சென்னை: பல ஊழியர்களும் கிராஜுவிட்டி என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஆனால் அதன் முழு விளக்கம் தெரியாமல் கூட இருக்கலாம். அதுபோன்ற நபர்களுக்காகத்தான் இந்தப் பதிவு. கிராஜுவிட்டி என்றால் என்ன.. அவை எவ்வாறு கணக்கிடப்படுகிறது.. யாரெல்லாம் தகுதி உடையவர்கள்.. என்பதைப் பார்ப்போம் வாங்க.
கிராஜுவிட்டி என்றால் என்ன?: கிராஜுவிட்டி என்பது ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களைப், பணி ஓய்வு பெறும்போது கௌரவிக்கும் வகையில் கொடுக்கப்படும் தொகையாகும்.

ஒரே நிறுவனத்தில் நீண்ட காலமாக வேலை பார்க்கும் ஒரு ஊழியர், ஏதோ ஒரு காரணத்தினால் வெளியேறும் போது அவருக்கு வழங்கப்படும் தொகை கிராஜுவிட்டி தொகை என்று கூறப்படுகிறது. சரி இப்பொழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்.. கிராஜுவிட்டி தொகை அரசு ஊழியருக்கும் உள்ளதா என்று.. நீங்கள் அரசு ஊழியராக இருந்தாலும் சரி, தனியார் ஊழியராக இருந்தாலும் சரி, கிராஜுவிட்டி தொகை ஒரே மாதிரி தான் கணக்கிடப்படுகிறது. மேலும் அரசு ஊழியர்களுக்கும் கிராஜுவிட்டி தொகை உண்டு.
சமீபத்தில் அலகாபாத் நீதிமன்றம் ஒரு ஊழியர் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற விரும்பினால் அல்லது அவருடைய 62 ஆவது வயதில் ஓய்வு பெற்றால், அவருக்கு இரண்டில் எது நடந்தாலும் கிராஜுவிட்டி தொகை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
எப்போது கிராஜுவிட்டி தொகை வழங்கப்படும்?: ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த சிறப்பு தொகை ஒரு ஊழியர் அதே நிறுவனத்தில் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்தால் அவர் கிராஜுவிட்டி பெற தகுதியுடையவர். அனைத்து அரசு ஊழியர்களும் தனியார் ஊழியர்களும் இத்திட்டத்தின் மூலம் பலனை பெறுகின்றனர்.
அதுவே, ஒரு ஊழியர் சுரங்கத்தில் பணிபுரிந்து 4 ஆண்டுகள் 190 நாட்களைப் பணியாற்றி முடித்து விட்டால், அவருக்கும் கிராஜுவிட்டி வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அதாவது 4 வருடம் 8 மாதங்களில், இது போன்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். வேலை செய்யும் போது, இந்த கிராஜுவிட்டி தொகையை நீங்கள் பெற முடியாது. நீங்கள் நிறுவனத்தில் இருந்து ரிசைன் செய்யும் போது, இந்த தொகை கிடைக்கும்.
இந்த கிராஜுவிட்டி சட்டம், நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள், எண்ணெய் நிறுவனங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில்வே ஆகியவற்றுக்குப் பொருந்தும். ஏதோ ஒரு நிறுவனத்தில் 10 பேருக்கு மேல் பணி புரிந்தால் அவருக்கும் கிராஜுவிட்டியின் பலன் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எவ்வாறு கணக்கிடப்படுகிறது?: இதனை மிக எளிமையாக கணக்கிடலாம் உங்களுடைய அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் நீங்கள் எளிதாக கிராஜுவிட்டியை கணக்கிடலாம். இதற்கு ஒரு ஃபார்முலா பயன்படுத்தப்படுகிறது.
கிராஜுவிட்டி = அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி x (15/26) x (நீங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்த ஆண்டுகளின் எண்ணிக்கை).
உதாரணமாக உங்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ரூ. 35,000 என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்த நிறுவனத்தில் 7 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கிறீர்கள்.. என்றால், உங்களின் மொத்த கிராஜுவிட்டி தொகை = 35,000 x (15/26) x 7 = ரூ. 1,41,346.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications