முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின் நிதி சேவை பிரிவு தான் இந்த ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம். இந்த நிறுவனம் தற்போது ஜெர்மனி நாட்டின் முனிச் நகரை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் அலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து ரீஇன்சூரன்ஸ் துறையில் நுழைய உள்ளது. இரு நிறுவனங்கள் மத்தியிலான வர்த்தக விவரங்களை தெரிந்துக்கொள்ளும் முன் ரீஇன்சூரன்ஸ் குறித்து தெரிந்துக்கொள்வது அவசியம்.
பொதுவாக காப்பீட்டு நிறுவனங்கள் தாங்கள் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க்குகளை (large risks) வேறு ஒரு காப்பீட்டு நிறுவனத்திடம் பிரித்துக் கொடுப்பதுதான் "மறுகாப்பீடு" (Reinsurance). ஒரு காப்பீட்டு நிறுவனம் ஒரு பெரிய திட்டத்துக்கோ, அல்லது நிறைய பேருக்கு ஒரே சமயத்தில் இழப்பீடு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலோ, அந்த இழப்பைத் திடீரென தாங்கிக்கொள்ள முடியாத நிலை வரலாம்.

இந்தச் சூழ்நிலையில், அந்த காப்பீட்டு நிறுவனம் தனது ரிஸ்கின் ஒரு பகுதியைப் இன்னொரு நிறுவனத்திடம் (மறுகாப்பீட்டு நிறுவனம் - reinsurer) ஒப்படைக்கும். இதற்கு ஈடாக, முதல் காப்பீட்டு நிறுவனம் மறுகாப்பீட்டு நிறுவனத்திற்கு ஒரு சிறிய கட்டணம் (premium) செலுத்தும்.
அப்படி ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டால், மறுகாப்பீட்டு நிறுவனம் அந்த இழப்பின் ஒரு பகுதியை அல்லது முழுவதையும் ஏற்கும். இது காப்பீட்டு நிறுவனத்திற்கு ஒரு பாதுகாப்பு வலையை உருவாக்குகிறது, திடீர் நிதிச் சுமையிலிருந்து பாதுகாக்கிறது. இத்தகைய பிரிவில் தான் ஜெர்மனி நாட்டின் அலையன்ஸ் குழுமம் திறம்பட செயல்பட்டு வருகிறது.
உதாரணமாக: ஒரு வீடு ஒரு காப்பீட்டு நிறுவனத்தால் 1 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடு தீப்பிடித்துவிட்டால், காப்பீட்டு நிறுவனம் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பு மிகவும் பெரியதாக இருந்தால், முதல் காப்பீட்டு நிறுவனம் ஒரு மறுகாப்பீட்டு நிறுவனத்திடம் இந்த ரிஸ்க்கைப் பகிர்ந்துகொள்ளலாம். உதாரணமாக, மறுகாப்பீட்டு நிறுவனம் 50 லட்சம் ரூபாய் வரையிலான இழப்பீட்டை ஏற்கும் என்று ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.
மறுகாப்பீட்டின் முக்கியத்துவம்: இது காப்பீட்டு நிறுவனங்களை நிதி ரீதியாக பாதுகாப்பு அளிக்கிறது. அலையன்ஸ் குழுமம் போன்ற ஒரு நிறுவனத்தின் பாதுகாப்பு கிடைத்தால் காப்பீட்டு நிறுவனங்களால் பெரிய ரிஸ்க்குகளை எடுக்கவும், அதிக வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு வழங்கவும் முடியும். குறிப்பாக இயற்கைப் பேரழிவுகள் போன்ற பெரிய இழப்புகள் அளிக்க வேண்டிய சூழ்நிலை வரும் போது மொத்தமாக பாதிப்பை ஏற்பதில் இருந்து காப்பீட்டு நிறுவனங்கள் விலக்கு அளிக்கப்பட்டு காப்பீட்டுத் துறையையும், காப்பீட்டு நிறுவனங்களையும் பாதுகாக்கிறது. இதைத் தான் எளிமையாக "மறுகாப்பீடு" அல்லது "காப்பீட்டு நிறுவனங்களுக்கான காப்பீடு" என்று கூறலாம். இப்போ விஷயத்திற்கு வருவோம்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (JFSL) அலையன்ஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான அலையன்ஸ் யூரோப் B.V. உடன் இணைந்து 50:50 என்ற கூட்டணியில் மறுகாப்பீடு துறையில் வர்த்தகம் செய்ய இறங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக ஒப்பந்தம் கையெழுத்திட்டப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஜியோ ஃபைனான்சியல் மற்றும் அலையன்ஸ் குழுமம் இந்தியாவில் லைப் இன்சூரன்ஸ் (life insurance) மற்றும் பொது காப்பீடு (general insurance) வணிகங்களிலும் செயல்பட தனித்தனி கூட்டணி நிறுவனங்களையும் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜியோ ஃபைனான்சியல் - அலையன்ஸ் குழும கூட்டணியில் அலையன்ஸின் உலகளாவிய மறுகாப்பீட்டு நிபுணத்துவத்தை, ஜியோவின் இந்திய சந்தை புரிதல் மற்றும் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பும் இணைத்து இந்தியாவில் இச்சேவையை வழங்குகிறது. அலையன்ஸ் ரீ (Allianz Re) நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவில் மறுகாப்பீடு துறையில் வர்த்தகம் செய்து வருகிறது.
அலையன்ஸ் - பஜாஜ் கூட்டணி: அலையன்ஸ் குழுமம், ஜியோ பைனான்சியல் நிறுவனத்துடன் இணைவதற்கு முன்பு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்துடன் இணைந்து பஜாஜ் அலையன்ஸ் லைஃப் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் போன்ற இரண்டு காப்பீடு நிறுவனங்களை நடத்தி வந்தது. இதில் அலையன்ஸுக்கு 26 சதவீத பங்கு இருந்தது.
ஆனால், கடந்த ஆண்டு அக்டோபரில் அலையன்ஸ் இந்த கூட்டணியை முடிவு செய்ய விரும்புவதாக அறிவித்தது. இதையடுத்து, மார்ச் 2025-இல் பஜாஜ் ஃபின்சர்வ் அலையன்ஸின் 26 சதவீத பங்குகளை ரூ.24,180 கோடிக்கு வாங்க முடிவு செய்தது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications