Aadhaar Face RD: ஆதார் எண் மற்றும் ஆதார் தகவல்கள் மிகவும் முக்கியமான விஷயமாக மாறி வருகிறது, முன்பு வெறும் அடையாள அட்டையாக இருந்த ஆதார் தற்போது அரசு நலத் திட்டங்களின் பலன்களைப் பெறுவது முதல் மானியம், அரசின் சுகாதார காப்பீடு வரையில் அனைத்திற்கும் ஆதார் மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. இந்த நிலையில் மக்கள் மத்தியில் தற்போது ஆதார் ஃபேஸ் ஆர்டி (Aadhaar Face RD) என்ற விஷயம் அதிகம் பேசப்பட்டு, இதுகுறித்த தேடல் அதிகரித்து இணையத்தில் டிரெண்டாகியுள்ளது. இது என்ன..?
மத்திய அரசு ஆதார் அட்டை வழங்கி பல வருடங்கள் ஆன நிலையில், 10 ஆண்டுக்கு ஒரு முறை ஆதார் விபரங்களை அப்டேட் செய்ய வேண்டிய முக்கியமான உத்தரவை அரசு விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய அரசு ஆதார் அட்டைதாரர்கள் செப்டம்பர் 14 வரை இலவசமாக தங்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க அனுமதிக்கிறது.

பல முறை இலவச சேவைக்கான கால நீட்டிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ள வேளையில் மீண்டும் நீட்டிக்கப்படுமென எனத் தெரியவில்லை, எனவே இலவசமாக விபரங்கள் அப்டேட் செய்யும் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளச் செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் உங்கள் ஆதார் விபரங்களை அப்டேட் செய்துகொள்ளவும். சரி Aadhaar Face RD என்றால் என்ன..?
தொழில்நுட்ப உலகம் வேகமாக மாறிவரும் நிலையில், நம் வாழ்க்கையின் பல கடுமையான விஷயங்களை எளிமைப்படுத்தி வருகிறது. அத்தகைய தொழில்நுட்பங்களில் ஒன்றாக, இந்த Aadhaar Face RD எனப்படும் முக அங்கீகார (face authentication) சேவை தற்போது பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த ஆதார் முக அங்கீகாரம் என்பது ஒரு நபரின் லைவ் முக புகைப்படத்தை ஆதார் தரவுத்தளத்தில் முதலில் பதிவு செய்யப்படும். இதன் பின்பும் தேவைப்படும் போது ரியல் டைம் அடிப்படையில் ஒருவரின் முகத்தை ஸ்கேன் செய்து ஆதார் டேட்டாபேஸ்-ல் பதிவு செய்யப்பட்டு உள்ள படத்துடன் ஒப்பிட்டு 1:1 பொருத்தம் செய்யும் ஒரு செயல்முறையாகும்.
இது சாதாரண முக அங்கீகாரம் (Face Recognition) செயல்பாட்டிற்கு மாறுபட்டது. சாதாரண முக அங்கீகாரம் என்பது ஒரு தரவுத்தளத்தில் உள்ள பல படங்களுடன் ஒருவரின் புகைப்படம் ஒப்பிடும் 1:N முறையாகும். ஆனால் Aadhaar Face RD என்பது ஒருவரின் புகைப்படத்தை அவருடைய புகைப்படத்துடன் மட்டுமே ஒப்பிடு செய்யும் 1:1 முறையைக் கொண்டதாகும்.
அதாவது Face Recognition செய்யும் முன்பு ஆதார் எண் பதிவிடும் போது அவருடைய புகைப்படத்துடன் மட்டுமே ஒப்பிட்டு இது அவர்தானா என்பதை உறுதி செய்யும். இந்த முக அங்கீகாரம் தற்போது பல இடத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) திட்டம்: இது பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்குச் சுகாதார காப்பீடு மூலம் விரிவான சுகாதார பாதுகாப்பு வழங்குகிறது. ABHA ID என்பது ஒரு தனிநபரின் சுகாதார பதிவுகள் (PHR) க்காக சேமிக்க அனுமதிக்கும் ஒரு சேவை, இது சுகாதார காப்பீடு பெற மருத்துவ அறிக்கைகளை அரசு அமைப்புகளுக்குள் பகிரவும் மற்றும் பல்வேறு சிகிச்சை வசதிகளுக்கு அணுகுவதற்கு அனுமதிக்கிறது. இந்த இரண்டு திட்டங்களும் தற்போது முக அங்கீகாரம் சரி பார்ப்பதைக் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
PM-Kisan சம்மான் நிதி: விவசாயிகள் தற்போது தங்கள் வீட்டிலிருந்து அல்லது பணி செய்யும் இடத்திலிருந்து முக அங்கீகாரம் மூலம் PM-Kisan சம்மான் நிதியின் நன்மைகளைப் பெறலாம். இதன் மூலம் இனி ஒவ்வொரு முறையும் ஈசேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
மற்ற பயன்பாடுகள்: முக அங்கீகாரத்திற்கான மற்ற பயன்பாடுகளில் மிகவும் முக்கியமானதாக அரசு அதிகாரிகள் அலுவலகத்திற்கு வருகை பதிவை நிர்வாகம் செய்யும் AeBAS முறையில் முக அங்கீகாரம் பயன்படுத்தப்பட உள்ளது. இது அரசு அதிகாரிகள் எப்போது அலுவலகம் வருகிறார்கள் என்பதைத் துல்லியமாகவும், சரியான முறையில் தரவுகளைப் பதிவு செய்கிறது.
இதோடு பல மாநில அரசுகளும் இந்த ஆதார் முக அங்கீகார சேவையைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் UIDAI அமைப்பு தனி ஆப் மற்றும் விளக்க வீடியோவை வெளியிட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications