சென்னை: இந்தியாவில் அண்மைக்காலமாக ஆன்லைன் மோசடி மூலம் ஏராளமான மக்கள் தங்களுடைய பணத்தை இழப்பது தொடர்கதையாகி வருகிறது. ஆனால் முதலுக்கு மோசம் இல்லாத பண வீக்கத்தை விட அதிகமான லாபம் தரக்கூடிய பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நம்முடைய அஞ்சல் அலுவலகங்கள் வாயிலாக நமக்கு கிடைக்கின்றன. அப்படி மாதம் தோறும் கணிசமான தொகையை வட்டி வருமானமாக வழங்கக்கூடிய ஒரு அருமையான தபால் நிலைய திட்டம் குறித்து தான் நாம் தற்போது தெரிந்து கொள்ள போகிறோம்.
நம்முடைய அஞ்சல் அலுவலகங்கள் வாயிலாக பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களும் கிடைக்கின்றன. இதில் நம்முடைய முதலீட்டு தொகை முழுமையாக பாதுகாப்பாக இருக்கும் என்பதால் மக்கள் நம்பி இவற்றில் முதலீடு செய்யலாம். அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம்.

இந்தத் திட்டத்தில் நாம் ஒரு கணிசமான தொகையை டெபாசிட் செய்து விட்டால் மாதம் தோறும் வட்டி தொகையானது நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.
பொதுவாக பணி ஓய்வு பெற்று ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் தோறும் ஒரு தொகை அவர்களுக்கு வட்டியாக கிடைக்கும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு தனிநபர் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை தனிக் கணக்கில் முதலீடு செய்யலாம். இதுவே கூட்டுக்கணக்காக இருந்தால் அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை இதில் முதலீடு செய்ய முடியும்.
இவ்வாறு முதலீடு செய்யும் தொகைக்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் தொகையானது வட்டியாக கிடைக்கும். இந்த வட்டி தொகை 12 மாதங்களுக்கும் பிரித்து உங்களுடைய தபால் நிலைய சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் ஒரு நபர் ஈட்டக்கூடிய வட்டியானது வருமான வரி கணக்குக்கு உட்பட்டது.
இதில் முதலீடு செய்தவர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு முதலீட்டை பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. ஓராண்டுக்குள் இந்த பணத்தை திரும்ப எடுக்க முடியாது 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் இந்த டெபாசிட் கணக்கை திரும்ப பெற்றுக் கொண்டால் பிரின்சிபல் தொகையில் இரண்டு சதவீத தொகை குறைக்கப்பட்டு வழங்கப்படும்.
3 முதல் 5 ஆண்டுகளுக்குள் எடுத்துக் கொண்டால் 1 சதவீத தொகை பிரின்சிபல் தொகையிலிருந்து குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒரு தனிநபர் அதிகபட்சம் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்கிறார் எனும் போது அவருக்கு அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு மாதந்தோறும் 5,550 ரூபாய் வட்டி வருமானமாக கிடைக்கும்.
கூட்டு கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரை அதிகபட்சமாக முதலீடு செய்யலாம் என்பதால் இதில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு ஐந்தாண்டு காலத்திற்கு மாதத்திற்கு 9,250 வட்டி வருமானமாக அவர்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படும்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications