மும்பை: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் வீரன் மெர்சண்டின் மகள் ராதிகா மெர்சண்ட்க்கும் இடையே திருமணம் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரின் செல்ல மகன் ஆனந்த் அம்பானி என்பதால் நாடே பிரமிக்கத்தக்க வகையில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே முகேஷ் அம்பானியின் குடும்பம் ஆனந்த் அம்பானியின் திருமணத்தையொட்டி இரண்டு திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளை மிக ஆடம்பரமான முறையில் நடத்தி முடித்துள்ளது.

இந்தியாவின் பெரும் பணக்கார குடும்பத்தில் மகனாகப் பிறந்த ஆனந்த் அம்பானியின் கல்வித் தகுதி என்னென்ன என்பது குறித்து நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி குழுமத்தின் வாரிசுகளில் ஒருவரான ஆனந்த் அம்பானிக்கு, ஆகாஷ் அம்பானி என்ற மூத்த சகோதரனும் ஈஷா அம்பானி என்ற சகோதரியும் இருக்கின்றனர்.
ஆனந்த் அம்பானி மும்பையில் இருக்கக்கூடிய திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். இதனை அடுத்து அமெரிக்காவின் ரோடு ஐலேண்ட் பகுதியில் இருக்கக்கூடிய பிரவுன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பினை படிப்பதற்காக சென்றார். அங்கே அவர் தொழில் மேலாண்மை பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார.
இதே பல்கலைக்கழகத்தில் தான் இவரது அண்ணன் ஆகாஷ் அம்பானி பொருளாதாரப் பிரிவில் இளங்கலை படிப்பை முடித்திருக்கிறார். தற்போதைய சூழலில் ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் நியூ எனர்ஜி நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பு வகுத்து வருகிறார். ரிலையன்ஸ் குழுமத்தின் வாரிய இயக்குனர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருகிறார்.
ஆனந்த் அம்பானியின் காதல் மனைவியாகப் போகும் ராதிகா மெர்சண்ட் மும்பையில் உள்ள டிடி சோமானி இன்டர்நேஷனல் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். இதனை அடுத்து மேற்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு சென்ற ராதிகா மெர்சண்ட் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.
இதனை அடுத்து இந்தியா திரும்பிய அவர் தனது தந்தையின் என்கோர் ஹெல்த் கேர் நிறுவனத்தின் வாரிய குழு உறுப்பினராக இணைந்து செயல்பட்டு வருகிறார்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் இருவருமே தங்களது மேற்படிப்பினை அமெரிக்காவில் முடித்தவர்கள். இதனை குறிப்பிடும் வகையில் தான் அவர்களுடைய திருமணத்திற்கு முந்தைய இரண்டு நிகழ்வுகளிலும் பிரவுன் பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
ஆனந்த் மற்றும் ராதிகாவிற்கு ஜூலை 12ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் திருமணம் நடைபெற இருக்கிறது. 13ஆம் தேதி சுப ஆசிர்வாத நிகவும், 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. மூன்று நாட்களுக்கு திருமண கொண்டாட்டங்கள் களைகட்ட இருக்கின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications