இன்றைய இளம் தலைமுறையினர், குறிப்பாக மில்லினியல்கள் மற்றும் ஜெனரல் இசட், அனுபவங்களுக்குச் செலவு செய்வதற்கும் எதிர்காலத்திற்காகச் சேமிப்பதற்கும் இடையில் ஒரு பெரிய மனப் போராட்டத்தில் உள்ளனர். கோல்ட்ப்ளே இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமா? அல்லது அந்தப் பணத்தை முதலீடு செய்ய வேண்டுமா? என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுகிறது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு, தீவிரமான முடிவெடுப்பதில் இல்லை, ஆனால் சரியான சமநிலையில் இருப்பதாக எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராதிகா குப்தா நம்புகிறார்.
தனது X பக்கத்தில் ராதிகா குப்தா, எங்கு முதலீடு செய்யத் தொடங்குவது என்று தெரியவில்லை என்று சொல்லும் பல இளைஞர்களை நான் சந்திக்கிறேன். எவ்வளவு முதலீடு செய்வது. எப்படித் தொடங்குவது? என்று குறிப்பிட்டு, இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் நிதி சார்ந்த இக்கட்டான நிலையை எடுத்துரைத்தார்.

10-30-50' முதலீட்டுச் சூத்திரம்: ராதிகா குப்தா, இந்த சிக்கலுக்கு ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த தீர்வை முன்வைக்கிறார். அதுதான் '10-30-50' முதலீட்டுச் சூத்திரம்.
உங்கள் 20களில்: உங்கள் வருமானத்தில் 10% சேமியுங்கள். நீங்கள் 1% மட்டுமே சேமிக்க முடிந்தாலும், பழக்கவழக்கங்கள் அளவுகளை விட முக்கியம் என்று அவர் வலியுறுத்துகிறார். இந்த வயதில், முதலீட்டுப் பழக்கத்தை உருவாக்குவதே முக்கியம்.
உங்கள் 30களில்: உங்கள் வருமானத்தில் 30% சேமியுங்கள். இந்த வயதில், வாழ்க்கை இலக்குகள் தீவிரமாகின்றன. வீடு, வாகனம், திருமணம் போன்ற இலக்குகளுக்கு இந்த சேமிப்பு உதவும்.
உங்கள் 40களில்: உங்கள் வருமானத்தில் 50% சேமியுங்கள். இது உங்கள் உச்ச வருமானம் ஈட்டும் காலம். இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, உங்கள் நிதி எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மூலத்திலேயே சேமிப்பு (Savings Deducted at Source - SDS): பல இளைஞர்கள், 10% சேமிப்பது கூட கடினம் என்று கூறும்போது, ராதிகா குப்தா ஒரு புத்திசாலித்தனமான கருத்தை முன்வைக்கிறார். வரி மூலத்திலேயே கழிக்கப்படுவது போல, உங்கள் சேமிப்பிலும் ஏன் அதையே செய்யக்கூடாது?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
இந்த அணுகுமுறையை அவர் 'மூலத்திலேயே சேமிப்பு' (SDS) என்று அழைக்கிறார். இதன் யோசனை மிகவும் எளிமையானது: உங்கள் சேமிப்பை தானியக்கமாக்குங்கள். உங்கள் சம்பளம் உங்கள் கணக்கில் வருவதற்கு முன்பே, முதலீடுகளுக்கான பணம் தானாகவே கழிக்கப்படும் வகையில் எஸ்ஐபி (SIP), தொடர் வைப்புத்தொகைகள் அல்லது நிலையான வைப்புத்தொகைகளை அமைக்குமாறு அவர் பரிந்துரைக்கிறார்.
இந்த அணுகுமுறை, மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தங்கள் நிகழ்காலத்தையும் அனுபவிக்க உதவுகிறது. நீங்கள் இரண்டையும் செய்யலாம் - விலை உயர்ந்த பையைக் வாங்குவதும், அதே நேரத்தில் ஒரு புதிய தொடக்கத்திற்கான பணத்தைச் சேமிப்பதும். ஜெனரல் இசட்-க்கு, இதுதான் உண்மையான நிதி சுதந்திரம்," என்று அவர் கூறினார்.
ராதிகா குப்தாவின் இந்த எளிய சூத்திரம், நிதி மேலாண்மை என்பது ஒரு கடினமான வேலை அல்ல, மாறாக இது ஒரு ஸ்மார்ட் ஆன வழி என்பதை உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications