இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதல்களை அடுத்து கூகுளில் அதிகமாக இந்தியர்கள் தேடிய தகவல்கள் என்னென்ன என்பது குறித்த சுவாரசியமான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த மாதம் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து இந்தியா பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடங்கியது. பாகிஸ்தானும் இந்தியா மீது பதில் தாக்குதல்களை நடத்தியது. தற்போதைக்கு இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அமலுக்கு கொண்டு வந்திருக்கின்றன.

இந்த சூழலில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான இந்த பதற்றம் அதிகரித்ததில் இருந்து தற்போது வரை சமூக வலைத்தளங்களில் பலரும் இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்தும் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் குறித்தும் தான் பரவலாக பேசி வருகின்றனர். இந்தியர்கள் கூகுளில் என்னென்ன விஷயங்கள் குறித்து பரவலாக தேடினர் என்பதை கூகுள் டிரெண்ட்ஸ் மூலம் ற்போது தெரிந்து கொள்ளலாம்.
விமான நிலையங்கள் மூடல்:
வடக்கு மற்றும் மேற்கிந்திய மாநிலங்களில் இருக்கும் ராணுவ விமான தளங்கள் மீது பாகிஸ்தான் திடீரென தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து 32 விமான நிலையங்கள் மூடப்பட்டன. எனவே பெரும்பாலான இந்தியர்கள் எந்தெந்த விமான நிலையங்கள் மூடப்பட்டு இருக்கின்றன என்பது குறித்த விவரங்களை தேடியுள்ளனர். எந்த பகுதியில் விமானங்கள் இயங்குகின்றன , எந்த விமானங்கள் ரத்தாகியுள்ளன என்ற விவரங்களை தேடி படித்துள்ளனர்.
ஐபிஎல் போட்டி:
இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலை அடுத்து ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சூழலில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குமா மீதமுள்ள போட்டிகள் எத்தனை, இதற்கு முன்பு இதுபோல ஐபிஎல் போட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறதா என்பன உள்ளிட்ட தகவல்களை பெரும்பாலானவர்கள் தேடி இருக்கின்றனர்.
ஷெல் தாக்குதல் (Shell attack ):
அடுத்ததாக ஷெல் அட்டாக் என்றால் என்ன என்பதை இந்தியர்கள் தேடி படித்துள்ளனர். ஷெல்லிங் என்பது பொதுவாக இடைவிடாத தாக்குதலை தான் இவ்வாறு அழைப்பார்கள். ராணுவ சூழலில் பீரங்கி குண்டுகளை தொடர்ச்சியாக செலுத்துவது என வைத்துக் கொள்ளலாம். இதன் முதன்மை நோக்கம் எதிரிகளின் முகாம்களை அழிப்பது அவர்களின் பாதுகாப்புகளை பலவீனப்படுத்துவது என்பதாகும் . இது குறித்து இந்தியர்கள் அதிகம் தேடி இருக்கிறார்கள் .
போர் நிறுத்தம்:
இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக பலரும் தேடியுள்ளனர். இந்தியா பாகிஸ்தான் சண்டை எப்போது முடிவுக்கு வரும் ,பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் வழங்கி இருக்கும் கடன் குறித்து பலரும் தேடியுள்ளனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications