பெங்களூரு, கர்நாடகா: இந்தியாவில் குயிக் காமர்ஸ், இ காமர்ஸ், செயலிகளின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதில் வேலை செய்பவர்களை கிக் பணியாளர்கள் என அழைக்கிறோம். கல்லூரி செல்லும் மாணவர்கள் தொடங்கி பெண்கள் வரை பலரும் பார்ட் டைமாகவும் முழு நேரமாகவும் இந்த டெலிவரி வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
இவர்களுக்கு என சமூக பாதுகாப்பு திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தான் கர்நாடக அரசு கிக் பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. கர்நாடக மாநில அரசு கொண்டு வந்திருக்கும் கிக் பணியாளர்களுக்கான சமூக பாதுகாப்பு மற்றும் நலன் அவசர சட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் இந்தியாவிலேயே முதன் முதல் மாநிலமாக கர்நாடகாவில் கிக் பணியாளர்களை பாதுகாப்பதற்கான ஒரு சட்ட ரீதியான கட்டமைப்பு கொண்டு வரப்பட இருக்கிறது.

இந்த அவசர சட்டத்தின்படி சோமேட்டோ ,ஸ்விக்கி, ஓலா , ஊபர், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களிடம் வேலை செய்யும் நபர்களுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1 முதல் 5 சதவீதம் வரையிலான தொகையை கிக் பணியாளர்களின் நலனுக்கான நிதிக்காக செலுத்தியாக வேண்டும். கிக் பணியாளர்களுக்கான சமூக பாதுகாப்பு நிதியத்தில் இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு காலண்டிற்கும் இந்த பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். கர்நாடக அரசு இந்த பணத்தை கொண்டு கிக் பணியாளர்களுக்கான சமூக பாதுகாப்பு கட்டமைப்பை செயல்படுத்தும்.
எந்தெந்த சேவைகளுக்கு எவ்வளவு செஸ் வரி செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களை கூடிய விரைவில் கர்நாடக மாநில அரசு வெளியிடப்பட இருக்கிறது. கர்நாடகா அரசு இதற்காகவே கர்நாடகா கிக் பணியாளர்கள் நல வாரியம் ஒன்றை அமைத்திருக்கிறது. இந்த நல வாரியம் தான் இந்த பணிகளை மேற்பார்வையிட இருக்கிறது. மொத்தம் 16 உறுப்பினர்களை கொண்டிருக்கும் கர்நாடகா கிக் பணியாளர்கள் நல வாரியத்தில் தொழிலாளர் துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் மற்றும் ஐடி துறை அமைச்சக அதிகாரிகள் , கிக் ஊழியர்களின் நான்கு பிரதிநிதிகள், ஓலா, ஊபர், ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் 4 பேர், சிவில் சொசைட்டி உறுப்பினர்கள் இரண்டு பேர் இடம்பெற்றுள்ளனர்.
இதன்படி கர்நாடக மாநிலத்தில் வேலை செய்யக்கூடிய அனைத்து கிக் ஊழியர்களுக்கும் தனித்துவமான ஒரு ஐடி கார்டு வழங்கப்படும். இந்த புதிய அவசர சட்டத்தின் படி நிறுவனங்கள் கிக் பணியாளர்களை 14 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் தந்து எழுத்துப்பூர்வமான விளக்கம் அளித்த பிறகு தான் நிறுவனங்கள் வேலையில் இருந்து நீக்க முடியும்.
கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை சுமார் 30,000 பேர் இந்த இதுபோன்ற கிக் பணியாளர்களாக வேலை செய்கின்றனர். இவர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட நிதியத்தில் ஓலா, ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் 1 முதல் 5% தொகையை செலுத்த வேண்டும் என அரசு கூறியுள்ளது. இது செஸ் வரி மூலம் திரட்டப்பட இருக்கிறது. இந்த செஸ் வரியை இந்நிறுவனங்கள் வாடிக்கையாளர் மீது சுமத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிதியானது, கிக் பணியாளர்கள், சேவையை பெறக்கூடிய வாடிக்கையாளர்கள் ,அவர்களுக்கு வேலை வழங்கக்கூடிய நிறுவனங்கள், ஆகிய மூன்று தரப்பின் பங்களிப்பும் இருக்கும் வகையில் தான் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என கர்நாடக மாநில தொழிலாளர் துறையின் கூடுதல் ஆணையரான மஞ்சுநாத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த செஸ் வரியை நிறுவனங்கள் இறுதியாக வாடிக்கையாளர் மீது தான் திணிக்க வாய்ப்புள்ளது என சொல்லபப்டுகிறது. இருந்தாலும் கர்நாடக மாநில அரசு இந்த சட்ட ஆவணங்களை இறுதிப்படுத்தி அந்த விதிகளை முறையாக வெளியிடும்போது தான் அனைத்து விவரங்களும் வெளிவரும். ஒருவேளை செஸ் வரியின் ஒரு பகுதியை நிறுவனங்கள் வாடிக்கையாளர் மீது திணித்தால் நாம் டெலிவரி சேவைகளுக்கு இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.இதனிடையே போர்ட்டர் நிறுவனம் கிக் பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வருவதை நாங்கள் வரவேற்கிறோம், இந்த துறையில் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என கூறி இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications