பங்குச்சந்தைக்கு புதிதாக முதலீடு செய்ய வருபவர்களுக்கு பல குழப்பங்கள் இருக்கும். குறிப்பாக வேகமாக லாபத்தை பார்க்க வேண்டும் என திட்டமிடுபவர்கள் அடிப்படையை முழுமையாக தெரிந்துக்கொள்ளாமல் முதலீடு செய்து மாட்டிக்கொள்வது வழக்கமான ஒன்று.
பங்குச்சந்தையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் எல்லாம் தங்களுடைய முதலீட்டின் பேஸ்மென்ட்-ஐ எப்போதும் ஸ்டிராங்காக வைத்திருப்பார்கள். இதனாலேயே கிட்டத்தட்ட வருடம் முழுவதும் அவர்களுடைய போர்ட்போலியோ லாபகரமானதாகவே இருக்கும்.

இத்தகைய போர்ட்போலியோவை உருவாக்க அனைவருக்கும் தேவை பொறுமை அதேபோல், அவசரம் இல்லாமல் முதலீடு செய்யும் பழக்கம். இந்த இரண்டும் உங்களுக்கு வந்துவிட்டது என நீங்கள் நினைத்தால் அடுத்தது நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் பங்குகளின் தன்மைகள் தான்.
லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் பங்குகளின் தன்மைகள் குறித்து அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் சமுகவலைத்தளத்தில் மோகன் ஆர்கே என்பவர் பதிவிட்டு உள்ளார். இந்த பதிவு பங்குச்சந்தையில் புதிதாக இறங்கியவர்கள், பங்குச்சந்தையில் இறங்க திட்டமிடுவோர் அல்லது பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ரூட்டை மாற்ற நினைப்பவர்களுக்கு பயன்படும்.
லார்ஜ் கேப் பங்குகள்: ஒரு வகையில் பார்த்தால் பங்குச் சந்தையில் நாம் வாங்கும் லார்ஜ் கேப் பங்குகள் நம் நெருங்கிய சொந்தங்கள் போல் (அப்பா, அம்மா, அண்ணன், தங்கை) அவர்களைப் பற்றிய எல்லா விஷயங்களும் நம் விரல் நுனியில் இருக்கும்.
நாம் ஓரளவிற்கு வளர்ந்த பிறகு இவர்களால் நமக்கு பெரிய அளவில் சர்ப்பிரைஸ் கிடைக்காது; அதேபோல் நம்மை காயப்படுத்தவும் மாட்டார்கள். நம் கஷ்ட காலத்தில் மற்றவர்கள் நம்மை கைவிடும் போதும் இவர்கள் நம் கூடவே இருப்பார்கள்; அப்போதுதான் இவர்களின் அருமையும் நமக்கு புரிய வரும்.
மிட் கேப் பங்குகள் : இவர்கள் நம் நண்பர்கள், காதலி(கள்) போல். இவர்களைப் பற்றி முழுதும் நமக்கு தெரியும் என்று சொல்ல முடியாது. ஆனாலும் ஓரளவிற்கு அடிப்படை விஷயங்கள் எல்லாமும் தெரிந்திருக்கும்.
யோசித்துப் பார்த்தால், இவர்களால் தான் நாம் பெரும்பாலான நேரங்களில் மகிழ்ச்சியாக இருந்திருப்போம். சில நேரங்களில் நம்மைக் காயப்படுத்தவும் செய்வார்கள். நம்மோடு சண்டை போட்டு கோபத்தில் விலகிச் சென்றாலும், சில நாட்களிலேயே திரும்பி வந்து விடுவார்கள்.
ஸ்மால் கேப் பங்குகள் : நமக்கு அறிமுகமே இல்லாதவர்கள், டீ கடையில் பார்ப்பவர்கள் போல். இவர்களைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. இவர்கள் சொல்வதையெல்லாம் உண்மையா, பொய்யா என்று கண்டுபிடிக்கவும் முடியாது. நம்மைசுற்றி அதிகமும் இவர்கள்தான் இருப்பார்கள். பெரும்பாலும், இவர்களால் பணமும், நேரமும்தான் விரயம்.
அத்திபூத்தார்போல் நமக்கு ஒரு நல்லவர் கிடைத்து விட்டால் நம் வாழ்வு மகிழ்ச்சியால் திளைக்கும். சில வருடங்களிலேயே இவர்கள் நமக்கு நெருங்கிய நண்பர்களாகவும், அதன் பின் குடும்பத்தில் ஒருவராகக் கூட மாறுவர். ஆனால், அப்படி ஒருவரை கண்டடையும் முன், பல துரோகங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications