எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய நாளில் இருந்து பல மாற்றங்கள் நடந்து வருகிறது, ஆனால் இந்த ஒரு மாற்றம் மட்டும் எலான் மஸ்க்-கிற்குக் கடுப்பு ஏற்றி வருகிறது என்றால் மிகையில்லை.
எலான் மஸ்க் டிவிட்டர் மூலம் பேஸ்புக், இன்ஸ்டா, ஸ்னாப்சாட், யூடியூப், டிக்டாக் மற்றும் பல முன்னணி பேமெண்ட் நிறுவனங்களின் வர்த்தகம், வாடிக்கையாளர்களைப் பெற மாஸ்டர் பிளான் போட்டு வரும் நிலையில் Mastodon மட்டும் டிவிட்டர் நிறுவனத்தில் இருந்தே அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
அப்போ டிவிட்டருக்கு போட்டி இனி Mastodon தானா..? Mastodon தளம் அப்படி என்ன ஸ்பெஷல்..? ஏன் திடீரென பெரும் கூட்டம் Mastodon தேடி ஓடுகிறது..?
எலான் மஸ்க்
எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய பின்பு டிவிட்டர் யூசர் எண்ணிக்கையில் சில மாற்றங்களும், தடுமாற்றங்களும் இருந்தாலும் டிவிட்டரை பயன்படுத்தும் நேரம், எண்ணிக்கை ஆகியவை பெரிய அளவில் அதிகரித்துள்ளது என டெக் நிறுவனத் தலைவர்கள் கூறுகின்றனர்.
பிரபலங்கள்
இதேவேளையில் எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டர்-ன் சில முடிவுகளும், அறிவிப்புகளும் பிரபலங்கள் மத்தியில் கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக டிவிட்டர் தளத்தை விட்டு Gigi Hadid மற்றும் Amber Heard ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
Mastodon தளம்
இதேவேளையில் எலான் மஸ் கைப்பற்றிய பின் டிவிட்டரில் இருந்து குறிப்பிடத்தக்க அளவிலான யூசர்கள் Mastodon தளத்திற்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது அக்டோபர் 27 முதல் சுமார் 4,89,003 யூசர்கள் Mastodon தளத்திற்குச் சென்றுள்ளனர். Mastodon தளத்தில் என்ன ஸ்பெஷல்..?
ஒப்பன் சோர்ஸ்
Mastodon நிறுவனம் தன்னை federated social network என அடையாளப்படுத்திக்கொள்கிறது. Mastodon தளம் முற்றிலும் டிவிட்டர் போலவே இருப்பதால் முதல் முறை பார்க்கும் போது இரண்டும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாதது வெளிப்படையாகத் தெரிகிறது. இதேபோல் Mastodon மொத்தமாக Open Source மூலம் இயங்குகிறது.
ஸ்பெஷலான விஷயம்
ஆனால் Mastodon தளத்தில் ஒரு ஸ்பெஷலான விஷயம் உள்ளது லாக்இன் செய்யும் போதே உங்கள் தரவுகளைச் சேமிக்கும் சர்வர்களைத் தேர்வு செய்யும் வாய்ப்புக் கிடைக்கிறது, ஒவ்வொரு யூசரும் தனக்கான விதிகளைத் தானே உருவாக்கிக்கொள்ள முடியும் moderation விதிகள் உட்பட.
நிறுவனர் Eugen Rochko
இதன் மூலம் நீங்கள் விரும்பாத கண்டென்ட் உங்கள் FEEDல் வராது. கடந்த ஒரு வாரத்தில் Mastodon தளத்தில் அதிகப்படியான யூசர்கள் வந்த காரணத்தால் பல தொழில்நுட்ப பிரச்சனைகள் உருவானதாக இத்தளத்தின் நிறுவனரும், சிஇஓவும், தலைமை ப்ரோகிராமருமான Eugen Rochko. தெரிவித்தார்.
மீம்
இதேவேளையில் Mastodon தளம் குறித்து டிவிட்டர் உட்பட அனைத்து சமுக வலைத்தளத்திலும் மீம் அதிகளவில் டிராண்டாகி வருகிறது. அதில் சில உங்களுக்காக
Mastodon தளம் எப்படி வேலை செய்கிறது என விளக்கும் போது இதுதான் பெரும்பாலானவர்களின் ரியாக்ஷன் ஆக உள்ளது.
ரொம்ப ஈசி
Mastodon தளத்தில் சேர்வது ரொம்ப ஈசி.. ஆனா..
கிரேட்டா துன்பெர்க்
ஸ்வீடன் நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா துன்பெர்க் Mastodon தளத்தில் சேர்ந்துள்ளார்
அப்பா...
அப்பா நாம எங்க போறோம்..! இது டிவிட்டரை விட்டு வெளியேறுவோரின் சரியான ரியாக்ஷன்
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications