சென்னை: பொதுவாக ஒரு நிலத்தை வாங்குவதற்கு முன்பாக அந்த நிலத்தில் வில்லங்கங்கள் இருக்கிறதா அது நாம் உண்மையான உரிமையாளரிடம் இருந்து தான் வாங்குகிறோமா என்பன உள்ளிட்ட விவரங்களை நாம் எளிதாக ஆன்லைனிலேயே சரி பார்த்துக்கொள்ள முடியும் அதற்காக உதவக்கூடிய ஆவணங்கள் தான் பட்டா, சிட்டா , வில்லங்க சான்றிதழ் என அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மாநில அரசு தமிழ்நாடு அரசு இதற்காகவே பிரத்தியேகமான இணையதளத்தையும் வழங்குகிறது இந்த இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்தால் நாம் எளிதாக ஒரு நிலத்தின் பட்டா சிட்டா தகவல்களை பெற முடியும்.

பட்டா என்பது வருவாய் துறையினரால் நிலத்தின் உரிமையாளருக்கு வழங்கப்படும் பதிவு செய்யப்பட்ட சொத்தின் ஆவணம் ஆகும். இந்த பட்டாவில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. பட்டா என்பது ஒரு நிலத்தின் வருவாய் பதிவேடு என கூறலாம். இது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது மற்றும் இதனை உரிமைகளின் பதிவு என்றும் அழைக்கிறார்கள்.
ஒரு பட்டாவில் பட்டா எண், மாவட்டத்தின் பெயர் ,தாலுக்கா மற்றும் கிராமம், உரிமையாளரின் பெயர் , சர்வே எண் மற்றும் துணை பிரிவு ,அது ஈரப்பகுதியா வறண்ட பகுதியா ,நிலத்தின் பரப்பளவு மற்றும் வரி விவரங்கள் ஆகியவை இடம் பெற்று இருக்கும். சிட்டா என்பதும் நிலத்தின் வருவாய் ஆவணம் தான். நிலத்தின் பரப்பளவு, உரிமையாளர் மற்றும் விவரங்கள் இதில் இருக்கும் .
இந்த விபரங்கள் கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்பட்டு நிலத்தின் தன்மை வறண்டதா அல்லது ஈர நிலமா? என்பன உள்ளிட்ட விபரங்களை கொண்டிருக்கும். இதுதான் பட்டாவுக்கும் சிட்டாவுக்கும் இடையே இருக்கக்கூடிய வித்தியாசம்.
தமிழ்நாட்டில் ஒருவர் எளிதாக ஆன்லைனிலேயே பட்டா சிட்டா பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய முடியும் இதற்காக https://eservices.tn.gov.in/eservicesnew/index.html இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் View Patta & FMB/Chitta/TSLR Extract என்ற லிங்கினை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் மாவட்டம் மற்றும் கிராமப்புறமா ஊரகப்பகுதியா என்ற விவரம் கேட்கும் அதனை வழங்க வேண்டும். இதனை அடுத்து தாலுக்கா, கிராமம் ,வார்டு, சர்வே எண் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். உங்களுக்கான பட்டா , சிட்டா ஆவணம் காட்டிவிடும். அது என்ன வகையான நிலம், அதன் சர்வே எண், என்பன உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்க முடியும்.
அடுத்ததாக வில்லங்க சான்றிதழையும் நாம் எளிதாக ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம். இந்த https://tnreginet.gov.in/portal/ இணையதளத்திற்கு சென்று வில்லங்கச் சான்றிதழை பெற்றுக் கொள்வது மிகவும் சுலபமானது. சர்வே எண், கிராமத்தின் பெயர் ஆகியவற்றை உள்ளீடு செய்தாலே போதும். இந்த சொத்து யார் பேரில் உள்ளது அதற்கு முன்பு யாரிடம் இருந்து கைமாறியது ஆகிய விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications