வருமானவரித்துறை இந்த ஆண்டு வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான தேதியை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்திருக்கிறது. எனவே தனி நபர்களுக்கு இந்த முறை வழக்கத்தை விட கூடுதலாக 45 நாட்கள் வருமான வரி கணக்கு செய்வதற்கான அவகாசமாக வழங்கப்பட்டிருக்கிறது.
2024 - 25 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கினை தாக்கல் செய்பவர்களுக்கு வருமான வரித்துறை ஒரு புதிய சேவையை கொண்டு வந்திருக்கிறது. Taxassist என்ற பெயரில் வருமான வரித்துறை இந்த சேவையை அறிமுகம் செய்திருக்கிறது . வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யும் நபர்கள் தங்களுக்கான அனைத்து சந்தேகங்களையும் இதன் இந்த வசதியின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என வருமான வரித்துறை தெரிவித்து இருக்கிறது.

வருமானவரி கணக்கு தொடர்பான உங்களுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் Taxassist உதவி செய்யும் என என தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இந்திய வருமான வரித்துறை , வருமான வரி சம்பந்தப்பட்ட அரசின் தகவல்களும் உங்களை வந்து சேரும் , முக்கியமான தேதிகள் குறித்து இது உங்களுக்கு தொடர்ந்து நினைவூட்டி கொண்டே இருக்கும் என தெரிவித்திருக்கிறது.
இந்த Taxassist வசதி என்பது உங்களுக்கு வழிகாட்டுவதற்கும் உங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் வருமான வரி கணக்கு தாக்கலை எளிமையாக்குவதற்கும் நாங்கள் எடுத்திருக்கும் ஒரு முயற்சி என வருமான வரித்துறை அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்கள் எந்தெந்த பிரிவுகளில் கவனம் செலுத்த வேண்டும், எந்த விவரங்களை மிகச் சரியாக தாக்கல் செய்ய வேண்டும் , என்னென்ன ஆவணங்களை உடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அனைத்து எச்சரிக்கைகளையும் இந்த வசதி வழங்கும் என வருமானவரித்துறை வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது.
உதாரணமாக ஒரு தனிநபர் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் பிரிவில் வரி விலக்கு கோருகிறார் என்றால் அவர் அதில் தவறான கணக்கையோ அல்லது ரசீதையோ உள்ளீடு செய்தால் உடனே இந்த Taxassist நீங்கள் செய்த உள்ளீடு தவறானது இதனை நீங்கள் மீண்டும் சரிப்படுத்தி அப்டேட்டான வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுரைகளை வழங்குமாம். வருவான வரி கணக்கு செய்யும்போது என்னென்ன தவறுகளை செய்கிறோமோ அந்த தவறுகளை எல்லாம் இது சுட்டிக்காட்டி அவற்றை சரி படுத்துவதற்கு உதவும் என வருமானவரித்துறை அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
இது வழங்கும் எச்சரிக்கைகளை கவனிக்க தவறுபவர்கள் பின்னாலில் அவர்களின் வருமான வரி கணக்கு தவறாக தாக்கல் செய்யப்பட்டு அதற்கான அபராதம் உள்ளிட்டவற்றை செலுத்திட நேரலாம் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications