சம்வத் (Smavat) என்ற சொல் கடந்த சில நாட்களாக நாம் அடிக்கடி கேட்கும் ஒரு சொல்லாக இருந்தாலும், அதன் உண்மையான பொருள் பற்றி பலருக்கு தெரியாது. சமஸ்கிருத மொழியில் இருந்து உருவான இந்த சொல், இந்து காலண்டர் ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
"சம்வத்" என்ற சொல் இரண்டு தனித்தனி சொற்களின் சேர்க்கை ஆகும். "சாம்" என்றால் "ஒன்றாக" என்றும், "வத்சரா" என்றால் "ஆண்டு" என்றும் பொருள். அதாவது, ஒரு வருடத்தின் தொடக்கம் என்பது சம்வத் ஆகும். இந்தியா மற்றும் நேபாளத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் சூரிய நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர் முறை தான் இந்த சம்வத்.

சம்வத் என்பது வெறும் காலண்டர் ஆண்டு மட்டுமல்ல. இது இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பல இந்து பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் சம்வத் காலண்டரை அடிப்படையாகக் கொண்டே கொண்டாடப்படுகின்றன. உதாரணமாக, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் சம்வத் காலண்டரின் குறிப்பிட்ட நாட்களில் கொண்டாடப்படுகின்றன.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சம்வத் காலண்டர் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆனால் அடிப்படையாகக் கொண்ட கணக்கீடு ஒன்றே. சம்வத் காலண்டர் என்பது இந்தியாவின் பழமையான காலண்டர்களில் ஒன்றாகும். இது நம் முன்னோர்களின் ஞானத்தையும், காலத்தை கணக்கிடும் அவர்களின் திறமையையும் காட்டுகிறது.
இன்றைய நவீன உலகில் கிரிகோரியன் காலண்டர் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும், சம்வத் காலண்டர் இன்னும் இந்தியர்களின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இது நம் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாகும்.
இன்றுடன் சம்வத் 2080 ஆம் ஆண்டு முடிந்த நிலையில், நாளை நவம்பர் 1ஆம் தேதி சம்வத் 2081 ஆம் ஆண்டு பிறக்கிறது. இந்த இந்து நாள்காட்டியில் மிகவும் சிறப்புமிக்க நாளாக இருக்கும் காரணத்தால் நாளை பங்குச்சந்தை விடுமுறை ஆயினும் சிறப்பு வர்த்தகம் மாலை 6-7 மணிக்கு நடக்கும்.


Click it and Unblock the Notifications