பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவின் நேஷனல் கிரீன் ஹைட்ரஜன் கொள்கையின் முதல் பகுதியை வெளியிட்டு உள்ளது.
இந்தக் கொள்கை மூலம் இந்தியாவின் எனர்ஜி துறையை டிகார்பனைஸ் செய்வதற்கும், கச்சா எண்ணெய் மற்றும் புதை படிவ எரிபொருட்கள் பயன்படுத்தும் அளவீட்டைக் குறைக்கும் முதல் படியாகவும் அமைய உள்ளது. இந்தியாவின் நெட் ஜீரோ இலக்கை அடைய இந்தக் கொள்கை முக்கியப் பங்கு வகிக்க உள்ளது.
கிரீன் ஹைட்ரஜன்
இந்தியாவில் கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தியைக் குறுகிய காலகட்டத்தில் பெரிய அளவில் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இத்துறையில் இருக்கும் உற்பத்தியாளர்கள், ஜெனரேஷன் நிறுவனங்கள் (ஜென்கோஸ்) மற்றும் விநியோக உரிமதாரர்களுக்கு (டிஸ்காம்கள்) மத்திய அரசு சில முக்கியச் சலுகைகளை இந்த நேஷனல் கிரீன் ஹைட்ரஜன் பாலிசியில் அறிவித்தது உள்ளது.
இரண்டாம் பகுதி
இக்கொள்கையின் இரண்டாம் பகுதியில், கிரீன் ஹைட்ரஜன் மற்றும் கிரீன் அம்மோனியாவை மட்டுமே சுத்திகரிப்பு நிலையங்கள், உர நிறுவனங்கள் போன்றவை பயன்படுத்த வேண்டும் கட்டாயப்படுத்தும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
PLI திட்டம்
மேலும் கிரீன் ஹைட்ரஜன் மற்றும் கிரீன் அம்மோனியா தயாரிக்க PLI திட்டத்தையும் இக்கொள்கையின் இரண்டாம் பகுதியில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தற்போது இத்திட்டத்திற்கான செலவுகளைக் கணிக்கும் பணியில் நிதித்துறை உள்ளது, செலவின துறை வெளியிடும் மதிப்பீட்டை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பின்னர் இத்துறைக்கான PLI திட்டம் வெளியிடப்படும்.
நிர்மலா சீதாராமன், மோடி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2021 பட்ஜெட் அறிக்கையில் கிரீன் ஹைட்ரஜன் திட்டத்தைப் பற்றி முதன்முதலில் அறிவித்தார். இதன் பின் சுமார் ஒரு வருடத்திற்குப் பின், வியாழக்கிழமை மத்திய மின்துறை அமைச்சகம் இக்கொள்கையின் முதல் பகுதியை வெளியிட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் மாதம் தனது சுதந்திர தின உரையில் தேசிய ஹைட்ரஜன் எரிசக்தி திட்டத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்
தற்போது கிரீன் ஹைட்ரஜன் தயாரிப்புத் துறையில் பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது. தனியார் பிரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குழுமம், லார்சன் & டூப்ரோ மற்றும் கிரீன்கோ ஆகியவையும், பொதுத்துறை பிரிவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்), கெயில் (இந்தியா) லிமிடெட் மற்றும் என்டிபிசி லிமிடெட் போன்றவை இறங்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications