டெல்லி: இளைஞர்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு மை பாரத் 2.0 (MY Bharat 2.0) அறிவித்திருக்கிறது . செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையில் இளைஞர்களை அவர்களின் வேலை வாய்ப்புக்கான திறன்களை மேம்படுத்தும் ஒரு தளமாக மை பாரத 2.0 திட்டம் செயல்படும் என அரசு தெரிவித்து இருக்கிறது.
மத்திய இளைஞர்கள் விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் இந்திய டிஜிட்டல் கழகம் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் மை பாரத் 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. MY (mera yuva) bharat திட்டம் இந்திய இளைஞர்களின் திறன்களையும் அவர்களுக்கான தொழில் முனைவு மற்றும் வேலை வாய்ப்புகளையும் பெற்றுத்தரக்குடிய ஒரு தளமாக செயல்படுகிறது.

ஏற்கனபே மத்திய அரசு மை பாரத் 1.0 திட்டத்தை அறிமுகம் செய்தது. அரசுக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான ஒரு டிஜிட்டல் பாலமாக மை பாரத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் வாயிலாக இளைஞர்கள் தங்களுடைய திறன்களை மேம்படுத்திக் கொள்வது ,வேலை வாய்ப்புகளை தேடி பெற்றுக் கொள்வது , அரசாங்கம் சார்பாக தங்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் அனைத்தையும் தெரிந்து கொள்வது, ரெஸ்யூம் உருவாக்குவது என பல சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது இந்த திட்டத்தை இன்னும் மேம்படுத்தி மை பாரத் 2.0 திட்டத்தை அரசு அறிமுகம் செய்திருக்கிறது. இதன்படி https://mybharat.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இளைஞர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த தளத்தில் பதிவு செய்து கொண்ட இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான வேலைவாய்ப்பு தகவல்கள் எப்படி அவர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்வது வேலையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எப்படி செல்வது என்பதற்கான வழிகாட்டுதல்கள் கிடைக்கும். மேலும் இளைஞர்கள் எந்த துறையில் சாதிக்க வேண்டும் என எண்ணுகிறார்களோ அந்த துறை சார்ந்த திறன் மேம்பாட்டு வகுப்புகள், பயிற்சிகள் உள்ளிட்டவை குறித்தும் தகவல் வழங்கப்படும்.
தங்கள் துறையில் சிறந்து விளங்கக்கூடிய நிபுணர்களோடு தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும் , டிஜிட்டல் முறையில் புதிய திறன்களை எளிமையாக கற்றுக் கொள்வதற்கான பாடங்கள் இதில் இணைக்கப்படும் , நிகழ்நேரம் தொடர்பு கொள்ளும் வசதி , இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஏற்ப பல்வேறு மொழிகளிலும் இந்த தகவல்கள் கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் வாயிலாகவே இந்த சேவைகளை எளிதில் பயன்படுத்தும் வகையில் மை பாரத் 2.0 திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து இளைஞர்கள் திறன்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. https://mybharat.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் ரிஜிஸ்டர் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து உங்களுடைய மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை கொடுத்து ரிஜிஸ்டர் செய்துவிட்டு லாகின் செய்ய வேண்டும்.
லாகின் செய்த பின் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் , படிப்பு உள்ளிட்டவற்றை கேட்கும் படிவத்தை பூர்த்தி செய்து சப்மிட் செய்து விட்டால் உங்களுக்கான பதிவு முடிந்துவிடும். பதிவு முடிந்தவுடன் உங்களுடைய நீங்கள் உள்ளீடு செய்த தகவலுக்கு ஏற்ப உங்களுக்கான திறன் மேம்பாட்டு வகுப்புகள் வேலை வாய்ப்புகள் குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications