சென்னை: 2015-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது தான் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (Pradhan Mantri MUDRA Yojana - PMMY). சிறு தொழில் முனைவோர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் மூலம் சிறு தொழில் முனைவோர் மற்றும் தனிநபர்களுக்கு கடன் வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் குறு நிதி நிறுவனங்கள் (MFIகள்), வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), சிறு நிதி வங்கிகள், RBRகள், வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் இருந்து சிறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வருமானம் ஈட்டும் வணிகங்களுக்கு கடன்களைப் பெறலாம். இது கார்பரேட் நிறுவனங்களுக்குப் பொருந்தாது.

முத்ரா கடன் என்றால் என்ன?: முத்ரா கடன் என்பது குறிப்பாக சிறு தொழில் துறையினருக்கு வழங்கப்படும் கடனாகும். இதனை பெறுவதன் மூலம் தொழிலை தொடங்கவோ அல்லது தொழிலை மேம்படுத்தவோ நிதியுதவி கிடைக்கும். வேறு எங்காவது சென்று கடன் கேட்டால் ஏதாவது பொருளையோ அல்லது பத்திரத்தையோ கொடுத்து தான் கடன் வாங்க முடியும்.
ஆனால் PMMY திட்டத்தின் மூலம் நீங்கள் எந்த விதமான அடமானமும் இன்றி கடன் பெறலாம். இதற்கு நீங்கள் தக்க ஆவணங்களை கொடுத்து விண்ணப்பித்தாலே போதுமானது. சான்றாக எதிர்காலத்தில் வரும் வருமான கணிப்புகள் தொடர்பான சில ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது நீங்கள் ஒரு சிறிய தொழிலை, தொடங்கி அதில் எவ்வளவு வருமானம் ஈட்ட முடியும் என்ற கணிப்புகள் இதில் விவரமாக கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
திட்டங்களின் வகைகள்: PMMY என்பது சிஷு(Shishu), கிஷோர் மற்றும் தருண் என பெயரிடப்பட்ட 3 திட்டங்களின் கீழ் கடன்களைப் பெற முடியும். சிஷுதிட்டத்தின் கீழ் - ஸ்டார்ட்-அப் மற்றும் முதல் முறை தொழில்முனைவோருக்கு ரூ.50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. கிஷோர் பிரிவின் கீழ் ரூ. 500,000 வரை கடன்களும், தருண் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் வரை கடன்களும் வழங்கப்படுகின்றன.
PMMY திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் ஆண்டில், கிட்டத்தட்ட 35 மில்லியன் குறு தொழில்முனைவோருக்கு ரூ. 1.32 டிரில்லியன் கடன் வழங்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, சுமார் 62 மில்லியனுக்கும் அதிகமான வணிகங்கள் 3.2 டிரில்லியனுக்கும் அதிகமான கடன் தொகையுடன் பயனடைந்தன.
முத்ரா கடனின் அம்சங்கள்:
1. கடனைப் பெற தொழில்முனைவோர் 18 அல்லது அதற்கு மேற்பட்டவராகவும் 65 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
2. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச கடன் தொகை வரம்பு எதுவும் இல்லை, இருப்பினும், ஒரு தொழில்முனைவோர் ரூ. 10 லட்சம் வரை மட்டுமே பெற முடியும்.
3. கடன் தொகையை 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
4. அனைத்து முத்ரா கடன்களையும் முத்ரா கார்டுகள் மூலமாகவும் ஆன்லைனிலும் முத்ரா செயலியான 'முத்ரா மித்ரா' மூலமாகவும் பெறலாம்.
5. விவசாயம் மற்றும் கார்ப்பரேட் தொழில் முனைவோர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தேவையான கடன் வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சிஷு, கிஷோர், தருண் என மூன்று வகையான லோன்கள் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான லோன் என்ன என்பதை புரிந்து ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பிறகு முத்ரா கடனுக்கு தேவையான ஆவணத்தை டவுன்லோட் செய்து விவரங்களை பூர்த்தி செய்து பிற ஆவணங்களான பான் கார்டு, ஆதார் கார்டு, போட்டோ, பாஸ்போர்ட் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கீழ்காணும் எந்த வங்கிகளுக்கு வேண்டுமானாலும் சென்று கொடுக்கலாம். பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவின் (PMMY) கீழ், கடன் வாங்குபவர்கள் பொதுத்துறை வங்கிகள், கிராமப்புற வங்கிகள் (RRBs) மற்றும் கூட்டுறவு வங்கிகள், தனியார் துறை வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள் ( MFIகள்) மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCகள்) ஆகிவற்றில் கடன் பெறலாம்.
பலன்கள்: இந்தக் கடனின் சிறப்பம்சம் என்னவென்றால், முத்ரா கார்டு மூலம் கடன் பெற்று எவ்வளவு தொகையை உங்களுடைய நிறுவனத்தை உருவாக்கவோ அல்லது மேம்படுத்தவோ செலவு செய்திருக்கிறீர்களோ.. அந்த தொகைக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதுமானது. நீங்கள் எவ்வளவு தொகையை கடனாக பெற்றீர்களோ.. அது மொத்தத்துக்கும் சேர்த்து வட்டி செலுத்த தேவையில்லை.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications