விவசாயிகளுக்கு உதவும் இ-கோபால் பயன்பாட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
இ-கோபாலா செயலி (e-Gopala App) என்பது கால்நடை வளர்ப்பு தொடர்பான, அனைத்து தகவல்களையும் அளிக்கக் கூடிய ஒரு தளமாகும். அதோடு விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இந்த ஆஃப் வழங்கும்.
இந்த இ-கோபாலா செயலியை கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
தகவல்கள் பெறலாம்
உங்கள் மொபைல் எண்ணினைக் கொண்டு இந்த செயலில் பதிவு செய்வதன் மூலம், அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொள்ள முடியும். விலங்குகளின் ஊட்டச்சத்துகள் என்ன? அவற்றில் முதன்மையானது எது, விலங்குகளின் ஊட்டச்சத்து உணவு பற்றிய தகவல்கள், ஆயுர்வேத மருத்துவ நடைமுறை, உங்கள் விலங்குகளின் நோய்கள் மற்றும் சிகிச்சை முறை பற்றிய தகவல்களையும் பெறலாம்.
விவசாயிகளுக்கு உதவும் சேவை
அதோடு தரமான விந்து மற்றும் கரு போன்றவற்றை வாங்கவும், நோய் இல்லாத கருக்களை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது உள்ளிட்ட பலவற்றிற்கும் இந்த ஆப் பயனுள்ளதாக இருக்கும். அதோடு செயற்கை கருவூட்டல் மற்றும் கால்நடை முதலுதவி, தடுப்பூசி உள்ளிட்ட பல சேவைகளையும் இந்த செயலி மூலம் பெற முடியும்.
அலர்ட்கள் வரும்
விவசாயிகள் தங்கள் விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் தேதிகள் குறித்த அலர்ட்களை தொடர்ந்து பெறுவார்கள். அதோடு விவசாயிகள் அருகிலுள்ள நோய்த் தடுப்பு முகாம்கள் அல்லது பயிற்சி திட்டங்கள் பற்றிய தகவல்களைப் பெறலாம். செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நன்கு வளர்க்கப்பட்ட விலங்குகளின் விந்து விற்பனை பற்றிய தகவல்களையும் வழங்குகிறது.
விவசாயிகளுக்கான தீர்வு
தடுப்பூசிக்கான செய்திகள் மற்றும் கால் நடைகள் கன்று ஈன்றல் தேதி போன்றவற்றுக்கு உரிய தேதிகளை எச்சரிக்கைகள் அனுப்புவதற்கும், பல்வேறு திட்டங்கள் குறித்தும், பிரச்சாரங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எச்சரிக்கை அனுப்புவதற்கு எந்தவித வழிமுறையும் இல்லாமல் இருந்தது. ஆனால் இ - கோபாலா ஆஃப் எல்லா விதமான திட்டங்களுக்கும் ஒரு வித தீர்வினைக் கொடுக்கும்.
எப்படியோ விவசாயிகளுக்கு ஒரு நல்ல தீர்வினை வழங்கினால் இது நல்ல விஷயம் தானே.


Click it and Unblock the Notifications