மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது நாம் கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது
மியூச்சுவல் ஃபண்டில் பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளன என்பதும் அதிக ரிஸ்க் உள்ள திட்டங்கள், ரிஸ்க் இல்லாத திட்டங்கள் ஆகியவை உள்ளன என்பது தெரிந்ததே.
அந்த வகையில் இன்று நாம் காணப்போவது டெப்ட் ஃபண்ட்கள் என்றால் என்ன? அவை குறைந்த ரிஸ்க் உடைய நிலையான வருமானத்தை தரக்கூடிய ஃபண்ட்களா? என்பதை தற்போது பார்ப்போம்
டெப்ட் ஃபண்ட்கள்
டெப்ட் ஃபண்ட்கள் நமது முதலீட்டை பெருக்கக் கூடிய கார்ப்பரேட் மற்றும் அரசாங்க பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்து நிலையான வருமானம் பெறும் ஒரு திட்டமாகும். டெப்ட் ஃபண்ட்கள் என்பது இன்கம் ஃபண்ட்ஸ் அல்லது பாண்டு ஃபண்ட்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
சிறப்புகள்
குறைந்த கட்டணம், ஒப்பீட்டளவில் நிலையான வருமானம், ஒப்பீட்டளவில் அதிக பணப்புழக்கம் மற்றும் உறுதியான பாதுகாப்பு ஆகியவை டெப்ட் ஃபண்ட்களின் சிறப்புகள் ஆகும்.
நிலையான வருமானம்
நிலையான வருமானத்தை விரும்பும் ஒரு முதலீட்டாளர் அதே நேரத்தில் ரிஸ்க்கை விரும்பாதவர் தாராளமாக டெப்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். டெப்ட் ஃபண்ட்கள் குறைந்த ஏற்ற இறக்கம் கொண்டவை என்பதால், ஈக்விட்டி ஃபண்ட்களை விட குறைந்த ரிஸ்க் கொண்டது. அதே நேரத்தில் வங்கி டெபாசிட்களில் முதலீடு செய்வதை விட அதிக வருமானம் கிடைக்கும் ஒரு திட்டமாகும். மேலும் வரி நன்மையுடன் சேர்த்து உங்கள் நிதி இலக்குகளை அடைய உதவும், சிறந்த திட்டம் தான் டெப்ட் ஃபண்ட்கள்.
செயல்பாடு
டெப்ட் ஃபண்ட்களின் செயல்பாட்டைப் பொறுத்தவரை, மற்ற மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. குறிப்பாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களை விட, இவை அதிகப் பாதுகாப்பானவை என்பதால் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் முதலீடு செய்யும் ஒரு திட்டமாக கருதப்படுகிறது.
நிதி மேலாளர்
டெப்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்யும் நமது பணம், நிலையான வட்டி ஈட்டித் தரும் பாண்டுகள், கார்ப்பரேட் டெபாசிட்கள், அரசாங்கப் பத்திரங்கள், பணச்சந்தை சார்ந்த பத்திரங்கள் ஆகியவற்றில் நமது நிதி மேலாளர் முதலீடு செய்கின்றார். இவை முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியான வட்டியை வழங்குவதற்கான ஓர் உறுதிப்பாட்டை அளிக்கும் சான்றிதழ் போன்றது.
டிவிடெண்ட்
டெப்ட் ஃபண்ட்கள் மூலம் பெறப்படும் வட்டி வருமானம் முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படலாம் அல்லது NAV-ஐ அதிகரிக்கும் வகையில் ஃபண்டுடன் சேர்க்கப்படலாம். உங்கள் டெப்ட் ஃபண்டில் இருந்து நீங்கள் தொடர்ச்சியான வருமானத்தை பெற விரும்பினால் ஒரு முதலீட்டாளராக நீங்கள் டிவிடென்ட் முறையை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications