உயில் மட்டும் இருந்தால் போதாது! உங்கள் பெயரில் சுமூகமாக சொத்தை மாற்ற வேண்டுமா? உடனே Probate வாங்குங்க!

ஒரு நபர் தனக்கு சொந்தமான சொத்தை.. தன் மறைவிற்குப் பிறகு யார் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக உயில் எழுதி வைக்கலாம். இப்படி எழுதப்படும் உயில், எழுதியவரின் மறைவுக்குப் பிறகு சட்டப்பூர்வ ஆதாரமாக இருக்கும். ஆனால் ஒரு சில சூழ்நிலைகளில் அந்த உயிலை கொண்டு உரியவர் சொத்தை மாற்றும்போது, பிற உறவினர்கள் சேர்ந்து இது போலியான உயில் என்று சண்டை போட்டால் என்ன செய்வது? இது போன்ற பிரச்சனை உங்களில் பலருக்கு நடந்திருக்கும்.

அப்படிப்பட்ட சூழ்நிலை வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். ஒருவர் மறைந்த பிறகு உயில் போலியானது என்று அவருடைய உறவினர்கள் சண்டை போட்டால் அங்கு தான் ப்ரோபேட் என்ற நீதிமன்ற சான்றிதழ் தேவைப்படுகிறது.

புரோபேட் என்றால் என்ன?: ஒருவர் எழுதி வைத்த உயில் உண்மையானது தான் என்று நீதிமன்றத்தின் சார்பில் தரப்படும் சான்றிதழ் தான் புரோபேட். உயிலில் இறந்தவர் தன் மறைவுக்குப் பிறகு சொத்தை நிர்வகிக்க ஒரு நபரை நியமித்திருப்பார். அவரே எக்ஸிக்யூட்டர் ஆவார். அவர் நீதிமன்றத்திற்கு சென்று நடந்ததை கூறி புரோபேட் சான்றிதழ் வழங்கக் கோரலாம். இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925 பிரிவு2(f)-இன் கீழ், புரோபேட் என்பது நீதிமன்றத்தின் முத்திரையுடன் வழங்கப்படும் உயிலின் நகல் ஆகும்.

உயில் மட்டும் இருந்தால் போதாது! உங்கள் பெயரில் சுமூகமாக சொத்தை மாற்ற வேண்டுமா? உடனே Probate வாங்குங்க!

உயிலில் யாருடைய பெயருக்கு சொத்தை மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்த நபர் பிரிவு 222-இன் கீழ் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின் உயிலின் ஆதாரங்களை எல்லாம் பார்த்துவிட்டு நீதிமன்றம் ப்ரோபேட் வழங்கும். இதற்கு முன்னர் இந்திய வாரிசுரிமைச் சட்டம் 213-இன் கீழ் கொல்கத்தா, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் வசித்து வந்த சில சமூகத்தினருக்கும், சில சொத்து பிரிவிற்கும் கட்டாயமாக ப்ரோபேட் வாங்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது.

Also Read

ஆனால் இந்தச் சட்டத்தில் 2025-ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. இப்போது உயில் வைத்திருப்பவர்கள் ப்ரோபேட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். மேலும் சொத்து பிரியும்போது ஏதேனும் சட்ட சிக்கல்கள் இருந்தாலோ அல்லது குடும்பத் தகராறு ஏற்பட்டாலோ அந்த சமயத்தில் ப்ரோபேட் வாங்குவது பாதுகாப்பானதாக இருக்கும்.

எப்போது ப்ரோபேட் பெறலாம்?: உயில் எழுதியவர் மறைவுக்குப் பிறகு குடும்ப தகராறு ஏற்பட்டாலோ அல்லது சொத்து பிரிப்பதில் சந்தேகங்கள் இருந்தாலோ அப்போது நீதிமன்றத்தை அணுகி ப்ரோபேட் பெறலாம். ஒரு சிலர் அசையும் சொத்து அசையா சொத்து என அனைத்திற்கும் உயில் எழுதி வைத்திருப்பார்கள். உதாரணமாக பேங்க் பேலன்ஸ் பங்குகள் போன்றவை இருக்கும் பட்சத்தில் அனைத்து செயல்முறையையும் சுமூகமாக்க ப்ரோபேட் பெறலாம்.

எப்படி ப்ரோபேட் பெறுவது?: முதலில் உயிலில் குறிப்பிட்டுள்ள நபர் உயில் பத்திரம், இறந்தவரின் டெத் சர்டிபிகேட், வாரிசுகளின் விபரங்கள், உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விபரங்கள் ஆகியவற்றை வைத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். பிறகு சில நாட்கள் கழித்து நீதிமன்றத்தின் சார்பில் உரியவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். உயிலில் ஒரு சிலர் சாட்சி கையெழுத்து போட்டிருப்பார்கள். அவர்களும் விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு வரவேண்டும். அங்கு சட்டப்படி தான் உயில் எழுதப்பட்டது என்பதை கூற வேண்டும். இந்த செயல்முறை எல்லாம் முடிந்த பிறகு உயில் உண்மையானது தான் என்று நீதிமன்றம் கருதினால் ப்ரோபேட் சான்றிதழ் வழங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+