மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்கோமீட்டர் என்றால் என்ன? அதில் எத்தனை வகை உள்ளது?

எந்த ஒரு முதலீட்டிலும் ரிஸ்க் என்பது இல்லாமல் இருக்காது. ரிஸ்க் இருந்தால் தான் வருவாய் கிடைக்கும்.

ரிஸ்க் இல்லாத முதலீடு என்ற கூறப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் கூட நாம் பிக்சட் டெபாசிட் செய்த வங்கி திவால் ஆகி விட்டால் ரிஸ்க் அதிகம் தான்.

அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலும் ரிஸ்க் உள்ளது என்பதும் அந்த ரிஸ்க்கை ரிஸ்கோகிலோ மீட்டர் மூலம் எப்படி கண்டுபிடிப்பது என்பது தற்போது பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்ட் ரிஸ்க்

மியூச்சுவல் ஃபண்ட் ரிஸ்க்

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை தேர்வு செய்வது முக்கியம். பொதுவாக முதலீடு செய்பவர்கள் திட்ட வகைகளை ஆய்வு செய்வார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் அவர்கள் ஆய்வு செய்யும்போது திட்டத்தில் உள்ள ரிஸ்க்கை காட்டும் அடையாளங்களை பெரும்பாலானவர்கள் கவனிப்பதில்லை. ஒரு திட்டத்தை தேர்வு செய்யும் போது அந்த திட்டத்தில் உள்ள ரிஸ்க்கையும் கவனிக்க தவற வேண்டாம்.

ரிஸ்கோமீட்டர்

ரிஸ்கோமீட்டர்

ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலும் திட்ட விலக்கம், பீட்டா, ஷார்பே ரேஷியோ போன்ற ரிஸ்க் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதேபோல் ஒரு திட்டத்தில் உள்ள ரிஸ்க்கின் அளவை அந்த ஃபண்டின் ரிஸ்கோமீட்டர் காட்டும். இந்த ரிஸ்கோமீட்டரை செபி கட்டாயமாக்கியுள்ளது.

ரிஸ்கோமீட்டரில் உள்ள வகைகள்

ரிஸ்கோமீட்டரில் உள்ள வகைகள்

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் உள்ள ரிஸ்கோமீட்டரில் குறைவான ரிஸ்க், குறைவானது முதல் மிதமான ரிஸ்க், மிதமானது முதல் அதிக ரிஸ்க், மிக அதிக ரிஸ்க் ஆகிய நிலைகள் இருக்கும். இந்த ரிஸ்கோமீட்டர் நமது போர்ட்ஃபோலியோவில் உள்ள ரிஸ்க்கின் அளவையும், மியூச்சுவல் ஃபண்டின் பல்வேறு வகைகளுடன் தொடர்புப்படுத்தப்படும்.

செபி

செபி

இந்த வகையான ரிஸ்க்கை வகைப்படுத்தும் ரிஸ்கோமீட்டர் முறையை செபி வரையறுத்துள்ளது. எனவே அனைத்து மியூச்சுவல் ஃபண்ட்களுமே அதே வகையான ஃபண்ட்களை சரியாக ஒரே வகையின் கீழ் வகைப்படுத்தி வைக்க வேண்டியது செபியின் விதியின்படி கட்டாயம்.

பீட்டா

பீட்டா

ரிஸ்கோமீடட்ரில் உள்ள பீட்டா என்பது, ஒரு ஃபண்ட் எளிதில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும் தன்மையை கொண்டது. பீட்டா 1-க்கு மேல் இருந்தால் (>1 ), அந்த திட்டம் மார்க்கெட்டில் அதிக ஏற்ற தாழ்வுகள் ஏற்படும் திட்டமாக இருக்கும். பீட்டா 1-க்குக் குறைவாக இருந்தால் (<1), அந்த திட்டமானது குறைவான ஏற்ற தாழ்வுகள் கொண்ட திட்டமாக இருக்கும்.

நிதி ஆலோசகர்

நிதி ஆலோசகர்

எனவே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் முன் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை செய்து உங்கள் முதலீட்டு தொகை மற்றும் ரிஸ்க் எடுக்கும் தன்மை ஆகியவற்றை முடிவு செய்து அதன்பின் முதலீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+