள் செலுத்தும் ஈஎம்ஐ தொகையில் முக்கியமான வரிச் சலுகை அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக வாங்கிய கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி தொகைக்கு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் சலுகை அளிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் நடுத்தர மக்களுக்குக் கூடுதலான சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஹெல்த் இன்சூரன்ஸ்
இந்தப் பட்ஜெட் அறிக்கையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரிவுக்குத் தனிப் பிரிவும், அளவீடும் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications