டெல்லி: நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடுவதற்கு அனைவரும் தயாராகி வருகிறோம். இந்த நாளில் ஹர்கர் திரங்கா இயக்கத்தில் இணைந்து அதற்கான சான்றிதழை எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஹர்கர் திரங்கா இயக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை நினைவுபடுத்தியுள்ள பிரதமர் மோடி 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் முகப்பு படத்தை நீக்கிவிட்டு தேசிய கொடியை வைத்திருக்கும் பிரதமர், சுதந்திர தினத்தையொட்டி ஹர்கர் திரங்கா என்பதை மறக்க முடியாத மக்கள் இயக்கமாக மீண்டும் மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். நான் எனது முகப்பு படத்தை மாற்றுகிறேன் இதன் மூலம் நமது தேசியக்கொடியை கொண்டாடுவதில் என்னுடன் அனைவரும் இணைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
தேசியக்கொடியுடன் உங்களது செல்பிக்களை harghartiranga.com இணையதளத்தில் பகிருங்கள் என்றும் அந்த பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார். ஹர்கர் திரங்கா என்பதற்கு அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடி என அர்த்தம் . அதாவது மக்கள் நமது தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கொண்டுவரப்பட்ட ஒரு பிரச்சாரம் தான் இது . 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு ஆஸாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற பெயரின் கீழ் ஹர்கர் திரங்கா என்ற பிரச்சாரத்தை அறிமுகம் செய்தது.
இதன்படி மக்கள் தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றி நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட ஊக்குவிக்கப்பட்டனர். 2022 ஆம் ஆண்டு முதலில் மக்கள் இவ்வாறு வீடுகளில் தேசிய கொடி ஏற்றி அதனை புகைப்படமாக எடுத்து இந்த தளத்தில் பதிவிடும் போது அவர்களுக்கு ஒரு சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இந்த சான்றிதழை பலரும் மிகப்பெருமையாக தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த சான்றிதழை பெறுவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
முதலில் harghartiranga.com என்ற ஹர்கர் திரங்காவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அங்கே Upload Selfie என்பதே கிளிக் செய்ய வேண்டும்.
இதனை அடுத்து Next என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
உங்களது பெயர், தொலைபேசி எண் மற்றும் மாநிலம் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
இதனை அடுத்து தேசியக் கொடியுடன் நீங்கள் இருக்கக்கூடிய புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பின்னர் Generate Certificate என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு ஹர்கர் திரங்கா சான்றிதழ் கிடைத்து விடும்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications