டெல்லி: ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய தினத்தில் பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்தியாவின் நிதிநிலை அறிக்கையின் முன்னோட்டமாகவே இந்த பொருளாதார ஆய்வு அறிக்கை பார்க்கப்படுகிறது.
பொருளாதார ஆய்வு அறிக்கை என்பது அந்த குறிப்பிட்ட நிதியாண்டில் அரசின் நிதி செயல்பாடு எப்படி இருந்தது, இந்திய பொருளாதாரம் எப்படி செயல்பட்டது என்பதை வெளிப்படுத்தக்கூடிய ஒரு அறிக்கையாகும். அது தவிர வரக்கூடிய ஆண்டில் அரசு என்னென்ன கொள்கை மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது என்பதற்கான குறிப்புகளும் இதில் இடம் பெறும்.

ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும். இதன் அடிப்படையில் நாம் பட்ஜெட் எப்படி இருக்கும் என்ற ஒரு கணிப்புக்கு வந்து விட முடியும்.
எனவே தான் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு பொருளாதார ஆய்வு அறிக்கை மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு தலைமை பொருளாதார ஆலோசகரும் நிதி அமைச்சகத்தை சேர்ந்து மூத்த அதிகாரிகளும் செய்தியாளர்களை சந்திப்பர்.
வரவிருக்கும் பொருளாதார ஆய்வு அறிக்கையின் கருப்பொருள் பல்வேறு துறைகளில் இருக்கும் ஒழுங்குமுறைகளை தளர்த்துவதாக இருக்கும் என கடந்த டிசம்பர் 6ஆம் தேதி தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
பொருளாதார ஆய்வு அறிக்கை என்பது அரசாங்கத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரனின் மேற்பார்வையில் பொருளாதார விவகாரங்கள் துறை தயாரிக்கும் ஒரு வருடாந்திர அறிக்கையாகும். கடந்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் நிலை எப்படி இருந்தது என்பது இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். பொருளாதார ஆய்வு அறிக்கை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கும்.
முதல் பிரிவில் பொருளாதாரம் தொடர்பான ஒரு விரிவான பார்வையும், அந்த குறிப்பிட்ட ஓர் ஆண்டு காலத்தில் நாட்டில் நிகழ்ந்த முக்கியமான பொருளாதார மேம்பாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். இரண்டாவது பிரிவில் சமூக பாதுகாப்பு, வறுமை, கல்வி, சுகாதாரம் ,மனிதவள மேம்பாடு, சுற்றுச்சூழல் தொடர்பான விவரங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். இது தவிர இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி, பணவீக்க விகிதம் ,வெளிநாட்டு கரன்சி கையிருப்பு, வர்த்தக பற்றாக்குறை உள்ளிட்ட முக்கியமான புள்ளி விவரங்களையும் இதில் எதிர்பார்க்கலாம்.
முதன்முறையாக 1950 - 51 ஆம் நிதியாண்டில் தான் இந்தியாவில் பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது மத்திய பட்ஜெட் உடனேயே பொருளாதார ஆய்வு அறிக்கையும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டது. 1964ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் பட்ஜெட்டுக்கு முந்தைய தினம் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யும் பழக்கம் கொண்டுவரப்பட்டது. பொதுவாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படாது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications