ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு உறுப்பினராக இருந்த முகேஷ் அம்பானி-யின் மனைவி நீதா அம்பானி இதுவரை மாத சம்பளம் வாங்கியதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நம் நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி. அம்பானி தம்பதியினருக்கு இஷா, ஆகாஷ் மற்றும் ஆனந்த் அம்பானி என்று மொத்தம் மூன்று வாரிசுகள்.

நீதா அம்பானி பல ஆண்டுகளாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குனர்கள் குழுவில் உறுப்பினராக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இயக்குனர்கள் குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா நீதா அம்பானி செய்வதாக அறிவித்தார். தனது வாரிசுகள் 3 பேரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனர்களாக நியமிக்க நீதா அம்பானி ராஜினாமா முடிவை எடுத்தார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குனர்கள் குழு உறுப்பினராக பணியாற்றிய நீதா அம்பானிக்கு சம்பளம் கிடையாது என்ற தகவல் நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கும். ஆனால், ஒவ்வொரு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குனர்கள் குழு மற்றும் கமிட்டியின் கூட்டங்களுக்கும் நீதா அம்பானி அமர்வு கட்டணம் பெற்றார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையின்படி, நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்துக்கு நீதா அம்பானி அமர்வு கட்டணமாக ரூ.6 லட்சம் பெற்றுள்ளார். மேலும் கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு கமிஷனாக ரூ.2 கோடி நீதா அம்பானிக்கு சென்றுள்ளது.
அமர்வு கட்டணம் மற்றும் ஆண்டு கமிஷன் ஆகியவை மட்டும்தான் நீதா அம்பானிக்கு வருமானம். பங்கு தேர்வுகள், போனஸ் அல்லது கமிஷன்கள் போன்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வழங்கும் எந்த ஊதியம் மற்றும் பலன்களை பெற நீதா அம்பானிக்கு தகுதி கிடையாது.
தற்போது ரிலையன்ஸ் இயக்குனர்களாக நியமிக்கப்பட்ட இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோருக்கும் அம்மாவை போல் மாத சம்பளம் கிடையாது. நீதா அம்பானிக்கு கொடுத்தது போலவே அம்பானி வாரிசுகளுக்கும் கூட்டங்களுக்கான அமர்வு கட்டணம் மற்றும் வருடாந்திர கமிஷன் மட்டுமே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வழங்கும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குனர் குழுவில் இருந்து ராஜினாமா செய்ததை தவிர வேறொரு முக்கியமான பதவியையும் நீதா அம்பானி துறந்துள்ளார். திருபாய் அம்பானி இன்ஸ்டிடியூட்டின் தலைமை பதவியில் இருந்தும் நீதா அம்பானி விலகினார். தற்போது அந்த பதவியில் நீதா அம்பானியின் மகள் இஷா அம்பானி உள்ளார்.


Click it and Unblock the Notifications