இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்ப சேவையான 5ஜி சேவை தொடங்கி விட்டது என்பதும் ஒரு சில குறிப்பிட்ட நகரங்களில் தொடங்கிவிட்ட இந்த சேவையை தற்போது மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.
இதுவரை 3ஜி மற்றும் 4ஜி சேவைவை பயன்படுத்தி வந்தவர்கள் 5ஜி சேவையை பயன்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை என ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் எதிர்காலத்தில் 5ஜி சேவைக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வந்தால் எத்தனை பேர் செலுத்த தயாராக உள்ளனர் என்பது குறித்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. இந்த சர்வே முடிவு குறித்து தற்போது பார்ப்போம்.
5ஜி சேவை
இந்தியாவில் ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை சமீபத்தில் தொடங்கியது என்பதை பார்த்தோம். அகமதாபாத், பெங்களூரு, சென்னை, வாரணாசி, சண்டிகர், டெல்லி, ஜாம்நகர், காந்திநகர், மும்பை, புனே, லக்னோ, கொல்கத்தா, சிலிகுரி, குருகிராம் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் 5ஜி சேவைகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பதும் இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் பல நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
5ஜி சேவைக்கு கட்டணம்
இந்த நிலையில் இப்போதைக்கு 5ஜி சேவை பெற விரும்புபவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை என ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தற்போது 5ஜி சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால் கூடுதல் கட்டணங்களை விதித்தால் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்பதால் இந்நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடப்பட்டது.
அதிக கட்டணம்
ஆனால் அதே நேரத்தில் 5ஜி சேவையை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இந்நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் எத்தனைபேர் 5ஜி சேவைக்காக அதிக கட்டணம் செலுத்த தயாராக உள்ளனர் என்பதை பார்ப்போம்.
சர்வே
LocalCircles என்ற ஆன்லைன் சர்வே தளம் எடுத்த கருத்துக்கணிப்பின்படி 43% பேர் கூடுதல் கட்டணத்தை 5ஜி சேவைக்காக செலுத்த தயாராக இல்லை என தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் அதே 43% பேர் 5ஜி சேவைக்கு மாறும்போது நெட்வொர்க் வேகம் அதிகரித்தால் 5-10 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் செலுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த சர்வேயில் 2% பேர் 5ஜி சேவைக்கு 25 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் செலுத்த தயார் என தெரிவித்துள்ளனர்.
அதிகரிக்க வாய்ப்பு
தற்போது பயன்படுத்தப்படும் 4ஜி சேவையில் 40 முதல் 50 Mbps வரை இண்டர்நெட் வேகம் இருக்கும் நிலையில் 5ஜியின் வேகம் 300 Mbps வரை இருப்பதால் கூடுதல் கட்டணத்தை செலுத்த 43 சதவீதம் பேராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவையை பயன்படுத்தி அதன் தன்மையை புரிந்து கொண்டால் கூடுதல் கட்டணம் செலுத்த தயாராகும் நபர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications