போனஸ் பங்கு (Bonus shares) மற்றும் பங்கு பிரிப்பு (stock splits) ஆகியவை ஒரு நிறுவனம், சந்தையில் தங்கள் நிறுவனத்தின் பங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து, முதலீட்டாளர்களுக்கு மலிவான விலையில் கிடைக்கச் செய்யும் இரண்டு முக்கியமான வழிகள் ஆகும்.
இரண்டிற்கும் இடையே உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், போனஸ் பங்குகள் நிறுவனத்தில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன, அதே சமயம் பங்கு பிரிப்பு மூலம் முதலீட்டாளர்கள் வைத்துள்ள பங்குகளைச் சிறிய அலகுகளாகப் பிரிக்கப்படுகிறது.

போனஸ் பங்குகள் மூலம் ஒரு நிறுவனத்தின் முதலீட்டாளர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வது மட்டும் அல்லாமல் டிவிடென்ட்-க்கு இணையாக இதைக் கொடுக்க முடியும்.
போனஸ் பங்குகள்: ஒரு நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்குக் கூடுதல் பங்குகளை இலவசமாக வழங்கும் முறை. இது ஒரு முதலீட்டாளர் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம், இது எதிர்காலத்தில் பங்கு விலை அதிகரித்தால் நன்மை பயக்கும். ஆனால் போனஸ் பங்குகள் ஒருபோதும் ஒரு நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பை அதிகரிக்காது. போனஸ் பங்குகள் மூலம் ஒரு நிறுவனத்தின் பங்கு விலை குறையும் ஆனால் சந்தை மதிப்பு குறையாது.
பங்கு பிரிப்பு: நிறுவனங்கள் தங்கள் பங்குகளைச் சிறிய அலகுகளாகப் பிரிக்கின்றன, இது முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை மலிவாக மாற்றுவது மட்டும் அல்லாமல் சந்தையில் பங்கு எண்ணிக்கை அதிகரிக்கும். பங்கு பிரிவுக்குப் பிறகு ஒரு முதலீட்டின் மொத்த மதிப்பு ஒரே மாதிரியாக இருக்கும்.
போனஸ் பங்குகள் மற்றும் பங்கு பிரிவுகளுக்கு இடையே உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், போனஸ் பங்குகள் பங்குதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன, அதே சமயம் பங்கு பிரிப்பு நிலவும் பங்குகளைப் பல பங்குகளாகப் பிரிக்கின்றன.
போனஸ் பங்குகள் எடுத்துக்காட்டாக: ஒரு நிறுவனம் 3:1 போனஸ் வழங்கினால், பங்குதாரர்களுக்கு தாங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்கிற்கும் மூன்று பங்குகள் கிடைக்கும். இதன் மூலம் முதலீட்டு மதிப்பு மாறாது.
பங்கு பிரிவு எடுத்துக்காட்டாக: ஒரு நிறுவனம் 2-க்கு-1 பங்கு பிரிவு அறிவித்தால், பங்குதாரர்களுக்கு தாங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்கிற்கும் கூடுதல் பங்கு கிடைக்கும். ஒவ்வொரு பங்கின் முக மதிப்பும் அதற்கேற்ப குறைக்கப்படுகிறது.
முக மதிப்பு: போனஸ் பங்குகள் மூலம் ஒரு நிறுவனத்தின் பங்குகள் முக மதிப்பு மாறாமல் இருக்கும், ஆனால் பங்கு பிரிவு மூலம் மாறும்.

செலவு: பங்கு பிரிப்பு ஒரு நிறுவனத்திற்கு அதிக செலவுகளை அளிக்கும் மற்றும் நிறுவனங்கள் சட்ட மற்றும் ஒழுங்குமுறை தேவைகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால் போனஸ் பங்குகளில் சிக்கலான நடைமுறைகள் இல்லை.
நிறுவன மதிப்பில் தாக்கம்: பங்கு பிரிப்பு ஒரு நிறுவனத்தின் அடிப்படை நிலைப்பாட்டைப் பாதிக்காது அல்லது மதிப்பைச் சேர்க்காது.
முதலீட்டாளர்கள் மீதான தாக்கம்: போனஸ் பங்குகள் மற்றும் பங்கு பிரிப்பு இரண்டும் ஒரு பங்கை முதலீட்டாளர்களுக்கு மலிவானதாக்கும்.


Click it and Unblock the Notifications