தேர்தல் பத்திரம் என்பது குறித்து பலரும் கேள்விபட்டிருக்கலாம். இது பொதுவாக தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளால் நன்கொடை திரட்டப்படும். இந்த நன்கொடையை திரட்ட பயன்படுத்தப்படும் தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐ வெளியிடும்.
இந்த தேர்தல் பத்திரங்கள் என்பது உறுதிமொழி பத்திரங்களை போல. அதாவது ரூபாய் நோட்டுகளை போல. இது யார் கையில் இருக்கின்றதோ? அவர்களே இதற்கு உரிமையாளர்கள். இதில் வாங்குபவர் பெயர், பணம் பெறுபவரின் பெயர் என எதுவும் குறிப்பிடப்படாது. இதற்கு வட்டி கிடையாது. இதன் காலம் 15 நாட்கள் மட்டுமே.
யார் வெளியிடுவார்கள்?
இந்த தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது எஸ்பிஐ வங்கியாகும். இந்த பத்திரங்களை குறிப்பிட்ட 29 கிளைகளில் மட்டுமே வாங்கிக் கொள்ளலாம். இதனை ரூ.1000, 10,000, 1,00,000, 10,00,000, 1,00,00,000 என்று வாங்கிக் கொள்ள முடியும்.
பொதுவாக இந்த பத்திரங்கள் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர்கள் மாதங்களில் 10 நாட்களுக்கு கிடைக்கும். இதே பொதுத் தேர்தல் காலத்தில் கூடுதலாக 30 நாட்கள் மத்திய அரசால் அனுமதி வழ்ங்கப்படும்.
யாரெல்லாம் வாங்கலாம்?
இந்த தேர்தல் பத்திரங்களை இந்திய குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் விவரங்களை பூர்த்தி செய்பவர்கள், தங்கள் வங்கிக் கணக்கின் மூலம் நேரடியாக பணம் அனுப்புபவர்கள் இந்த பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும்.
தேர்தல் பத்திரங்களின் தேவை என்ன?
முன்னதாக அரசியல் கட்சிகள் நன்கொடையாக பணமாக பெற்று வருகின்றன. இந்த நன்கொடைகளுக்கு வரி கிடையாது.எனினும் 2000 ரூபாய்க்கு மேலாக நன்கொடை பெறும்போது, யாரிடமும் இருந்து நன்கொடை பெறப்பட்டது என்பதை வழங்குவதில் கட்டுப்பாடுகள் இருந்தன. அதாவது கடந்த மூன்று வருட லாபத்தில் 7.5% மட்டுமே நன்கொடையாக வழங்க முடியும். மேலும் நிறுவனங்கள் யாருக்கு எவ்வளவு நன்கொடை அளித்தன என்பதையும் கணக்கில் கொண்டு வர வேண்டும். வெளி நாட்டில் நன்கொடை எதையும் அரசியல் கட்சிகள் பெற முடியாது என்ற கட்டுப்பாடும் உள்ளது.
பண மசோதா
எனினும் கடந்த 2017ம் ஆண்டில் பாஜக அரசு தேர்தல் பத்திரங்கள் என்ற திட்டத்தினை பண மசோதாவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த பத்திரங்கள் மூலம் அரசிய கட்சிகள் கோடிக்கணக்கில் பணம் திரட்டினாலும், கொடுத்தவர் யார் என்றும் தெரிவிக்க வேண்டியதில்லை. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியது. குறிப்பாக அதிகபட்சம் என்பதும் நீக்கப்பட்டது. இந்த பணத்திற்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் நன்கொடையாக பெறலாம்
1951, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 29 A, பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் 1% குறைவில்லாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே இந்த தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக பெற முடியும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தத் தேர்தல் பத்திரங்களை தகுதியுள்ள அரசியல் கட்சிகளின் அறிவிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் தான் வரவு வைக்க முடியும்.
எப்போது வாங்கலாம்?
இத்தகைய தேர்தல் பத்திரங்களைத் தான் எஸ்பிஐ நவம்பர் 9 முதல் நவம்பர் 15 வரையில் வாங்கி கொள்ளலாம். 23வது தவணை பத்திரமான இது, இன்று விற்பனை தொடங்கியுள்ளது. இது 15 நாட்களுக்கு செல்லும். முதல் முறையாக அரசு மார்ச் 1 - 10, 2018ல் விற்பனை செய்யப்பட்டது.
யாருக்கு பலன்
கார்ப்பரேட் நிறுவனங்களால் வரி வழங்கப்படும் இந்த நன்கொடையால், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. நன்கொடையாளரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படுவதால், அது கறுப்பு பண புழக்கத்தை ஊக்குவிக்கும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இத்திட்டம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுக்க உதவுவதற்கே உருவாக்கப்பட்டது. ஆளும் கட்சி அதிகமான நன்கொடைகள் பெறுவதற்கான திட்டம் இது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகின்றது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications