டெல்லி: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிடும் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்பே பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதமே இந்தியா மீது அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்தார். பின்னர் அதனை ஜூலை 9ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி என தள்ளி வைத்திருக்கிறார். இந்தியா அதற்கு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. கடந்த வாரமே ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிடும் என தகவல் வெளியானது .ஆனால் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

பால் பொருட்கள்: அமெரிக்காவை பொறுத்தவரை தங்கள் நாட்டு வேளாண் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு இந்திய சந்தையில் வாய்ப்பளிக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்தியா அதனை ஏற்க மறுத்து வருகிறது. இந்தியாவின் முதுகெலும்பே வேளாண்மை தான். அது தவிர கிராம மக்களின் பொருளாதாரமே மாட்டு பண்ணை மற்றும் பால் உற்பத்தியை நம்பி தான் இருக்கிறது.
அடம் பிடிக்கும் அமெரிக்கா :அமெரிக்க வேளாண் மற்றும் பால் பொருட்களை இந்திய சந்தையில் அனுமதித்தால் அது இந்திய விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அமெரிக்கா தங்கள் நாட்டு பால் மற்றும் அதில் இருந்து தயார் செய்யும் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என அடம் பிடிக்கிறது. ஆனால் இந்தியா அதற்கு ஒரு நிபந்தனை விதிக்கிறது.
அசைவ பால் என்றால் என்ன: அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பால் அசைவ பால் என அழைக்கப்படுகிறது. அதாவது அங்கே இருக்கும் பசுக்களுக்கு தீவனமாக மாமிசம் வழங்கப்படுகிறது. எனவே மாமிசம் உண்டு அதன் மூலம் வரக்கூடிய பசும் பாலை அசைவ பால் என அழைக்கிறார்கள். இந்த பால் இந்தியாவில் மத ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மக்களால் ஏற்று கொள்ளப்படாது என்கிறது மத்திய அரசு.
இந்தியாவின் நிபந்தனை என்ன: அமெரிக்கா தங்களுடைய பாலை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதனை சைவ பால் என உறுதியளிக்கும் சான்றிதழ் தேவை என கேட்கிறதாம். அதாவது மாமிசம் உள்ளிட்ட விலங்கு சார்ந்த பொருட்களை தீவனமாக உண்ணாத பசுக்கள் இடமிருந்து பெரும் பாலை மட்டுமே இந்தியாவில் இறக்குமதி செய்ய வேண்டும் , அதனை உறுப்படுத்தும் சான்றிதழும் வேண்டும் என இந்தியா கூறுகிறது.
மக்கள் எதிர்ப்பு: உலக அட்லாஸ் அறிக்கையின் படி இந்தியாவில் 38 சதவீதம் பேர் சைவ மதத்தை பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர். இந்துக்கள் நாள்தோறும் பால் மற்றும் நெய் உள்ளிடவற்றை மத சம்பந்தப்பட்ட சடங்குகளில் பயன்படுத்துகின்றனர். இந்த பால் , மாமிசத்தை உண்ட பசுவிடம் இருந்து பெறப்பட்டது என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

அமெரிக்க மாட்டு தீவனம் என்ன?: அமெரிக்காவை பொறுத்தவரை அங்கே மாடுகளுக்கு வழங்கப்படும் தீவனத்தில் மாமிசமும் இடம்பெற்றிருக்கிற.து பன்றிகள் ,மீன் ,கோழி ,குதிரைகள் உள்ளிட்ட விலங்குகளின் மாமிசத்தை அங்கே இருக்கக்கூடிய பசுக்கள் தீவனமாக உண்கின்றன, அது தவிர பன்றி மற்றும் குதிரை ரத்தத்தையும் அவர்கள் உணவாக வழங்குகிறார்கள், இந்தியாவில் பசுக்கள் தெய்வமாக கருதப்படுகின்றன. எனவே இந்திய மக்கள் இப்படிப்பட்ட பசுக்களிடமிருந்து பெறப்படும் பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை மத ரீதியாகவும் சரி கலாச்சார ரீதியாகவும் சரி ஏற்க மாட்டார்கள் என்று அரசு கூறுகிறது.
விவசாயிகளுக்கு வருமானம் இழப்பு: இது தவிர இந்தியாவே உலக அளவில் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக தான் இருக்கிறது. எனவே தான் வெளிநாட்டிலிருந்து பால் உள்ளிட்ட பொருட்களை இந்திய சந்தைக்குள் அனுமதிப்பதற்கு அரசு தயக்கம் காட்டுகிறது. 2023 -24ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 240 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்துள்ளது. அமெரிக்க பால் பொருட்களை அனுமதித்தால் இந்திய விவசாயிகள் ஆண்டுக்கு 1.50 லட்சம் கோடி ரூபாயை இழப்பார்கள் என அண்மையில் எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்க பால் மற்றும் பால் பொருட்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டால் இங்கே பால் மற்றும் பால் பொருட்களின் விலை 15 சதவீதம் வரை குறையும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது . இது விவசாயிகளுக்கு வருமானத்தை இழக்க செய்யும் என்றும் நேரடியாக இந்தியாவின் கிராம புற பொருளாதாரத்தை தாக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications