இந்தியாவில் ஹவானா சிண்ட்ரோம் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து பெரும் அபாயத்தைத் தடுக்கும் கடமைக்கு மத்திய அரசு ஆளாகியுள்ளது.
கடந்த வாரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு மனு மீதான விசாரணையின் போது ஹவானா சிண்ட்ரோம் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பெங்களூரை சேர்ந்த அமர்நாத் சாகு என்பவர் தான் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ஹவானா சிண்ட்ரோம் இந்தியாவில் இருக்கிறதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு தரப்பு, விசாரணையைத் தொடங்கி விரிவான ஆய்வுகளை செய்து 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிப்பதாகத் தெரிவித்தது.
ஹவானா சிண்ட்ரோம் என்பது உலகம் முழுவதுமுள்ள அமெரிக்க உளவுத்துறை மற்றும் தூதரகத்துறை அதிகாரிகள் ஒருவகையான மனநிலை பாதிப்புகளுக்கு ஆளாகுவது தான். இந்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மனக்குழப்பம், தலைசுற்றல், குமட்டல், கடும் தலைவலி, நினைவு தப்புதல், தடுமாற்றம் போன்ற நிலை ஏற்படும்.
2016ஆம் ஆண்டில் இந்த பாதிப்பு பரவியது. கியூபாவின் ஹவானாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்து வந்த அதிகாரிகளுக்கு முதன் முதலாக இந்த சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பைக் கண்டறிய முடிந்தபோதும் இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை. ஹைபிரிக்யுன்ஸி மேக்ரோவேவ் கதிர்வீச்சு மூலம் இது பரவக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டில் டெல்லிக்கு வந்த சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் உடன் இருந்த அமெரிக்க உளவு அதிகாரிக்கு இந்த ஹவானா சிண்ட்ரோம் அறிகுறிகள் இருந்தது கண்டறியப்பட்டது.
ஹவானா சிண்ட்ரோம் என்றால் என்ன?
ஹவானா சிண்ட்ரோம் என்பது 2016 ஆம் ஆண்டு பரவிய ஒருவகை பாதிப்பு. சிஐஏ ஊழியர்களுக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. காதுக்குள் ரீங்காரம், தலை வலி, உடல் சோர்வு போன்ற லேசான அறிகுறிகளும் உடல் உறுப்பு செயலிழப்பு, மூளை பாதிப்பு போன்ற கடுமையான அறிகுறிகளும் இருக்கலாம்.
அறிகுறி கண்டறியப்பட்ட இடத்தை வைத்து ஹவானா சிண்ட்ரோம் எனப் பெயரிடப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஞாபக மறதி, குமட்டல் போன்ற அறிகுறிகளும் இருந்தன. இதற்கான துல்லியமான காரணங்கள் இதுவரை கண்டரியப்படவில்லை. ஒலி அடிப்படையிலான ஆயுதங்கள் மூலம் இந்த பாதிப்பு பரவுகிறது எனத் தெரிகிறது.
பரவலாக நடத்தப்பட்ட விசாரணைகள் முடிவில் இந்த பாதிப்புக்கு எந்தவொரு தீர்வும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அமெரிக்க அரசு அதிகாரிகள் வெளிநாடுகளில் கடும் பீதியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications