சென்னை: இந்தியர்களுக்கான முக்கிய அடையாள ஆவணமாக இருக்கிறது ஆதார் அட்டை . இவ்வாறு நாம் வங்கி கணக்கு தொடங்குவதிலிருந்து, காப்பீடு பெறுவது என பல்வேறு சேவைகளுக்கும் நம்முடைய ஆதார் எண்ணை அடிப்படை அடையாள ஆவணமாக கேட்கிறார்கள்.
ஆனால் ஆதார் எண்ணுக்கு பதிலாக விர்ச்சுவல் ஐடி என்பதை பயன்படுத்தும் வசதி இருக்கிறது. அது பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லாததால் பெரும்பாலானவர்கள் விஐடி எனப்படும் விர்ச்சுவல் ஐடியை பயன்படுத்துவதில்லை.

விர்ச்சுவல் ஐடி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். ஒவ்வொரு தனி நபரின் ஆதார் எண்ணுடனும் இணைக்கப்பட்டு இருக்கும் 16 இலக்க கோடுதான் ஆதார் விர்ச்சுவல் ஐடி . ஒரு நபர் தன்னுடைய அடையாளத்தை தன்னுடைய ஆதார் எண் இல்லாமல் அங்கீகரிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக தான் ஆதார் விர்ச்சுவல் ஐடி பயன்படுத்தப்படுகிறது.
மொபைல் நம்பர் ,வங்கி கணக்கு அல்லது நிதி ஆவணங்கள் போன்ற சென்சிட்டிவான தகவல்கள் அனைத்துமே நம்முடைய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருப்பதால் பெரும்பாலான இடங்களில் ஆதார் எண் வழங்குவதற்கு நாம் தயங்குவோம். அந்த சமயங்களில் நாம் ஆதார் எண்ணுக்கு பதிலாக விர்ச்சுவல் ஐடியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எப்பொழுது வேண்டுமானாலும் யுஐடிஏஐ இணையதளத்திற்கு சென்று ஒரு நபர் அவருடைய ஆதார் எண்ணுக்கான விர்ச்சுவல் ஐடியை உருவாக்கிக் கொள்ள முடியும். ஒரு ஆதார் எண்ணுக்கு ஒரு விர்ச்சுவல் ஐடி மட்டுமே உருவாக்க முடியும்.
இந்த விர்ச்சுவல் ஐடி வாயிலாக நம்முடைய பயோமெட்ரிக் டேட்டாகளுக்கான அணுகல்கள் கிடைக்கும். அதாவது அடிப்படை இ கேஒய்சி தகவல்களான பெயர், முகவரி , புகைப்படம் ஆகிய தகவல்களை மட்டுமே அணுக முடியும். மற்ற தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும்.
ஒரு வங்கி கணக்கு தொடங்கும்போது, அரசு சேவைகளை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யும்போது, அரசு மானியங்களை பெறும் போது, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்யும்போது மற்றும் புதிதாக காப்பீடு பாலிசி எடுக்கும் போது ஆதார் எண்ணுக்கு பதிலாக நம்முடைய அடையாளத்தை சரி பார்ப்பதற்காக விர்ச்சுவல் ஐடியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறது மத்திய அரசு. பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் எளிதாக விர்ச்சுவல் ஐடியை உருவாக்க முடியும்.
https://resident.uidai.gov.in/genericGenerateOrRetriveVID/en என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் Generate VID என்பதை கிளிக் செய்தால் உங்களின் ஆதார் எண் மற்றும் ஓடிபி கேட்கும். அதனை உள்ளீடு செய்தால் போதும் 16 இலக்க விர்ச்சுவல் ஐடி உருவாகி விடும்.
இதனை பயன்படுத்தி ஒருவரது ஆதார் எண்ணை யாராலும் கண்டறிய முடியாது. எனவே பாதுகாப்பான முறையில் தகவல்களுக்கான அணுகலை வழங்க வேண்டும் என விரும்புபவர்கள் ஆதார் எண்ணை வழங்குவதற்கு பதிலாக விர்ச்சுவல் ஐடியை பயன்படுத்தலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications