முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு தயாரித்த'ஒரே நாடு ஒரே தேர்தல்' அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஏற்றுக்கொண்டு உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் தேர்தல் நடத்தப்படும். இதனால் மத்திய அரசுக்கு என்ன லாபம்..?!
"ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்றால் என்ன?: நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் முறை தான் இந்த "ஒரே நாடு, ஒரே தேர்தல்" கான்செப்ட்.

இந்த ஐடியா பிரதமர் நரேந்திர மோடியின் நீண்டகால கனவு என்பதால், இதை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் தலைமையிலான உயர்மட்டக் குழு ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ளதை அடுத்து மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஏற்றுக்கொண்டு உள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் செயல்படும் முறை: "ஒரே நாடு, ஒரே தேர்தல்" முன்மொழிவின்படி, தேர்தல் செயல்முறை இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
முதல் கட்டம்:
மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்கள்: இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளில் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும். இது, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வழிவகுக்கும்.
இரண்டாம் கட்டம்:
உள்ளாட்சி அமைப்புகள்: முதல் கட்ட தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். இதன் மூலம், நாட்டின் உள்ளூர் அரசியல் அமைப்புகளையும் ஒரே நேரத்தில் புதுப்பிக்க முடியும்.
முக்கிய அம்சங்கள்:
ஒரே வாக்காளர் பட்டியல்: அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான ஒரு வாக்காளர் பட்டியல் உருவாக்கப்படும். இதனால், வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
விரிவான பிரச்சாரம்: தேர்தல் காலத்தில், நாடு முழுவதும் விரிவான பிரச்சாரம் நடத்தப்படும். இதன் மூலம், அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும்.
குறுகிய கால தேர்தல் காலம்: இந்த முறையைச் செயல்படுத்தினால், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மூன்று மாத காலம் மட்டுமே தேர்தல் காலமாக இருக்கும். இதனால், நாட்டின் நிர்வாகம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம். இந்த புதிய முன்மொழிவு, தேர்தல் செயல்முறையை எளிமைப்படுத்தி, தேர்தல் செலவுகளைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை மேம்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது.
தற்போது மாநில சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்படுகின்றன. தற்போதுள்ள அரசின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்த பின்னர் அல்லது பல்வேறு காரணங்களால் ஆட்சி கலைப்பு ஏற்பட்டால் தேர்தல் நடைபெறுகிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் நன்மைகள்: இந்த கருத்தை ஆதரிப்பவர்கள், இணைந்த தேர்தல் நடத்துவதால் குறிப்பிடத்தக்கச் செலவு குறையும், நிர்வாகத் திறமை அதிகரிக்கும் மற்றும் அதிக வாக்காளர் பங்கேற்க வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறார்கள்.
இதேபோல் சில அறிக்கைகளின்படி, 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது சுமார் ரூ.60,000 கோடி செலவு செய்யப்பட்டது. இதில், தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்துவதற்கான செலவுகள் அடங்கும்.
மேலும், தேர்தல் காரணமாகப் பாதுகாப்புப் படையினரைப் பலமுறை பல இடத்திற்கு மாற்றியமைப்பதற்கும் குறிப்பிடத்தக்க செலவுகள் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் பணிகள் மற்றும் இது தொடர்புடைய பிற கட்டுப்பாடுகள் காரணமாக, அரசு நிர்வாகத்தின் பணிகளும், வழக்கமான பொறுப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன. ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் 3 மாதம் மட்டுமே பிரச்சாரம், தேர்தல் தொடர்பான கட்டுப்பாடுகள், வர்த்தக பாதிப்புகள் ஆகியவை இருக்கும்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வரலாறு: 1951-52 ஆம் ஆண்டில் நடந்த முதல் பொதுத் தேர்தலின் போது, ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது, 1967 வரை இந்த நடைமுறை தொடர்ந்தது. அதன்பிறகு தொடர்ந்து மக்களவை மற்றும் சட்டமன்றங்கள் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறை கலைந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications