இந்தியாவின் பிரபல இந்தி நடிகர் அர்ஷத் வர்சி மற்றும் அவரது மனைவி மரியா கோரெட் யூடியூப் மூலம் தவறான கருத்துக்களைக் பரப்பி அதன் மூலம் பெரிய அளவிலான லாபத்தை பார்த்து ரீடைல் முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளதாக SEBI கண்டுப்பிடித்து இருவரையும் பங்குச்சந்தையில் ஈடுபட கூடாது என தடை விதித்துள்ளது.
நடிகர் அர்ஷத் வர்சி மற்றும் அவரது மனைவி மரியா கோரெட் ஆகியோர் உடன் இந்த மோசடியில் ஈடுப்பட்ட சுமார் 45 அமைப்புகளையும் செபி தடை செய்துள்ளது.
அர்ஷத் வர்சி மற்றும் மரியா கோரெட் செய்தது என்ன..? யூடியூபர்கள் ஏன் உஷாராக இருக்க வேண்டும்..?
நடிகர் அர்ஷத் வர்சி மீது செபி குற்றச்சாட்டு!
இந்தி நடிகர் அர்ஷத் வர்சி மற்றும் அவரது மனைவியும் ஷார்ப்லைன் பிராட்காஸ்ட் மற்றும் சாதனா பிராட்காஸ்ட் பங்குகளை வாங்க முதலீட்டாளர்களை ஈர்க்க யூடியூப்பில் தவறாக வழிநடத்தும் வீடியோக்களை பதிவேற்றியதாகக் கூறி அவர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளது.
ஏகப்பட்ட லாபம்
இதன்மூலம் அர்ஷத் வர்சி ரூ.29.43 லட்சமும் மற்றும் அவரது மனைவி மரியாவும் ரூ.37.58 லட்சம் லாபம் ஈட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அர்ஷத் வர்சி இந்த தகவல்களை மறுத்துள்ளார். மேலும் அவரும் அவரின் மனைவியும் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Pump and Dump மோசடி
இதில் நடிகர் மற்றும் அவரது மனைவி மட்டுமின்றி Pump and Dump திட்டத்தின் மூலம் ஷார்ப்லைன் பிராட்காஸ்ட் மற்றும் சாதனா பிராட்காஸ்ட் நிறுவனங்களின் பங்குகளை வாங்க மக்களைத் தூண்டியதற்காக யூடியூபர் மணீஷ் மிஸ்ரா மற்றும் சாதனா ஒளிபரப்பின் விளம்பரதாரர்களான ஸ்ரேயா குப்தா, கௌரவ் குப்தா, சௌரப் குப்தா, பூஜா அகர்வால் மற்றும் வருண் மீடியா உள்ளிட்ட 45 நிறுவனங்களுக்கு இந்திய பங்குச் சந்தை வாரியம் (SEBI) தடை விதித்துள்ளது.
Pump and Dump திட்டம் என்றால் என்ன?
பம்ப் அண்ட் டம்ப் என்பதும் MLM போன்ற ஒரு வகையான மோசடி திட்டமேயாகும். இதன்மூலம் ஒரு நிறுவனம் அதன் பங்கின் விலையை செயற்கையாக உயர்த்த, தவறான மற்றும் பொய்யான தகவல்களை பரப்பி அதன் பங்கின் விலைகளை உயர்த்த பயன்படுத்தும் ஒரு மோசடி திட்டமாகும்.
யூடியூப்-ல் ஏமாற்றப்படும் மக்கள்!
இந்த பம்ப் அண்ட் டம்ப் திட்டம் மூலம் சிறு நிறுவனங்கள் அதன் பங்கு விலையை உயர்த்த பிரபல பொழுதுபோக்கு தளமான யூடியூப் மற்றும் சமுகவலைத்தளங்களை மார்க்கெட்டிங் தளமாக பயன்படுத்துகிறது.
அதிலும் குறிப்பாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய புதிதாக வரும் மக்களையும், அல்லது போதிய அனுபவம் இல்லாத நபர்களை, விரைவில் பணம் சம்பாதிக்க நினைக்கும் மக்களை குறிவைத்தே இந்த மீடியா மார்கெட்டிங் நடக்கும்.
பொய்யான தகவல்
இந்த யுக்தியை பயன்படுத்தும் நிறுவனங்கள் யூடியூப் வாயிலாக பல பிரபலங்களை வைத்து பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தகவல்களை பரப்பி அதன் பங்குகளை மக்கள் வாங்கும்படி செய்கின்றன. இதன் மூலம் பங்குகளின் விலை வேகமாக உயரும்.
ஜூட்-விடும் பெரிய தலைகள்
அதன் பின்னர் ஒரு கணிசமான தொகை எட்டிய உடன் இந்த மோசடிக்கு பின்னால் இருக்கும் பல பெரிய தலைகள் தடாலடியாக பங்குகளை விற்பனை செய்து லாபம் பார்த்துவிடும். இதனால் புதிதாக பங்குகளை வாங்கி பெரிய லாபம் கிடைக்காமல் மாட்டிக்கொள்வார்கள்.
உண்மையான டிமாண்ட் இல்லை
சந்தையில் உண்மையான டிமாண்ட் இருந்தால் தானே பங்கு விலை உயரும், இல்லையென்றால் எப்படி உயரும். பெரிய தலைகள் தங்களிடம் இருக்கும் அதிகப்படியான பங்கு இருப்பை பங்கு விலை உச்சக்கட்டத்தை அடையும் வேளையில் மொத்தமாக விற்பனை செய்து வெளியேறுவார்கள். இதனால் சில்லறை முதலீட்டளர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
மோசடியில் ஈடுப்பட்ட நிறுவனங்கள்!
சிறு நிறுவனங்களான ஷார்ப்லைன் பிராட்காஸ்ட் மற்றும் சாதனா பிராட்காஸ்ட் இரண்டும் இந்த Pump and Dump மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது. அதிலும் முற்றிலும் பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பி அதன் பங்கு விலைகளை குறுகிய காலத்தில் உயர்த்தியாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எம்மாதிரியான பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டது!
இந்த மோசடியில் ஈடுபட்ட இரண்டு நிறுவனங்களும் பின்வரும் பொய்யான தகவல்களைப் பரப்பி மக்களை ஏமாற்றி பணம் பெற்றுள்ளன.
சாதனா பிராட்காஸ்ட் நிறுவனத்திடம் 5ஜி சேவை உரிமம் உள்ளது. SBL நிறுவனத்தை அதானிக் குழுமம் விரைவில் கைப்பற்றும், அதனால பங்குகளின் விலை ஏறும் எனவும், தொலைக்காட்சி தயாரிப்புகளிலிருந்து சினிமா தயாரிப்புக்கு இந்நிறுவனம் செல்வதாகவும்.
போலி முதலீடு தகவல்
ஒரு பெரிய அமெரிக்க நிறுவனம் ரூ,1,100 கோடி செலவில் நிறுவனத்துடன் இணைந்து 4 பக்திப் படங்களைத் தயாரிக்க, அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து பணம் கொண்டுவரும் எனவும், ஆனால் அனைத்து உரிமைகளும் SBL இடம் இருக்கும் எனவும் கூறியுள்ளது.
மேலும் மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளதாகவும் இதுபோல பல பொய்யான தகவல்களை கூறியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications