இந்த டிஜிட்டல் யுகத்தில் மனிதர்கள் வேலை செய்யும் முறையே பெரிய மாற்றத்தை கண்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு அலுவலகத்திற்கு சென்று தான் வேலை செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது மாறிவிட்டது, வீட்டில் இணைய இணைப்பும் ஒரு லேப்டாப்பும் இருந்தாலே போதும் அலுவலகத்தில் செய்யக்கூடிய அதே வேலையை வீட்டில் இருந்தபடியே செய்ய முடியும் என்ற சூழல் வந்துவிட்டது .
பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணம். ஆனால் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஒருபுறம் ஊழியர்களுக்கும் பிரச்சனை ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மை .திடீரென கிளைண்ட் உடன் கால் இருக்கிறது என வேலை நேரம் முடிந்து வீட்டுக்கு வந்த பின்னரும் அலுவலக வேலைகளை செய்ய சொல்வது, மீட்டிங் அட்டென்ட் செய்ய சொல்வது, மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க கூறுவது என ஊழியர்கள் அலுவலகம் முடிந்து ட்டுக்கு வந்தாலும் அல்லது வீட்டிலேயே வேலை செய்தாலும் பணி நேரம் முடிந்த பின்னரும் அலுவலக வேலைகளை பார்க்கும்படி நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள்.

இது ஊழியர்களுக்கு மன ரீதியான அழுத்தத்தை தருகிறது என்பது மட்டும் இல்லாமல் குடும்பத்தினருடன் பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழலில் தான் ஊழியர்களின் நலனை பாதுகாக்க கூடிய வகையில் கேரள மாநில அரசு ஒரு முன்னோடி மசோதாவை கொண்டு வர முடிவு செய்திருக்கிறது . இதுதான் Right to disconnect bill. தனிநபர் மசோதாவாக இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் தங்களுடைய அதிகாரப்பூர்வ பணி நேரத்திற்குப் பிறகு அலுவலக வேலைகளை செய்வதிலிருந்து சட்டபூர்வமான விலக்கு தரக்கூடிய ஒரு மசோதா தான் இது .
ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என அதிகாரப்பூர்வமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ அந்த வேலை நேரத்தை தாண்டி அலுவலகம் மற்றும் அந்த ஊழியரின் மேலாளர்கள் அவர்களை அலுவலக ரீதியான எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. இந்த சட்டம் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மிகச்சிறந்த ஒரு சட்ட பாதுகாப்பு ஏற்படுத்தி தர இருக்கிறது.
ஊழியர்கள் அதிகாரப்பூர்வ பணி நேரம் முடிந்த பிறகு வரக்கூடிய அலுவலக அழைப்புகளை ஏற்காமல் தவிர்க்கலாம் , மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது , மீட்டிங் அட்டென்ட் செய்ய வேண்டும் என கட்டாயம் கிடையாது , போனில் அழைத்தால் அதனை எடுத்துப் பேச வேண்டும் என்று அவசியம் கிடையாது. இவ்வாறு பணி நேரம் கடந்த பிறகு அலுவலக ரீதியான விஷயங்களை தவிர்க்கக்கூடிய ஊழியர்கள் மீது நிறுவனங்கள் பணி நீக்கம் உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாத அளவிலான ஒரு பாதுகாப்பை இந்த மசோதா தருகிறதாம்.

பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளும் ஊழியர்களை பணி நேரம் தாண்டி மற்ற சமயங்களில் தொடர்பு கொள்வது மனரீதியான பாதிப்பும் வேலை செய்யும் நிறுவனத்தின் மீது ஒரு வெறுப்புணர்வையும் உண்டாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அடிக்கடி ஊழியர்களுக்கு தலைவலி, மன அழுத்தம் போன்ற உடல் நல பிரச்சினைகளையும் ஏற்படுத்தி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிக்கலை ஏற்படுத்துகிறதாம்.
கேரள மாநில அரசு கொண்டுவரக்கூடிய மசோதா வெற்றி பெற வேண்டும் என்றால் அதில் சில விஷயங்களை தெளிவுப்படுத்த வேண்டும் என ஊழியர்களும் ஊழியர்களுக்கான அமைப்புகளும் கூறுகின்றனர். இதன்படி தங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வேலை நேரத்தை கடந்து அலுவலக ரீதியிலான அழைப்புகளை ஏற்காமல் தவிர்க்கலாம், மின்னஞ்சல் எஸ்எம்எஸ்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் வேலை நேரம் என்பது என்ன, ஒரு அவசரகால தகவல் தொடர்பு என்ன என்பதற்கான வரையறைகள் அதில் இடம்பெற வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களுடைய புகார்களை அளிக்க ஏதுவாக கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அந்த கமிட்டியில் பிராந்திய இணை தொழில் ஆணையர் உறுப்பினராக இருப்பார் அவர் ஊழியர்கள் வழங்கக்கூடிய புகார்கள் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பார் என்பதை கொண்டு வர வேண்டும்.
அதேபோல நிறுவனங்களுக்கும் , மேலாளர் பதவிகளில் இருப்பவர்களுக்கும் பணி நேரத்தை தாண்டி ஊழியர்களை தொடர்பு கொள்ளாமல் இருப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பான பயிற்சிகளையும் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் இந்த சட்டத்தின் மூலம் பெறப்பட்ட புகார்கள் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஊழியர்களின் திருப்தி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.
ஊழியர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் இந்த சட்டத்தை பின்பற்றி வேலை நேரம் தாண்டி அலுவலக ரீதியான விஷயங்களை மேற்கொள்வதை தவிர்ப்பதற்கான ஒரு பாதுகாப்பு வழங்க கூடியதாக இந்த சட்டம் இருக்க வேண்டும். நிறுவனங்களும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காத வகையில் சட்ட பாதுகாப்பு தர வேண்டும் .
கேரள அரசின் இந்த சட்டம் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களின் உரிமைகளை நிலைநாட்ட உதவும் என்பதில் என்பதில் எந்த மாற்றமும் இல்லை .ஆனால் இதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதில் தான் இது வெற்றி பெறுகிறதா? இல்லையா? என்பதே இருக்கிறது .இதற்கு அலுவலக ரீதியான மாற்றங்கள் நிறுவனங்களிடமிருந்தும் வர வேண்டும் அதற்கு அரசு சில விதிமுறைகளை மிகக் கடுமையான முறையிலும் தீவிரமான முறையிலும் பின்பற்ற வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications