எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் சற்று யோசித்து.. நிதி வளர்ச்சிக்கு ஏற்ற திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். ஏராளமான முதலீட்ட விருப்பங்கள் உள்ளதால், பாதுகாப்பு மற்றும் நல்ல வருமானம் வழங்குவதை தேர்ந்தெடுப்பது முக்கியம். முதலீடு என்று வரும்போது உடனடியாக தங்களுடைய பணம் இரட்டிப்பாக வேண்டும் என்று எண்ணும் முதலீட்டாளர்கள் பலர். இது போன்ற முதலீடாளர்கள் 72 என்கிற விதியை பின்பற்றினால் ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும் பணம் எப்போது இரட்டிப்பாகும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
72 விதி என்றால் என்ன?: 72 விதி என்பது ஒரு முதலீட்டு திட்டத்திற்கு கொடுக்கப்படும் வட்டி விகிதத்தின் அடிப்படையில் முதலீடு இரட்டிப்பாக எடுக்கும் நேரத்தை மதிப்பிடும் ஒரு எளிய பார்முலாவாகும். அதாவது 72-ஐ வழங்கப்படும் வட்டி விகிதத்தில் வகுப்பதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு எப்போது இரட்டிப்பாகும்.. அதாவது எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாகும்? என்பதை தோராயமாக மதிப்பிட்டுவிடலாம். எனவே தகவல் அறிந்து முதலீட்டு முடிவு எடுக்க இந்த விதி உதவியாக இருக்கும்.

தற்போதைய வட்டி விகிதங்களின் அடிப்படையில் சில பிரபலமான முதலீடு திட்டங்கள் குறித்தும் அவற்றில் முதலீடு செய்தால் உங்கள் முதலீடு எப்போது இரட்டிப்பாகும் என்பது குறித்தும் பார்ப்போம்.
வங்கிகளில் வழங்கப்படும் பிக்சட் டெபாசிட்கள்: வங்கிகளில் வழங்கப்படும் பிக்சட் டெபாசிட்களுக்கு 6 முதல் 8 சதவீதம் வரை வெவ்வேறு காலகட்டங்களை பொறுத்து வட்டி வழங்கப்படுகிறது. ஒருவேளை நீங்கள் முதலீடு செய்யும் திட்டத்திற்கு 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். 8-ஐ 72-ஐ கொண்டு வகுப்பதன் மூலம் 9 கிடைக்கும். ஆக வங்கியில் வழங்கப்படும் பிக்சட் டெபாசிட்கள் இரட்டிப்பாக 9 ஆண்டுகள் எடுக்கும்.
பொது வருங்கால வைப்பு நிதி: பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு தற்போது 7.1 வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. PPF திட்டத்தில் முதலீடு செய்யும் தொகை இரட்டிப்பாக தோராயமாக 10 ஆண்டுகள் எடுக்கும்.
சுகன்ய சம்ரித்தி யோஜனா: சுகன்ய சம்ரித்தி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்தால் 8.2% என்ற அதிகபட்ச வட்டியை பெறலாம். இந்த திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்தால் அந்த முதலீடு இரட்டிப்பாக 8.7 ஆண்டுகள் கிடைக்கும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC): தேசிய சான்றிதழ் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு 7.7% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் சுமார் 9.3 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். மேல் காணும் திட்டங்களை தவிர வேறு திட்டங்களுக்கும் எப்போது தொகை இரட்டிப்பாகும் என்பதை நீங்கள் இந்த ஃபார்முலாவை வைத்து தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications