அமெரிக்க அதிபராக பதவி ஏற்றது முதலே டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
இந்திய ஐடி ஊழியர்கள்: அமெரிக்க டெக் நிறுவனங்களை பொறுத்தவரை பெரும்பாலும் இந்தியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் அவுட் சோர்சிங் முறையில் தான் ஐடி , பிபிஓ சேவைகளை பெறுகின்றன. இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களுக்கு தான் சேவை வழங்குகின்றன. பல இந்தியர்கள் வொர்க் ஃபிரம் முறையிலும், ஃபீரிலேன்சர் முறையிலும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வேலை செய்கின்றனர்.

புது சட்டம்: இந்த சூழலில் தான் அமெரிக்க அரசு இந்தியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்களை ஐடி வேலைகளில் அவுட் சோர்சிங் முறையில் பணிக்கு அமர்த்துவதை தடுப்பதற்காக HIRE act என்ற சட்டத்தை அமெரிக்கா அரசு கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கிறது . இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் நடைமுறையே பெரிய அளவில் மாற்றம் காணும்.
அவுட் சோர்சிங் வேலை: பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தி விடுகின்றன இதன் காரணமாக அமெரிக்காவை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து காணப்படுகிறது . தற்போது கொண்டுவரப்பட இருக்கும் இந்த HIRE act சட்டம் என்பது அதனை மாற்றி அமைக்கும்.
HIRE act என்றால் என்ன: செனட் உறுப்பினர் பென்னி மொரேனோ கொண்டு வந்திருக்கும் இந்த சட்டம் Halting International Relocation of Employment Act என அழைக்கப்படுகிறது . இது அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களை தங்கள் வேலைக்கு பணி அமர்த்துவதை தடுக்கும். அதாவது அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் வெளிநாட்டை சேர்ந்த ஒரு நபரை வேலைக்கு அமர்த்துகிறது அந்த நபர் செய்யக்கூடிய வேலை அமெரிக்க வாடிக்கையாளர்களை சென்று சேருகிறது எனும்போது அதற்கு அளிக்கும் சம்பளம் அல்லது கட்டணத்திற்கு இனி 25% வரி செலுத்த வேண்டும்.
கூடுதல் செலவு: உதாரணமாக அமெரிக்க நிறுவனம் இந்திய நிறுவனம் அல்லது இந்திய ஊழியரிடம் அமெரிக்க வாடிக்கையாளருக்கான ஒரு சேவையை பெற்று அதற்கு 1 கோடி ரூபாய் பணம் வழங்குகிறது என்றால் அந்த 1 கோடி ரூபாய்க்கு 25 லட்சம் ரூபாயை வரியாக அமெரிக்க அரசுக்கு செலுத்த வேண்டும். மேலும் அவுட் சோர்சிங் முறையில் பெறும் சேவைகளுக்கான கட்டணங்களுக்கு எந்த ஒரு வரி சலுகையும் அமெரிக்க அரசிடம் இருந்து கிடைக்காது.
பாதிப்பு: தங்களுடைய வேலைகளை அவுட் சோர்சிங் முறையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வழங்கக்கூடிய அமெரிக்க நிறுவனங்கள் இந்த சட்டத்தின் மூலம் பெரிய அளவில் பாதிக்கப்படும் . அதாவது வெளிநாட்டு நபர் அல்லது நிறுவனத்திடம் பெறும் சேவைகளுக்கு இனி கூடுதலாக 25% செலவிட வேண்டி இருக்கும்.
இந்தியர்களுக்கு பாதிப்பு: இந்த சட்டத்தின் மூலம் கன்சல்டிங் நிறுவனங்கள் மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள், பிபிஓ நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட இருக்கின்றன. இவற்றில் எல்லாம் பெரிய அளவில் வேலை செய்வது இந்தியாவை சேர்ந்த டெக்கிகள் தான் என்பது தான் இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் . வெளிநாட்டினரிடம் வேலை பெறுவதற்கு அதிக செலவு செய்ய வேண்டும் என்பதால் அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டிலேயே ஆட்களை தேடும். அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் டிசம்பர் 31ஆம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இனி நீங்கள் இழக்கப்போகும் வரிச் சலுகைகள் என்னென்ன? புதிய விதிகளால் லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications