ஒவ்வொரு மிடில் கிளாஸ் மக்களுக்கும் தாங்கள் லட்சாதிபதிகள் அல்லது கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கும்.
அந்த கனவை நிறைவேற்ற வேண்டுமென்றால் ஒரு மிடில்கிளாஸ் நபர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் ஒரு நாள் கண்டிப்பாக கோடீஸ்வரர் ஆகிவிடலாம்.
15X15X15 என்ற திட்டம் தான் அதற்கு உதவியாக இருக்கும் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். இந்த திட்டம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
சேமிப்பு
பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், வட்டி விகித உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் மிடில்கிளாஸ் மக்களால் சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இருப்பினும் சேமிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் முக்கிய செலவுகளை மட்டும் செய்துவிட்டு அவசியமற்ற செலவுகளை நீக்கி விட்டால் கண்டிப்பாக குறைந்த வருமானம் உள்ளவர்கள் கூட சேமிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடீஸ்வரர் ஆவது எப்படி?
ஒருவர் தனது வருமானத்தில் 30 சதவீதம் சேமிக்க வேண்டும் என்பதே நிதி ஆலோசகர்களின் அறிவுரையாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் சம்பளம் கிடைத்தவுடன் 30 சதவீதத்தை சேமிப்பு என்ற செலவிற்கு ஒதுக்க வேண்டும் என்றும் அவ்வாறு ஒதுக்கினால் கண்டிப்பாக அந்த நபர் வெகுவிரைவில் கோடீஸ்வரர் ஆகிவிடுவார் என்பதுதான் நிதி ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.
15X15X15 திட்டம்
இந்த நிலையில் மிடில் கிளாஸ் மக்களும் கோடீஸ்வரர் ஆவதற்கு உள்ள திட்டம்தான் 15X15X15. இது மியூச்சுவல் பண்டில் பின்பற்றப்படுகிறது. குறைந்த முதலீட்டில் கோடீஸ்வரர் ஆகுவதற்கு இதுவே மிகச்சிறந்த திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. மியூச்சுவல் ஃபண்ட்டை பொருத்தவரை சராசரியாக 15 சதவீத வருவாய் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் 15 சதவீத வருவாய் தரும் திட்டத்தை தேர்வு செய்து மாதம் 15,000 ரூபாய் சேமித்தால் 15 ஆண்டுகளில் அவருக்கு ஒரு கோடி கிடைக்கும். இதுதான் 15X15X15 என்ற திட்டமாகும்.
ரூ.1 கோடி
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்டகால அடிப்படையில் ஆண்டுக்கு 15 சதவீத வருமானத்தை கொடுக்கும் பல்வேறு திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ளன. எனவே 15% வருமானம் கொடுக்கும் நீண்டகாலத் திட்டம் எது என்பதை உங்கள் நிதி ஆலோசகரிடம் கலந்து ஆலோசித்து மாதம் 15,000 ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் கண்டிப்பாக உங்கள் கையில் ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
முதலீடும் வட்டியும்
ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்டில் வட்டி கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பதும், அந்த வட்டியும் அசலும் சேர்ந்து முதலீடு அதிகரித்து கொண்டே இருக்கும் என்பதும், அதனால்தான் ஒவ்வொரு மாதமும் உங்களது அசல் தொகை மற்றும் வட்டி தொகை ஆகியவை குட்டி போட்டுக்கொண்டே உங்கள் முதலீட்டை பெருக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றே நீங்கள் 15 சதவீத வட்டி திட்டத்தை தேர்வு செய்து மாதம் 15,000 ரூபாய் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் 2037ஆம் ஆண்டு நீங்களும் கோடீஸ்வரர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications