மியூச்சுவல் ஃபண்ட் என்பது இந்தியா மட்டுமின்றி உலக அளவில் தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாத கணக்கின்படி உலக அளவில் 76.27 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மியூச்சுவல் ஃபண்டில் மட்டும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் முதல்முறையாக மியூச்சுவல் ஃபண்ட் எப்போது தொடங்கப்பட்டது? இந்தியாவின் முதல் மியூச்சுவல் ஃபண்ட் எது என்பதை தற்போது பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட்
உலக அளவில் மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒன்று திரட்டப் பட்ட முதலீடுகள் என்ற வகையில் 1924-ஆம் ஆண்டு முதலீட்டாளர்களின் அறக்கட்டளை உருவாக்கப்பட்டதில் இருந்து தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. பரந்த நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இருந்தது என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் பிரபலமானது.
வியக்கத்தக்க வளர்ச்சி
ஒரு குறிப்பிட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகளில் வியக்கத்தக்க வளர்ச்சி காரணமாக முதலீட்டாளர்கள் உலக அளவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தனர். ஒழுங்கு முறையை சரியாக கடைபிடித்ததால் முதலீட்டாளரின் முதலீட்டுக்கு பாதுகாப்பு மற்றும் நிதி நிர்வாகத் துறையின் கண்காணிப்பு ஆகியவை முதலீட்டின் பாதுகாப்பை உறுதி செய்தது.
அதிக லாபம்
மியூச்சுவல் ஃபண்டில் பல்வேறு புதிய புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பட்டதால் நீண்ட கால முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட்
இந்தியாவை பொருத்தவரை 1963ஆம் ஆண்டில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா நிறுவப்பட்ட பின்தான் மியூச்சுவல் ஃபண்ட் என்ற முறை தொடங்கப்பட்டது. இந்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா அமைக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் மியூச்சுவல் ஃபண்ட்
கடந்த 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் 'யூனிட் திட்டம் 64' என்ற முதல் மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதான் இந்தியாவின் முதல் மியூச்சுவல் ஃபண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத்துறை வங்கிகள்
1987 ஆம் ஆண்டு மியூச்சுவல் ஃபண்ட் தொடங்குவதற்கு பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.அதன்பின்னர் 1993ஆம் ஆண்டில் உலக தாராளமயமாக்கம் ஏற்பட்டதை அடுத்து தனியார் துறையும் பன்னாட்டு அமைப்புகளும் மியூச்சுவல் ஃபண்டுகளை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பொதுமக்கள் மத்தியில் பிரபலம்
தற்போது மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு முறை என்பது மிக வேகமாக விரிவடைந்து வருகிறது என்பதும் நிபுணத்துவம் அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தான் பொதுமக்கள் மத்தியில் மிக வேகமாக மியூச்சுவல் ஃபண்ட் பிரபலமாகி வருகிறது.
ரூ.37.7 லட்சம் கோடி
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி கணக்கின்படி இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு ரூ.37.7 லட்சம் கோடியைத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications