நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் காரணத்தினால் பல முன்னணி IT நிறுவனங்களும் பணி நீக்கங்களை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் வந்த செய்தியில் மைக்ரோசாப்ட் AI ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாக செய்திகள் வெளியானது. நேரடியாக பணி நீக்க செயல்முறையில் ஈடுபடாமல் தற்போது நிறுவனங்கள் எடுத்திருக்கும் புதிய யுக்தி தான் "Silent Firing". இந்த பதிவில் சைலன்ட் ஃபயரிங் என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
சைலன்ட் பையரிங் என்றால் என்ன?: பல்வேறு நிறுவனங்களும் பணியாளர்களை வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்குகின்றனர். இதனையே சைலன்ட் ஃபயரிங் என்று கூறுகின்றனர் அதாவது நிறுவனங்கள் நேரடியாக பணி நீக்கம் செயல்முறையில் ஈடுபடாமல் அவர்களுடைய வேலைப்பளுவை அதிகப்படுத்தி வேலைச் சூழலை மிகவும் கடினமாக்குகின்றனர். இதனால் ஊழியர்கள் தாமாகவே வேலையை விட்டு விலகும் நிலை ஏற்படுகிறது.

சில நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் "Quiet quitting" என்ற நடைமுறையை பின்பற்றுகின்றனர். அதாவது இதனை வேலை வாழ்க்கை சமநிலை என்று கூட எடுத்துக் கொள்ளலாம். பணியாளர்கள் தங்களுடைய வேலை பளுவை குறைத்துக் கொண்டு சமநிலையுடன் பணி புரிகின்றனர். ஆனால் சைலன்ட் பையரிங் என்பது வலுக்கட்டாயமாக பணி நீக்க செயல்முறையில் ஈடுபடாமல் மறைமுகமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாகும்.
அமேசான் போன்ற சில நிறுவனங்கள் கடுமையான அலுவலக கொள்கையை அறிமுகப்படுத்தி வருகின்றன. தொடர்ந்து வந்த எதிர்ப்பையும் மீறி ஊழியர்கள் வாரத்திற்கு 5 நாட்கள் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்ற விதியை அமல்படுத்தியுள்ளன.
Prospero.Ai-இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஃபாஸ்ட் கம்பெனி பங்களிப்பாளரான ஜார்ஜ் கைலாஷ் அமேசானின் அலுவலகத்திற்கு திரும்புவதற்கான ரூல்ஸ் சைலன்ட் ஃபயரிங்கின் ஒரு சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இது போன்ற நடைமுறைகள் காரணமாக சுமார் 73 சதவீத ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேற தயாராகி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
MIT-யைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் டேரன் அசெமோக்லு, வரும் பத்தாண்டுகளில் 5% வேலைகள் மட்டுமே AI மூலம் மாற்றப்படும் என்று கணித்துள்ளார். சில நிறுவனங்கள் ஆட்டோமேஷனில் அதிக முதலீடு செய்தாலும், சிலர் அவ்வாறு செய்யாமல் போகலாம் என்று கூறியுள்ளார்.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் காரணமாக பணிநீக்கங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜென் Z தலைமுறையினரின் மத்தியில் இந்த அச்சம் அதிகமாக உள்ளது. இனிவரும் காலங்களில் லேஆப் மற்றும் சைலன்ட் ஃபயரிங் போன்ற பணி நீக்கங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்து வரும் நிலையில், எப்படி தங்களுடைய பணியில் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற பல சாஃப்ட்வேர் இன்ஜினியர்களும் யோசித்து வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications