வேலை தேடுபவரா நீங்க..? “Ghost Jobs” பத்தி தெரிஞ்சுக்கோங்க இல்லனா பிரச்னை தான்!

தற்போது வேலை தேடுவதற்கு லிங்குடின் உள்ளிட்ட தளங்கள் பெருமளவில் உதவியாக இருக்கின்றன. இத்தகைய இணையதளங்கள் நாம் வேலை தேடும் முறையை எளிதாக்கியுள்ளன. ஆனால் இதிலும் ஒரு பிரச்னை உருவெடுத்துள்ளது. அதற்கு பெயர் தான் கோஸ்ட் ஜாப்ஸ் (Ghost Jobs).

உதாரணமாக நீங்கள் லிங்குடின் தளத்தில் ப்ரோஃபைலை கிரியேட் செய்து கொண்டு வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பம் செய்கிறீர்கள். ஒரு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு பதிவை பார்க்கிறீர்கள். அதற்கு விண்ணப்பம் செய்கிறீர்கள். அவர்கள் பதில் அளிப்பார்கள் என காத்திருக்கிறீர்கள். பல வாரங்களாகியும் பதில் வரவில்லை என்றால் அது அதற்கு பெயர் தான் கோஸ்ட் ஜாப் அதாவது போலியான வேலை வாய்ப்பு விண்ணப்பம்.

வேலை தேடுபவரா நீங்க..? “Ghost Jobs” பத்தி தெரிஞ்சுக்கோங்க இல்லனா பிரச்னை தான்!

தற்போது வேலைவாய்ப்பு சந்தையில் இது போன்ற கோஸ்ட் ஜாப்களை போஸ்ட் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வேலை தேடுபவர்கள் இது போன்ற கோஸ்ட் ஜாப்களை கண்டறிவது குறித்த தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகிறது.

சில நிறுவனங்கள் தங்களுக்கு அந்த வேலைக்கு ஆட்களை தேவை இல்லை என்றாலும் கூட லிங்குடின் தளத்தில் தாங்கள் தொடர்ந்து ஆக்டிவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற வேலைகளை போஸ்ட் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அண்மையில் ,வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யக்கூடிய மேலாளர் பொறுப்பில் இருக்கும் ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கிட்டத்தட்ட 68% பேர் வேலை வாய்ப்புக்காக தாங்கள் போடும் போஸ்ட்களை தொடர்ந்து 30 நாட்களாவது ஆக்டிவாக வைத்திருப்பதாக கூறுகின்றனர். சிலர் ஆறு மாதங்கள் வரை கூட தாங்கள் அதனை ஆக்டிவாக வைத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

தங்களது நிறுவனம் வளர்ச்சி அடைந்து வருகிறது ,ஆட்களை தேர்வு செய்து கொண்டே இருக்கிறது என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவது முதல் காரணம். புதிதாக ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள் இதனால் நமது வேலைக்கு பிரச்சினை வந்து விடலாம் என கருதி தற்போது பணியில் இருக்கக்கூடிய ஊழியர்கள் நன்றாக வேலை செய்வார்கள் போன்ற காரணங்கள் இந்த ஆய்வின் அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன.

அதுமட்டுமன்றி புதிதாக வேலை தேடுபவர்களின் தரவுகளை சேமித்து வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு உருவாகும் போது அவர்களுக்கு அந்த வாய்ப்பினை வழங்குவது போன்ற காரணமும் சொல்லப்படுகிறது.

ஆனால் உண்மையில் வேலை தேடி விண்ணப்பித்து காத்திருந்து பதிலே கிடைக்காமல் இருக்கும் நபர்களின் மனநிலை இதனால் எந்த அளவு பாதிக்கப்படுகிறது தெரியுமா?. தகுதி இருந்தும் நமக்கு வேலை கிடைக்கவில்லை என்பன போன்ற எண்ணங்கள் மன உளைச்சலை உண்டாக்கும்.

ஒரு வேலை வாய்ப்பு விண்ணப்பம் அறிவிப்பு வெளியாகிறது என்றால் 44 நாட்களில் அந்த வேலை வாய்ப்பானது நிரப்பப்பட்டு விடும்.
ஒரு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பம் செய்கிறீர்கள் என்றால் அந்த போஸ்ட் எந்த தேதியில் போடப்பட்டது என்பதை கவனிக்க வேண்டியது.

ஒருவேளை இரண்டு மாதங்கள் அதற்கு மேல் அந்த போஸ்டானது ஆக்டிவாக இருக்கிறது என்றால் நிச்சயமாக அது ஒரு கோஸ்ட் ஜாப் போஸ்ட். அதாவது அந்த வேலைக்கு ஏற்கனவே ஆட்கள் எடுக்கப்பட்டு விட்டார்கள் அல்லது ஒரு போலியான வேலை வாய்ப்பு பதிவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான அறிவிப்புகளை லிங்குடின் உள்ளிட்ட தளங்களில் பார்க்கிறீர்கள் என்றால் உடனடியாக அந்த நிறுவனத்தின் இணையதள பக்கத்திற்கே சென்று அங்கே கேரியர்ஸ் பிரிவில் இந்த வேலைக்கு இன்னும் ஆட்களை எடுக்கிறார்களா என்பதை ஒரு முறை சோதனை செய்து கொள்வது நல்லது.

ஜாப் டிஸ்க்ரிப்ஷன் அதாவது அந்த வேலை எப்படிப்பட்டது அந்த வேலைக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் ,அந்த வேலை செய்பவர்களுக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கும் என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் விவரிக்கப்பட்டு இருக்கும். ஒருவேளை அந்த ஜாப் டிஸ்க்ரிப்ஷனில் அந்த குறிப்பிட்ட பதிவுக்கான டிஸ்கிரிப்ஷன் இல்லை என்றால் கண்டிப்பாக அது ஒரு கோஸ்ட் ஜாப் தான். எனவே அதற்கு விண்ணப்பம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.

அந்த நிறுவனத்தின் பக்கத்திற்கு சென்றாலே அதில் பணிபுரிபவர்களின் பெயர்கள் மற்றும் அந்த நிறுவனத்தின் ஹெச் ஆர் மேனேஜர் உள்ளிட்டோரின் புரோஃபைல்கள் அதில் காட்டும். அவர்களை தொடர்பு கொண்டும் தற்போது இந்த பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்களா என்பதை தெரிந்து கொள்வது நல்லது. இந்த நடைமுறையில் நீங்கள் அந்த ஹையரிங் மேனேஜருடன் ஒரு தகவல் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது.


Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+