'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகள் மத்தியிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தொற்று காலத்தில் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் உடன் லாக்டவுன் மீண்டும் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் 'Energy Lockdown' என்ற சொல் வேகமாக பரவி, இது பொதுமக்கள் மத்தியில் புதிய கவலையை உருவாக்கியுள்ளது.

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

Energy Lockdown என்றால் என்ன?
'Energy Lockdown' என்பது அதிகாரப்பூர்வமான உலக நாடுகளின் அரசுகள் பயன்படுத்தும் சொல் அல்ல. இது சமூக வலைதளங்களில் உருவான ஒரு புதிய சொல்லாகும். எரிசக்தி பற்றாக்குறை மற்றும் கச்சா எண்ணெய், எரிவாயு விலைகள் அதிகரிப்பின் காரணமாக, உலக நாடுகள் எரிசக்தி பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.

Strait of Hormuz வழியாக எண்ணெய் கப்பல்கள் இயல்பாக செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியதால், உலகளாவிய கச்சா எண்ணெய் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் சில தளர்வுகளை அளித்தாலும், முழுமையாக இயல்புநிலைக்கு திரும்புமா என்றால், கட்டாயம் இல்லை என்பது தான் தற்போதை நிதர்சனமாக உள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய மையமாக இருக்கும் இந்த வழியில் ஏற்பட்ட தடைகள், எரிபொருள் சந்தையை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.

Also Read

லாக்டவுன் போன்ற நிலையில்
பல நாடுகள் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார தட்டுப்பாடு காரணமாக கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இது 2020 COVID-19 லாக்டவுன் போல நகரங்களை மூடும் அல்லது எல்லைகளை மூடும் நடவடிக்கைகள் அல்ல. இதற்கு பதிலாக, மக்கள் வாழ்க்கை முறையை மாற்றும் வகையிலும், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும் முயற்சிகள் உலக நாடுகள் மேற்கொள்ளப்படும்.

இதனால், அன்றாட வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் காரணத்தால் இதை 'Energy Lockdown' என்று மக்கள் இணையத்தில் அழைத்து வருகின்றனர்.

Recommended For You

IEA பரிந்துரைகள்
International Energy Agency (IEA) உலக நாடுகளுக்கு எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

  • சாத்தியமான இடங்களில் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை (Work From Home) நிறுவனங்கள் அனுமதி அளிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேக வரம்பை குறைந்தது 10 கிமீ/மணி அளவிற்கு கட்டாயம் குறைக்கை வேண்டும்.
  • பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். பெரிய நகரங்களில் தனியார் கார்கள் மாற்று நாட்களில் மட்டுமே சாலையில் இயக்க அனுமதி வழங்கு வேண்டும். உதாரணமாக ஒரு நாள் முழுவதும் பொது போக்குவரத்து, அடுத்த நாள் தனியார் வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்குவது.
  • கார்பூலிங் (Car Sharing) முறையை அதிகரித்து, எரிபொருள் சேமிக்கும் முறையை கொண்டு வர வேண்டும்
  • சரக்கு வாகனங்கள் மற்றும் விநியோக சேவைகளில் எரிசக்தி சேமிக்கும் வகையில் வாகனங்களை இயக்க வேண்டும்.
  • போக்குவரத்து பயன்பாட்டிலிருந்து LPG பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
  • மக்கள் தேவையற்ற விமானப் பயணங்களை தவிர்க்க வேண்டும்.
  • நவீன மற்றும் குறைந்த எரிசக்தி பயன்படுத்தும் சமையல் முறைகளுக்கு மாற வேண்டும்.
  • பெட்ரோகெமிக்கல் மூலப்பொருட்களின் பயன்பாட்டில் குறைக்கும் வகையில் மேம்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இணையத்தில் வேகமாக பரவும் அச்சம்
சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில், 'Energy Lockdown' குறித்து பல வீடியோக்கள் மற்றும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. பலர் நாடுகள் கோவிட் போல கட்டுப்பாடுகளை அறிவிக்கத் தொடங்கியதாக கூறி வருகின்றனர்.

'Energy Lockdown' என்பது முழுமையான லாக்டவுன் அல்ல. ஆனால் எரிசக்தி பற்றாக்குறை காரணமாக, மக்கள் மற்றும் அரசுகள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+