முதலீடு செய்து வருமானம் பார்ப்பது என்பது பலரும் யோசிக்கும் ஒரு விஷயம்தான். ஆனால் எந்த முதலீட்டை தேர்ந்தெடுப்பது? எவ்வளவு காலம் முதலீடு செய்தால் வருமானத்தை அதிகரிக்கலாம் என்ற விவரங்கள் பலருக்கும் தெரிவதில்லை. எந்த முதலீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் கூட உங்களுக்கு சாய்ஸ் இருக்கலாம். ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டத்தை நல்ல திட்டமாக கருதக்கூடும். ஆனால் அந்தத் திட்டத்தில் எவ்வளவு நாள் முதலீடு செய்தால் உங்களுடைய லாபம் அதிகரிக்கும் என்று தெரியுமா? அதற்கு நீங்கள் ரூல் 72-ஐ பின்பற்றலாம். இந்தப் பதிவில் ரூல் 72 என்றால் என்ன? ஒவ்வொரு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன்பு இந்த விதிமுறையை எப்படி பயன்படுத்துவது? என்ற விவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
ரூல் 72 என்றால் என்ன?: ரூல் 72 என்பது கொடுக்கப்பட்ட வட்டி விகிதத்தின் அடிப்படையில் முதலீடு இரட்டிப்பாகும் நேரத்தை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஃபார்முலாவாகும். ஒவ்வொரு திட்டத்திற்கும் குறிப்பிட்ட வட்டி விகிதம் இருக்கும். எனவே 72-ஐ வட்டி விகிதத்தால் வகுப்பதன் மூலம், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு இரட்டிப்பாக எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்பதை தோராயமாக மதிப்பிடலாம்.

தற்போதைய வட்டி விகிதங்களின் அடிப்படையில் சில பிரபலமான முதலீட்டு திட்டங்கள் மற்றும் அவை எப்போது இரட்டிப்பாகும் என்ற நேரத்தை மதிப்பிடுவோம்.
பேங்க் பிக்சட் டெபாசிட்: வங்கிகளில் தற்போது பிக்சட் டெபாசிட்களுக்கு தோராயமாக 8 சதவீத வட்டி வழங்கப்படுவதால் 72-ஐ 8-ஆல் வகுக்கும்போது 9 கிடைக்கும். 9 ஆண்டுகளில் உங்கள் முதலீடு இரட்டிப்பாகும் என்று பொருள். அதாவது உங்களுடைய முதலீடு அப்படியே இரட்டிப்பாவதற்கு 9 ஆண்டுகள் எடுக்கும்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF): ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குவதால், PPF கணக்குகளில் முதலீடு செய்யப்பட்ட தொகை இரட்டிப்பாக தோராயமாக 10 ஆண்டுகள் ஆகும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு சமீபத்தில் 8.2 சதவீதமாக வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது, இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடு சுமார் 8.7 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
கிசான் விகாஸ் பத்ரா (KVP): 7.5 சதவீத வட்டி விகிதத்தில், KVP-களில் செய்யப்படும் முதலீடுகள் தோராயமாக 9.6 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC): இந்தத் திட்டம் 7.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குவதால், NSC-கள் சுமார் 9.3 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS): சராசரியாக 10 முதல் 11 சதவீதம் வட்டி விகிதத்துடன், NPS முதலீடுகள் விரைவான இரட்டிப்பு நேரத்தைக் கொண்டுள்ளன, சராசரியாக 6.8 ஆண்டுகளில் உங்கள் முதலீடு இரட்டிப்பாகும்.
NPS போன்ற திட்டங்கள் ஒப்பீட்டளவில் விரைவான வருமானத்தை வழங்கினாலும், வங்கி FD-கள் அல்லது PPF-கள் போன்ற பாதுகாப்பான விருப்பங்களுடன் ஒப்பிடும்போது அவை அதிக ஆபத்தை உள்ளடக்கியிருக்கலாம்.
72 விதியைப் புரிந்துகொள்வது முதலீட்டாளர்களுக்கு தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், அவர்களின் நிதி இலக்குகளை திறமையாக அடையவும் உதவுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரபலமான திட்டங்களில் முதலீடு செய்தால் உங்களுடைய முதலீடு எப்போது இரட்டிப்பாகும் என்ற நேரத்தின் விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து நீங்கள் வேறு எந்த திட்டத்தில் முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்பதை நீங்களே கால்குலேட் செய்து கண்டுபிடிக்க முடியும்.
உதாரணமாக ஒருவர் தன குழந்தைக்காக சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் ரூ.10 லட்ச ரூபாய் முதலீடு செய்கிறார் என்றார்.. அவருடைய முதலீடு இரட்டிப்பாக 8.7 ஆண்டுகள் எடுக்கும். இதே போல் நீங்களும் எந்த திட்டத்தில் முதலில் செய்ய இருக்கிறீர்கள் என்பதை வைத்து கணக்கீடு செய்து கொள்ளலாம்.
மேலும் ஆன்லைனில் கால்குலேட்டர்கள் இருக்கின்றன. அதை வைத்து எவ்வளவு முதலீடு செய்ய இருக்கிறீர்கள்? எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்ய இருக்கிறீர்கள்? அதற்கு எவ்வளவு சதவீத வட்டி வழங்கப்படுகிறது? என்பதை வைத்து எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் அனைத்து தகவல்களையும் அறிந்து ஒரு முதலீட்டாளர் முதலீடு செய்ய முடியும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications