சென்னை: அண்மை காலமாக இளம் வயதினர் கூட மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நிகழ்வுகளை நாம் காண நேரிடுகிறது. உடற்பயிற்சி செய்யும் போது, வேலை செய்யும் போது, நடனமாடும் போது என இளைஞர்கள் திடீரென சரிந்து விழுந்து உயிரிழக்கும் போக்கு அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
அமைதியான மாரடைப்பு: இப்படி இளைய வயதினருக்கு வர கூடிய மாரடைப்பு எந்த வித அறிகுறியும் இல்லாமல் திடீரென வருகிறது. இதனை தான் மருத்துவர்கள் Silent Heart attack என அழைக்கிறார்கள். அதாவது எந்த வித அறிகுறியும் இல்லாமல் திடீரென ஏற்படும் மாரடைப்பு தான் அமைதியான மாரடைப்பு என அழைக்கப்படுகிறது. டெல்லியை சேர்ந்த இதய நோய் நிபுணரான நிரஞ்சன் ஹையர்மேன் ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்த மாரடைப்பு குறித்து விரிவாக தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மத்தியில் அதிகரிப்பு: இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் இந்த வகையான மாரடைப்புகள் அதிகரித்து இருக்கிறது என அவர் கூறியிருக்கிறார்." நான் நிறைய நோயாளிகளை பார்க்கிறேன், 30 முதல் 40 வயதுகளில் தான் இருக்கிறார்கள். பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் , சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் இருந்தாலும் திடீரென மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என கூறியிருக்கிறார்.
பெண்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்து: உலகில் ஏற்படக்கூடிய மொத்த மாரடைப்புகளில் 22 முதல் 60 சதவீதம் வரையிலான மாரடைப்புகள் இவ்வகையானவை தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பெண்கள் மத்தியிலும், நீரிழிவு நோய் இருப்பவர்கள் மத்தியிலும் சைலண்ட் ஹார்ட் அட்டாக் அதிகமாக இருக்கிறதாம். பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டால் இதயத்தில் பயங்கரமான வலி இருக்கும் ஆனால் சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்பது எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் திடீரென தோன்றக்கூடியது என கூறுகிறார் மருத்துவர் நிரஞ்சன் .
தசைகளை சேதப்படுத்தும்: இதயத்தை சுற்றி இருக்கும் தசைகளை இவை வேகமாக சேதப்படுத்தும் ஆனால் எந்த அறிகுறியும் நமக்கு காட்டாது திடீரென மாரடைப்பு வரும் மருத்துவமனைக்கு சென்று நாம் பரிசோதிக்கும் போது தான் இதயத்தில் ஏற்பட்டிருக்கிற பிரச்சனையே நமக்கு தெரிய வரும் என்கிறார். பெரும்பாலானவர்கள் தங்களுக்கு தோன்றும் சிறிய அறிகுறிகளை கூட அலட்சியப்படுத்துவதே இதற்கு காரணம் என்கிறார்.

அறிகுறிகளை கவனிக்க வேண்டும்: பெரும்பாலும் நாம் மாரடைப்புக்கு முன்பு தோன்றும் அறிகுறிகளை தசை பிடிப்பு, வாயு பிரச்சினை, அஜீரண கோளாறு என நினைத்து அதற்கு மருந்து எடுத்து கொள்வோம். ஆனால் இவை எல்லாம் அமைதியான மாரடைப்பின் அறிகுறிகள் என கூறியுள்ளார். முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் இதய அடைப்பு வருகிறது என கூறினோம், ஆனால் தற்போது பதின்ம வயது பிள்ளைகளுக்கு கூட மாரடைப்பு வருகிறது என தெரிவிக்கிறார்.
சரியாக தூங்க வேண்டும்: நம்முடைய வாழ்க்கை முறையே பல்வேறு அழுத்தங்கள் நிறைந்ததாக மாறிவிட்டது இதற்கு ஒரு காரணம் என மருத்துவர் நிரஞ்சன் தெரிவிக்கிறார். நம் உணவு பழக்கம் மாறியது முக்கிய காரணம் என கூறும் அவர், நீண்ட நேரம் ஜிம்மில் சென்று உடற்பயிற்சி செய்வது கூட மாரடைப்புக்கு காரணமாகிறது என தெரிவிக்கிறார். பலரும் சரியாக தூங்காமல் இருக்கின்றனர், இரவு நேரத்தில் தூங்க வேண்டும் , சராசரியாக நாளொன்றுக்கு 8 மணி நேரம் தூங்க வேண்டும் என அறிவுரை வழங்குகிறார்.
ஜிம் செல்வதற்கு முன் உடல் பரிசோதனை: உடற்பயிற்சிக்காக ஜிம்முக்கு செல்பவர்கள் எடுத்த உடன் தீவிரமான பயிற்சிகளை எடுக்க கூடாது, முறையான உடல் பரிசோதனை செய்த பிறகு தான் ஜிம்மில் உடற்பயிற்சிக்கு செல்ல வேண்டும் , படிப்படியாக தான் பயிற்சிகளை அதிகரிக்க வேண்டும் என அறிவுரை வழங்குகிறார். இந்தியர்களிடம் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது என கூறும் மருத்துவர் நிரஞ்சன், இந்தியர்களின் மரபணுவிலேயே இந்த பிரச்சனை , சிறிய தமனிகள் இருப்பது, நீரிழிவு மற்றும் உடல் கொழுப்பு பிரச்சனைகள் அதிகமாக இருப்பது முக்கிய காரணம் என கூறுகிறார்.
பார்க்க ஆரோக்கியமாக தெரிந்தாலும் ஆபத்து :வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்றாலும் அவருக்கும் அமைதியான மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கிறார். இதயத்தில் ஒரு அசவுகரியம் ஏற்படுவது, உடற்பயிற்சி செய்யும் போது மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது , உடல் சோர்வுடன் இருப்பது, கழுத்து மற்றும் கைகளில் வலி ஏற்படுவது தலை சுற்றல், உணவு ஜீரணமாகாமல் இருப்பது போன்ற ஒரு அசவுகரியம் உள்ளிட்டவற்றை நாம் சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது என கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் உடல்பரிசோதனை: இந்த பிரச்சினைகளுக்கு மக்கள் தாங்களாகவே மருந்து உட்கொள்ள கூடாது என்றும், அடிக்கடி இவை ஏற்படுகிறது என்றால் இதய நோய் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்றும் அறிவுரை வழங்குகிறார். ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை செய்வதை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும் என கூறுகிறார். இசிஜி, கொழுப்புச்சத்து , உயர் ரத்த அழுத்தம், போன்ற பரிசோதனைகளை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்.

பாக்கெட் உணவுகளை உண்ண கூடாது: உங்கள் குடும்பத்தில் ஏற்கனவே யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது, ரத்த அழுத்தம், நீரிழிவு இருக்கிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறுகிறார். உடற்பயிற்சிக்காக ஜிம்முக்கு செல்பவர்கள் அதற்கு முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம் என்கிறார். அதிக கொழுப்பு சத்து, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கிறார்.
மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்: தினம் தோறும் யோகா செய்ய வேண்டும், மன அழுத்தங்களை குறைத்துக் கொள்ள வேண்டும், ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும் என அறிவுரை வழங்குகிறார். இந்தியாவில் மாரடைப்புக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை என்ற ஒரு நிலை வந்திருக்கிறது, சைலன்ட் ஹார்ட் அட்டாக் எந்த அறிகுறியும் காட்டாமல் தான் வரும் ஆனால் அது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் மிக மோசமானதாக இருக்கும் என எச்சரிக்கும் இவர் சில சமயங்களில் உயிரிழப்பு வரை கூட செல்கிறது எனக் கூறுகிறார்.
உடல் சோர்வு இருந்தால் ஆபத்து: நீங்கள் தினமும் 8 மணி நேரம் உறங்குகிறீர்கள் இருந்தாலும் உடல் சோர்வுடனே இருக்கிறது அதீத சோர்வாக உணர்கிறீர்கள் என்றால் மருத்துவ ஆலோசனை பெறுங்கள் என்கிறார். அமைதியான மாரடைப்பு , வழக்கமான மாரடைப்பு போல வலியுடன் வருவது இல்லை, இது சைலன்ட் கில்லர் போல முதலில் இதயத்தை சுற்றியுள்ள தசைகளை சேதப்படுத்தும் அதன் பின்னர் திடீரென வலி ஏற்பட்டு உயிரை பறித்துவிடும் என எச்சரிக்கிறார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications