இந்தியாவில் கிடைக்கும் வாழ்க்கை சிறந்ததா அல்லது மேற்கத்திய நாடுகளில் கிடைக்கும் வாழ்க்கை சிறந்ததா என்பது பற்றி தான் சமூகவலைதளங்களில் தீவிரம் ஆக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கிடைக்கும் வாழ்க்கைக்கும் மேற்கத்திய நாடுகளில் கிடைக்கும் வாழ்க்கைக்கும் வசதிகளுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. இவை இரண்டுமே தனக்கே உரிய பாணியில் தனித்துவங்களை கொண்டிருக்கின்றன.
அண்மையில் அமெரிக்காவில் வசித்து வரக்கூடிய ஒரு இந்திய பெண் இரு நாடுகளுக்கும் இடையிலான வாழ்க்கை தரங்களை ஒப்பிட்டு தன்னுடைய கண்ணோட்டத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். அவருடைய இந்த பதிவு பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.

நிஹாரிகா கவுர், தன்னுடைய எக்ஸ் கணக்கில் அமெரிக்காவில் 11 நாட்களாக வாழ்ந்த தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் "அமெரிக்காவில் இன்று 11ஆவது நாள், நேற்று மாலை எனக்கு ஒரு யோசனை வந்தது, இது உங்களுக்கு கோபத்தை கூட ஏற்படுத்தலாம் ஏனெனில் நான் இந்தியா மற்றும் அமெரிக்க வாழ்க்கையை ஒப்பிடப் போகிறேன்" என அதில் தெரிவித்திருந்தார். இந்தியாவில் கிடைக்கும் வாழ்க்கை முறை மற்றும் அமெரிக்காவில் கிடைக்கும் வாழ்க்கை முறைகளை ஒப்பிட்டுள்ளார்.
"இந்தியாவில் ஆடம்பரமான வாழ்க்கை என்பது எப்படி இருக்கும் என்பதை நான் அனுபவித்து இருக்கிறேன், நினைத்த நேரத்தில் நீங்கள் ஆர்டர் செய்தால் உணவு உங்கள் வீட்டைத் தேடி வரும், பத்து நிமிடங்களில் மளிகை பொருட்களை உங்கள் வீட்டைத் தேடி வரும், வீட்டு வேலை செய்பவர்களும் குறைந்த ஊதியத்திற்கு கிடைப்பார்கள். ஆனால் இதுதான் வாழ்க்கை தரமா என்பது நான் இங்கே வந்த பிறகு என்னை என்னை நானே கேட்டுக் கொள்ளும் கேள்வியாக இருக்கிறது" என கூறியுள்ளார்.
வாழ்க்கையின் உண்மையான தரம் என்பது நமக்கு அடிப்படையாக கிடைக்க வேண்டிய தூய்மையான காற்று , தொடர்ச்சியான மின்சாரம், தண்ணீர் மற்றும் ஏராளமான பசுமை பகுதி மற்றும் சிறந்த சாலைகள் என குறிப்பிட்டுள்ளார். சுத்தமான காற்று இருந்தால் அடிப்படை விசயம், தெரு விலங்குகளின் அச்சமோ அல்லது காரை கொண்டு வந்து யாரேனும் நம் மீது ஏற்றி விடுவார்களோ என்ற அச்சமோ இல்லாமல் பயமின்றி நடந்து செல்வதற்கு ஒரு சிறந்த உள்கட்டமைப்பு இருக்க வேண்டும்.
உங்களுக்கு பிடித்த ஆடைகளை அணியும் சுதந்திரத்தை பெறுவது, சீரான மின்சார இணைப்பு இதெல்லாம் தான் உண்மையான ஆடம்பரம் எனக் கூறியுள்ளார். இந்த 11 நாட்களாக தனக்கு கிடைத்த மகிழ்ச்சியையும் பகிர்ந்து உள்ளார். அதாவது காலை நடை பயணம், தூய்மையான காற்று, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை பார்க்கும் வசதி மற்றும் பறவைகளின் ஒலி ஆகுவற்றை பதிவிட்டுள்ளார்.
எதுவாக இருந்தாலும் வாழ்க்கை தரம் மற்றும் ஆடம்பரம் பற்றிய எனது பார்வை மட்டுமே இது, அனைவருக்கும் இது ஒத்துப் போகும் என நான் கூறவில்லை என தெரிவித்தார்.
நிஹாரிகாவின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் அமெரிக்க வாழ்க்கை முறை மற்றும் இந்திய வாழ்க்கை முறை, அமெரிக்க கலாச்சாரம் மற்றும் இந்திய கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதங்களை எழுப்பியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications